அண்ணா சீரியல்: சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் தரும் பரணி.. முத்துபாண்டியால் கைதாகும் சௌந்தரபாண்டி?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் டிசம்பர் 22ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வைகுண்டம் சௌந்தரபாண்டியிடம் என் பையன் தேர்தலில் நின்று தர்மகர்த்தாவாக ஜெயிப்பான் என்று சவால் விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, வீட்டிற்கு வந்த வைகுண்டம் உன் அம்மாவை பத்தி தப்பா பேசுன அவன் கர்வத்தை அடக்கணும், நீ தர்மகர்த்தாவாக ஜெயித்து காட்டணும், பரணிக்கு நல்ல புருஷனாவும் வாழ்ந்து காட்டணும் என்று சொல்ல ஷண்முகம் உங்க ஆசையை நான் நிறைவேற்றுவேன் என்று வாக்கு கொடுக்கிறான்.
அதன் பிறகு கிளினிக்கில் இருந்து வீட்டிற்கு வரும் பரணி இசக்கியிடம் இன்னைக்கு நான் சமைக்கிறேன் என்று சொல்லி விட்டு சமையலுக்கான ஏற்பாடுகளை செய்கிறாள், ஷண்முகத்திற்கு போன் போட்டு இன்னைக்கு நான் தான் சமைக்க போறேன், எல்லாருக்கும் ஐஸ் கிரீம் வாங்கிட்டு வந்துடுங்க என்று அன்போடு பேச ஷண்முகம் சந்தோஷப்படுகிறான்.

பரணி ஒரு 20 முட்டைக்கு வேக வைக்க தங்கைகள் எல்லாரும் எதுக்கு இவ்வளவு முட்டை என யோசிக்கின்றனர். பிறகு ஷண்முகம் வந்ததும் எல்லாரும் சாப்பிட உட்கார பரணி சண்முகத்தை எழுப்பி இந்த இலையில் உட்காருங்க என மாற்றி உட்கார வைக்கிறாள். எல்லாருக்கும் அரை முட்டை மட்டுமே வைக்கப்பட்டு இருக்க ஷண்முகத்தின் சாப்பாட்டுக்குள் 10 முட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு இருக்க அதை பார்த்து எல்லாரும் பரணியையும் ஷண்முகத்தையும் கலாய்க்கின்றனர்.
மறுபக்கம் தூங்கி கொண்டிருக்கும் சௌந்தரபாண்டி முத்துபாண்டியே தன்னை கைது செய்வது போல கனவு கண்டு அதிர்ச்சி அடைகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்பதை பார்ப்போம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications