Barathi Kannamma Serial: அவசரமா கொழந்த வேணுமாம் அஞ்சலிக்கு.. இது என்ன ஸ்விக்கியா??!
சென்னை: விஜய் டிவியின் கண்ணம்மா சீரியலில் பொண்டாட்டி அஞ்சலிக்கு நல்ல மனசு இல்லேன்னு சொல்லி, அவளை திருத்துவதுதான் முதல் வேலை என்று புறப்பட்டு இருக்கான் அகில்.
அகில் கட்டிலில் படுத்து இருக்கும்போதுதான் அஞ்சலி வந்து.. அகில் நாம் அவசரமா ஒரு கொழந்த பெத்துக்கணும் என்று ஆன்லைனில் ஆர்டர் பண்ணுவது போல கேட்கிறாள்.
இப்படி அவசரமா கொழந்தை வேணும்னு கேட்டா.. அது என்ன பாக்கெட்டில் இருக்கா இல்லை பக்கெட்டில்தான் இருக்கா...இந்த காலத்திலும் இப்படி ஒரு கிறுக்கு புடிச்ச புள்ளையா?

கடுப்பில் அஞ்சலி
அம்மா.. கடுப்பேத்தாதே.. என்ன விஷயம்னு சொல்லு என்று தான் அம்மாவிடம் எரிஞ்சு விழறா அஞ்சலி. ஏன்டி இப்படி கோச்சுக்கறே...சொல்ல வந்ததை சொல்ல வேணாமான்னு அம்மா மறுமுனை போனில். நானே ஏகப்பட்ட கடுப்புல இருக்கேன்...கண்ணம்மா கர்ப்பமா இருக்கான்னு அவளை அத்தை தலையில் தூக்கி வச்சு கொண்டாடிகிட்டு இருக்காங்கன்னு கடுப்பா பேசறா.

நீயும் பெத்துகோடி
அஞ்சலி நான் பாட்டி பேசறேன்.. இதுக்கு ஏண்டி கடுப்புல இருக்கே.. நீயும் பெத்துக்க வேண்டியதுதானேன்னு பாட்டி உசுப்பேத்தறாங்க.பாட்டி தெரிஞ்சுதான் பேசுறியா.. இந்த அகிலை எப்படி சமாளிக்கறதுன்னு கேட்கறா அஞ்சலி. ஏய்.. உன் புருஷன் தானேடி.. எப்படியாவது சமாளின்னு பாட்டி சொல்லிட்டு போனை வச்சுட்டாங்க.

முக்கியம் அகில்
அகில் படுக்கையில் போனை நோண்டிக்கொண்டு படுத்து இருக்க... அகில் உன்கிட்டே முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்றா. சொல்லு வெட்டியாத்தான் இருக்கேன்னு சொல்றான் அகில். நாம அவசரமா ஒரு கொழந்த பெத்துக்கனுன்னு அஞ்சலி சொன்னதும் தூக்கி வாரிப்போட்டது போல எழுந்து உட்கார்ந்து விட்டான் அகில்.

பாக்கெட்டிலா இருக்கு
என்ன அஞ்சலி.. இப்படி அவசரமா கொழந்தை வேணும்னு கேட்டா நான் என்ன பாக்கெட்டிலா வச்சு இருக்கேன்.. இல்லை நீ ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி வாங்கிக்க முடியுமான்னு கேட்கறான். இல்லை அகில் எனக்கும் ஆசையா இருக்குன்னு சொல்ல, உனக்கு ஆசை இருக்கும் அஞ்சலி.. இது நடக்கணும்னா உன் மேல எனக்கு ஆசை வரணும் இல்லேன்னு கேட்டு விஷயத்தை பொசுக்கென்று ஆகிவிட்டான் அகில்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications