யாகவா முனிவர் விற்ற தண்ணீர்.. அன்னபூரணி மார்க்கெட்டிங் புராடக்ட்.. பின்னணியில் யார்? பிரபலம் நறுக்
சென்னை: அன்னபூரணி போன்றவர்களை கண்காணிப்பில் அரசு வைக்க வேண்டும். அன்னபூரணி அரசு அம்மா என்பவர் மார்க்கெட்டிங் புராடக்ட்.. ஆனால் இதை மார்க்கெட்டிங் செய்வது யார்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா.
தன்னை தானே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் பிரபல பெண் சாமியார் அன்னபூரணியின் 3வது திருமணம் திருவண்ணாமலையில் நடந்துள்ளது. ஆன்மீகத்துக்காகவே தன்னை அர்ப்பணித்த ரோஹித் என்பவரை அன்னபூரணி திருமணம் செய்துள்ளார்.

இந்த திருமணத்தையொட்டி, திருவண்ணாமலை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.. அன்னபூரணியை திருமணம் செய்யும் ரோகித், அவருடைய முன்னாள் கணவர் அரசுவின் புதிய பரிணாமம் என்று அந்த பேனரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், தங்களை அம்மை - அப்பர் என்று அழைக்க வேண்டும் என்றும் அறிவித்திருப்பதும், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கணவர் மரணம்: இந்நிலையில், Kingwoods News யூடியூப் சேனலில், அன்னபூரணி என்பவர் யார்? அவரது கணவர் மரணம் ஏன் விசாரிக்கப்படவில்லை? அன்னபூரணிக்கு இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது? அன்னபூரணி கைதாக வாய்ப்புள்ளதா? என்பது குறித்தெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தந்த பேட்டியின் சுருக்கம்தான் இது:
சேகுவேரா அன்னபூரணி குறித்து சொல்லும்போது, "இந்து மதத்தில் மட்டுமல்ல, கிறிஸ்துவ மதத்திலும் சிலபேர் "கடவுளின் ஏஜென்ட் நான்தான்" என்று சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்கள்.. பிறகு "கடவுளே நான்தான்" என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.
சாமியார்கள்: அன்னபூரணிக்கு முதல் கணவன் இல்லை, 2வது கணவர் மரணம், 3வதாக பகிரங்கமாக திருமணம் செய்கிறார்.. இவங்களை சாமி என்று சொல்லி நம்ப வைக்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள்.. இவருக்கு பின்னாடி அரசியல் பின்புலம், அதிகார பின்புலம் இல்லாமல் இருக்காது. கடந்த கால சாமியார்கள், கார்ப்பரேட் சாமியார்கள்தான் இதுபோன்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.
பெண்களை கொச்சைப்படுத்தணும் என்ற நோக்கம் நமக்கில்லை.. "சொல்வதெல்லாம் உண்மை" வீடியோவை பப்ளிசிட்டிகாகக் பரப்புங்க என்று சொல்கிறார். வெட்கம், மானமே இல்லாமல் மீடியாவில் எல்லாமே வெட்ட வெளிச்சமாகிவிட்டபிறகு, நான்தான் சாமி என்று சொன்னால் என்ன செய்வது?
யாகவா முனிவர்: யாகவா முனிவர் அன்று வாய்க்கு வந்ததெல்லாம் உளறினார்.. அவரை பார்க்க கூட்டம் கூட்டமாக போனாங்க.. தன்னுடைய வீட்டிலுள்ள சாதாரண போர்வெல் தண்ணீரை தீர்த்தம் என்று விற்றார்.. அதையும் பாட்டில் பாட்டிலாக காசு தந்து வாங்கிட்டு போனாங்க.. அதுமாதிரி இங்கே பலர் வந்துவிட்டாங்க.. இங்கே எல்லாவற்றையும் பார்க்க ஒரு கூட்டம் இருக்கு.. எல்லாவற்றையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கு.. 10 ரூபாய் தந்தால் காலில் விழுந்து வணங்கவும் கூட்டம் இருக்கு.
மார்கெட்டிங் செய்வது யார்: இதையெல்லாம் இதை யார் தடுக்கணும்? அரசுதான் தடுக்கணும். அதிலும் பகுத்தறிவு பேசக்கூடிய அரசு தடுக்கணும் இதற்கு பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்கணும். ஆனால், சட்டப்பூர்வமாக நிரூபிக்க முடியாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஆனால் இதுபோன்றவர்களை கண்காணிப்பில் அரசு வைக்க வேண்டும். அன்னபூரணி அரசு அம்மா என்பவர் மார்க்கெட்டிங் புராடக்ட்.. ஆனால் இதை மார்க்கெட்டிங் செய்வது யார்?" என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications