அன்னை இல்லத்தில் இப்படியொரு சம்பவமா? சிவாஜி கணேசனின் கரைந்த சொத்துக்கள்.. அசரடித்த எம்ஜிஆரின் பிளான்
சென்னை: சமீபத்தில் Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த டாக்டர் காந்தராஜ், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தன.. கலவரம் நடந்து திமுக ஆட்சி கலைந்தபோது, முதல்வராக ஜெயலலிதா வந்திருக்க வேண்டியது, சிவாஜியால்தான் தடுக்கப்பட்டுவிட்டது.. 20 எம்எல்ஏக்களை சிவாஜி தன்னுடன் அழைத்து சென்றுவிட்டதை அதிமுகவே எதிர்பார்க்கவில்லை.. இதனால் ஜெயலலிதாவால் அப்போது முதல்வராக முடியவில்லை என்றெல்லாம் கூறியிருந்தார். இந்நிலையில், மீண்டும் நடிகர் திலகம், ஜெயலலிதா, எம்ஜிஆர் குறித்தெல்லாம் தன்னுடைய பேட்டியில் விரிவாக பேசியிருக்கிறார்.
டாக்டர் காந்தராஜ், Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "சிவாஜி கணேசனிடம், சின்ன அண்ணாமலை என்பவர் இருந்தார்.. அவர்தான் அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற தலைவராக இருந்தார்..

அவர் ஒரு அரசியல்வாதி ஆவார்.. மூத்த தலைவர் ம.பொ.சியிடம் இருந்தவர்.. பிறகு, சிவாஜியை கட்சி ஆரம்பிக்க சொல்லி தூண்டிவிட்டதே இவர்தான்..
பிளான் செய்து வந்த எம்ஜிஆர்
ஆரம்ப காலங்களில் பிரச்சார நாடகங்களில் கலைஞருடன் சேர்ந்து அவருடன் நடித்தார்.. நாடகங்களில் அண்ணாவுடன் சேர்ந்து நடித்தார் சிவாஜி.. ஆனால் நாடகங்கள் இல்லாத நாட்களில், அண்ணாவின் திராவிட நாடு பத்திரிகையின் பைண்டிங் வேலையை செய்தார்.. இதற்காக திராவிட நாடு பத்திரிகை அலுவலகத்துக்கு சென்றார் சிவாஜி ணேசன். இப்படி திராவிட இயக்கத்திலேயே வளர்ந்தவர் சிவாஜி..
அப்படியிருந்த சிவாஜியிடம், எம்ஜிஆர் புது கட்சி ஆரம்பித்துவிட்டதாக தூண்டிவிட்டு அவரை கட்சியை துவக்க வைத்தனர். ஆனால், சினிமாவில் எத்தனையோ புகழை சிவாஜி கணேசன் வைத்து கொண்டு, கட்சிக்காரரை அறிமுகப்படுத்தி கொண்டு, அவர் தொடர்ந்து செல்லவில்லை.. முக்கியமாக, அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவாஜி கட்சியை ஆரம்பிக்கவில்லை..
ஆனால் எம்ஜிஆர் எல்லாவற்றையும் முன்கூட்டியே திட்டமிட்டார்.. தன்னுடைய படங்கள் ஓடுவதற்கு கட்சியையும் பயன்படுத்தி கொண்டார்.. டைட்டில்களில் கருப்பு சிவப்பு கொடி காட்டப்பட்டது.
அசிங்கப்படுத்தப்பட்ட சொத்து
விவசாயி படத்தில் திமுக கொடி, அண்ணாதுரையை காட்டினார்.. பெற்றால்தான் பிள்ளையா படத்திலும் மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல என்று பாடினார்.. ஆனால், சிவாஜி அரசியல் வாழ்க்கைக்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை..
அதேபோல மக்களும் அவரை அரசியலில் எதிர்பார்க்கவில்லை.. வெறும் நடிகராகவே அவரை பார்க்க விரும்பினார்களே தவிர, அரசியல்வாதியாக பார்க்க விரும்பல.
அன்று வேலூரில் நடந்த பொதுக்குழு கூட்டத்துல என்ன நடந்தது என்றே இதுவரை தெரியாது.. அதற்கு பிறகுதான், ஈவிகேஎஸ் சம்பத் கட்சியை விட்டு வெளியேறினார். சிவாஜியும் அப்படித்தான் வெளியேறினார்.. இன்னும் சொல்லப்போனால் சிவாஜி மீது தனிப்பட்ட தாக்குதலே நடந்தது. அவமானத்துடன், மனவேதனையுடன் வெளியே போனார்.
பிறகு சிவாஜி படத்தை போஸ்டரில் ஒட்டி, யார் கொடுத்த சொத்து? எவர் கொடுத்த வாழ்வு? என்று தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி அசிங்கப்படுத்தினார் கண்ணதாசன். ஆனால் கண்ணதாசன் காரண காரியத்துடன் எதையும் செய்வதில்லை.. உணர்ச்சிவசப்பட்டு இப்படி ஏதாவது செய்துவிடுவார். பிறகு சிவாஜியிடமே இணைந்து குழைந்ததும் அவரேதான்.
அன்னை இல்லம் வீடு
சிவாஜியிடம் அன்று 20 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருந்தனர்.. இதை வைத்தே ஜெயலலிதாவை ஆட்சி அமைக்காமல் தடுத்தவர் சிவாஜி கணேசன்.
அந்தசமயத்தில், என் மூத்த அண்ணன் ஜெயசீலனுடன் அன்னை இல்லம் வீட்டிற்கு நானும் சென்றேன்.. என்னுடைய இளைய அண்ணன் ராஜாராம் ஜானகி அணியில் இருந்தார். அவருக்கும் மூத்தவரான ஜெயசீலன் அண்ணன், சிவாஜிக்கு மிகவும் நெருக்கம்.
மோசமாக திட்டிய சிவாஜி
அன்றையதினம் நாங்கள் சென்றபோது, வீட்டின் வரவேற்பறையில் தீர்த்தகிரி கவுண்டர் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் உட்கார்ந்திருந்தனர்.. அப்போது கையில் அடிபட்டு, சிவாஜி கட்டுப் போட்டிருந்தார்.. அதை விசாரிப்பதற்காக சென்றோம்..
நான்தான் ராஜாராமை ஜெயலலிதாவிடம் கொண்டுபோய் சேர்த்தது என்று தவறாக நினைத்து கொண்டு, என்னை மிகவும் மோசமாக திட்டினார் சிவாஜி,.. யார் அரசியலுக்கு வருவதென்று பொறுப்பே கிடையாதா? ஜெயலலிதாவுடன் எதுக்கு ராஜாராம் சேரணும்? முதல்ல அங்கிருந்து வெளியே வரச்சொல்லு" என்றும் என்னிடம் கோபமாக சொன்னார் சிவாஜி..
கரைந்த சொத்துக்கள்
கடலில் கப்பலை இறக்கிவிட்டாலே, அது ஓடாவிட்டாலும்கூட, அடுத்த செகண்டே செலவுகள் வந்துவிடும். அப்படித்தான் சிவாஜி ஐயாவுக்கும் நேர்ந்தது. தேர்தலிலும் நின்றார்.. தஞ்சாவூரில் டெபாசிட் வாங்கினதே பெரிய விஷயமா போச்சு..
உடனே சிவாஜியின் பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து "நீங்கதான் சம்பாதிக்கிறீங்க, நீங்களே அதை அழிக்காதீங்க, உங்க பிள்ளைகளை நீங்களே பிச்சை எடுக்கும்படி செய்துவிடாதீங்க" என்று சொன்னார்கள்.. அதற்கு பிறகுதான், கட்சியை அவர் மூடினார்.. அதுக்குள்ளே அவரது சொத்துக்கள் நிறைய போய்விட்டது. தஞ்சையில் சாந்தி உள்ளிட்ட 2 தியேட்டர்கள், டிஎல்ப் பில் உள்ள சொத்துக்கள் எல்லாம் போய்விட்டன" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications