அண்ணா சீரியல்: தாயத்து செய்த மந்திரம்.. சண்முகத்திற்கு வரும் சந்தேகம்.. மனம் மாறும் பரணி
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் டிசம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பரணி கையில் இருந்த மந்திர கயிறை கழட்ட சொல்ல பரணி அது என் கையில் தான் இருக்கும் என பதிலடி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பரணி ஷண்முகம் இருவரும் ரூமில் தூங்கி கொண்டிருக்கும் போது திடீரென மந்திர கயிறில் இருந்து ஒரு மாயசக்தி வெளி வர அதன் பிறகு பரணிக்கு தூக்கம் தெளிந்து விட சண்முகம் தூங்குவதை பார்த்த அவளுக்கு தனக்காக ஷண்முகம் செய்த விஷயங்கள் அனைத்தும் நினைவிற்கு வருகிறது. இதனையடுத்து அவன் போர்வை இல்லாமல் தூங்குவதை கவனித்து போத்தி விட ஷண்முகம் நான் ஒன்னும் பண்ணலையே என்ன எதுக்கு எழுப்பற என்று பதற பரணி நீ போர்வையில்லாமல் தூங்க மாட்டியே அதான் போத்தி விட வந்தேன் என்று சொல்கிறாள்.

ஷண்முகம் இவ இப்படியெல்லாம் பண்ண மாட்டாளே என்ற குழப்பத்துடன் சரி குடு நானே போதிக்கறேன் என்று போர்வையை கேட்க ஏன் நான் போத்தி விட கூடாதா என்று அவளே போத்தி விட ஷண்முகம் இது கனவா நினவா என்று தெரியாமல் குழம்புகிறான். அதை தொடர்ந்து மறுநாள் காலையில் பரணி கோலம் போட்டு கொண்டிருக்க வைகுண்டம் கையில் தாயத்து இருப்பதை பார்த்து சந்தோசப்படுகிறார்.

ஷண்முகம் வெளியே வர வைகுண்டம் போய் என் மருமகளுக்கு குடை பிடி என்று சொல்ல வெயில் தானே காயுது அதுக்கு எதுக்கு குடை பிடிக்கணும் என்று சொல்ல வைகுண்டம் திட்டி அனுப்ப ஷண்முகம் குடை பிடிக்க அதை பார்த்த முப்பிடாதி போலீஸ் புருஷன் பொண்டாட்டினா இப்படி இருக்கனும் என பாராட்டி செல்கிறார். பிறகு பரணி சண்முகத்தின் கன்னத்தில் கலர் கோலமாவை பூசிவிட்டு வருகிறாள்.

அதோடு இல்லாமல் பரணி ரெண்டு புடவையை எடுத்து வந்து ஷண்முகத்திடம் எதை கட்டிக்கட்டும் என்று கேட்க அவன் இன்னும் குழப்பமடைந்து ஒரு புடவையை தேர்வு செய்ய பரணியும் அதை கட்டி வர இதை பார்த்து எல்லாரும் ஆச்சரியப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications