எல்லாம் இருந்தும்.. வாய்ப்புகள் இல்லை.. ஆனாலும் அசத்தும் ரெட் ஹாட் அந்தாரா!
Recommended Video
மும்பை: சிலருக்கு அதிர்ஷ்டம் இருக்கும். சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். பலருக்கு இரண்டும் இருக்காது. சிலருக்கு இரண்டும் சேர்ந்து வரும். சிலருக்கு ஒன்று இருக்கும், இன்னொன்று இருக்கு.. ஆனால் வேறு கதவு திறந்து வரவேற்கும். இதில் அந்தாரா கடைசி ரகம்.
அந்தாராவை ஞாபகம் இருக்கா.. சிலம்பாட்டம் படத்தில் குட்டி வேடத்தில் குத்தாட்டம் போட்டவர். அதேபோல வாத்தியார் படத்திலும் ரகளையான குத்தாட்டம் போட்டு ரசிகர்களை வசீகரித்தவர்.
அடிப்படையில் போஜ்பூரி நடிகை. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எல்லாமே கவர்ச்சிதான். அந்தாராவுக்கு அடிப்படையிலேயே கவர்ச்சியான உடல் வாகு. என்னதான் டிரஸ் போட்டாலும் அதையும் தாண்டி கவர்ச்சிதான் பொங்கி வருகிறது.

அபார கவர்ச்சி
இதனாலேயே அவர் நடித்த படங்களின் லிஸ்ட்டைப் பார்த்தால் 90 சதவீதம் கவர்ச்சி வேடங்களாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அந்தாரா கவலைப்படவில்லை. அதிலும் தனது தனி முத்திரையை திகட்டத் திகட்ட பதித்திருக்கிறார்.

இந்தி சீரியல்
சரி அந்தக் கதையை விடுங்க.. இப்ப அந்தாரா என்ன பண்றார் தெரியுமா.. .பயமுறுத்திட்டிருக்கார்.. அட ஆமாங்க.. நஸர் நஸர்னு (ஒன்னுதான்) சீரியல் ஸ்டார் பிளஸ் டிவியில் வந்திட்டிருக்கு தெரியுமா.. இந்தி சீரியல்தான். அதில்தான் நம்ம அந்தாரா மிரட்டலான வில்லி வேடத்தில் அசத்திக் கொண்டிருக்கிறார்.

கவர்ச்சிகரமான வில்லி
கவர்ச்சிகரமான வில்லி. சும்மா சொல்லக் கூடாதுங்க. இந்திக்கார ரசிகர்களையெல்லாம் தனது நடிப்பாலும், கவர்ச்சியாலும ்கட்டிப் போட்டு வைத்திருக்கிறாராம். நஸர் சீரியல் வரும்போது அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகராமல், அப்படியே வைத்த விழி வாஙஅகாமல் மக்கள் அந்தாராவிந் நடிப்பை (ஓகே ஓகே கவர்ச்சியையும்தான்) ரசித்துப் பார்க்கிறார்களாம்.

நடிப்பு இன்றுதானே
பிசியான சினிமா நடிகை நீங்க. அதுவும் போஜ்பூரியில் முன்னணி நடிகையாக வலம் வந்திரு்ககீங்க. குத்தாட்டம் போட்டு பல மொழிகளில் ஆடியிருக்கீங்க.. எப்படி டிவி செட் ஆச்சு.. என்று கேட்டால், அட அதை விடுங்க சார், நமக்கு வாய்ப்புகள் வருவதுதான் முக்கியம். எந்தத் திரையாக இருந்தால் என்ன நடிப்பு நடிப்புதானே. அது ஒன்றுதானே. நான் என்ஜாய் பண்ணி நடிக்கிறேன்.

ரசிகர்கள் ஜாஸ்தி
அதை விட முக்கியம், சினிமாவில் கிடைத்த ரசிகர்களை விட இப்போது நஸர் மூலம் எனக்கு கோடானு கோடி ரசிகர்கள் உலகெங்கும் கிடைத்துள்ளனர். இதை விட என்ன வேணும் என்று கூறி சிரிக்கிறார்.

கூலான படங்கள்
இப்ப வெய்யல் காலம் இல்லையா.. அதனால் படு கூலான புகைப்படங்களாக தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் போட்டு வைத்திருக்கிறார் அந்தாரா. பார்க்கவே படு குளிர்ச்சியா இருக்கு..












Click it and Unblock the Notifications