அண்ணா சீரியல்: சண்முகத்தால் சக்சஸ் ஆன வைகுண்டம் பிளான்.. பரணி எடுத்த முடிவு.. செம திருப்பம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் டிசம்பர் 19ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு அண்ணா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி சண்முகத்தை தர்மகர்த்தா தேர்தலில் நிற்கக்கூடாது என்று மிரட்டிய நிலையில் பரணி அவன் நின்று ஜெயிப்பான் என்று சவால் விட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் வைகுண்டம் சண்முகத்தையும் பரணியையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும், அவர்கள் பிரிந்து விடக்கூடாது என்பதற்காக மந்திரவாதி ஒருவரை சந்திக்க போயிருக்கிறார். அப்போது அந்த மந்திரவாதி வைகுண்டத்தை பார்த்ததுமே நீ எதுக்காக வந்திருக்கேன்னு எனக்கு தெரியும். உன் பிள்ளையும் மருமகளையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று தானே வந்திருக்க என்று கேட்க அதைக் கேட்டு வைகுண்டம் ஆச்சரியப்பட்டு நிற்கிறார்.

அதோடு அந்த மந்திரவாதி நீ நினைக்கிறது கண்டிப்பா நடக்கும் என்று சொல்லி கயிறு ஒன்றை கொடுத்து, இதை நான்கு நாட்களுக்குள் அவங்க ரெண்டு பேரும் கையிலயும் கட்டி விடு என்று சொல்லி அனுப்புகிறார். அதை வாங்கிய வைகுண்டம் தன்னுடைய மகள்களிடம் கொடுத்து இதை எப்படியாவது பரணி கையில் கட்டிடுங்க அப்போதான் உங்க அண்ணனும் அவளும் பிரியாமல் இருப்பாங்க என்று சொல்லகிறார்.
அதற்கு ரத்னா பரணிக்கு இது மேல எல்லாம் நம்பிக்கையே கிடையாது. அவ கட்ட மாட்டா என்று சொல்கிறார். ஆனாலும் வைகுண்டம் எப்படியாவது கட்ட வையுங்க என்று சொல்ல அதற்கு அனைவரும் சரி என்று சொல்கின்றனர். பிறகு பரணியிடம் கயிறை காட்டி இது சாமி கயிறு இதை கட்டிக் கொள்ளு என்று சொல்ல அதற்கு பரணி இதெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் கட்ட மாட்டேன் என்று சொல்கிறார்.

அதற்கு சண்முகத்தின் தங்கைகள் விடாமல் இங்க பாரு எங்க கைல எல்லாரும் கட்டி இருக்கோம் என்று காட்ட பிறகு பரணி சரி இப்ப கட்டுகிறேன் நைட் கழட்டி வச்சுக்கலாம் என்று மனசுக்குள்ளே சொல்லிக்கொண்டு கட்டிக் கொள்ள எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். அதை தொடர்ந்து நைட்டு எல்லாரும் ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சண்முகம் பரணி கையில் கட்டி இருக்கும் கயிறை பார்த்துவிட்டு உனக்கு இது நல்லாவே இல்ல கழட்டி விடு என்று சொல்கிறார்.

அதற்கு பரணி நானே நைட்டு கழட்டிவிடலாம் என்று தான் இருந்தேன். ஆனால் நீ இப்படி சொன்ன பிறகு எப்போதும் இந்த கயிறு என் கையில் தான் இருக்கும் என்று பதில் கொடுக்க அதைக் கேட்டு வைகுண்டம் சந்தோஷப்படுகிறார். இதுதான் பழம் நழுவி பாலில் விழுவது என்று வைகுண்டம் மனதிற்குள்ளே சிரிக்கிறார் இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications