இந்த தெருவில்தான் சாப்பாட்டுக்காக பிச்சை எடுத்தேன்! கண்ணு தெரியாத எங்க அம்மா! அந்தோணி தாசன் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தமிழ் சினிமாவில் நாட்டுப்புற பாடல்கள் என்றாலே நினைவுக்கு வரும் குரல்களில் பாடகர் அந்தோணி தாசனும் ஒருவர். மேடைகளில் உற்சாகமாக பாடி ரசிகர்களை ஆட வைக்கும் அவருடைய வாழ்க்கையிலும் பல கஷ்டங்கள் இருந்திருக்கின்றன. அப்படி தான் சிறுவயதில் அனுபவித்த வலிகளையும், தான் வளர்ந்த ஊரையும் நினைவுகூர்ந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிப்பாளையம் தான் அந்தோணி தாசனின் சொந்த ஊர். நாட்டுப்புற இசை, தெருக்கூத்து, கரகாட்டம் என கிராமிய கலைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்ட குடும்ப பின்னணியில் வளர்ந்தவர் இவர். இவருடைய தந்தை நாதஸ்வரக் கலைஞர். சிறுவயதிலிருந்தே நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வந்த அந்தோணி தாசன், பின்னர் தனது குரலால் தமிழ் சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

Anthony Daasan Tamil Cinema Folk Singer Viral Video

இப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், தான் வளர்ந்த ஊரின் தெருக்களில் நடந்தபடியே பழைய நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார். அந்த இடங்களைப் பார்க்கும்போது, அங்கு தான் சிறுவயதில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் அவருடைய நினைவுக்கு வந்திருக்கின்றன. அந்த வீடியோவில் அவர் பேசிய விஷயம்தான் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது. "இந்தத் தெருவில்தான் நான் பிச்சை எடுத்தேன். சாப்பாட்டுக்காக பிச்சை எடுத்திருக்கிறேன்" என்று தனது கடந்த காலத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

இன்று பலரும் அறிந்த பாடகராக இருக்கும் அவர், ஒரு காலத்தில் சாப்பாட்டுக்காகவே கஷ்டப்பட்டதை கலங்கியபடியே பேசியது பார்ப்பவர்களையும் கலங்க வைத்திருக்கிறது. தன்னை வளர்த்த தாயை பற்றியும், தான் கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றியும் அவர் உருக்கமாகப் பேசியிருக்கிறார். என்னுடைய அப்பா சின்ன வயதில் இறந்து போய்விட்டதால் அம்மா தனியாகத்தான் என்னையும் என்னுடைய அக்காவையும் வளர்த்தார். அம்மாவுக்கு கண்ணு தெரியாது அதனாலயே நான் சாப்பாட்டுக்காக இந்த தெருவில் பிச்சை எடுத்து இருக்கிறேன் என்று எமோஷனலாக பேசி இருக்கிறார்.

Anthony Daasan Tamil Cinema Folk Singer Viral Video

"இந்த ஊரும், ஊர் மக்களும்..." என்று அந்த ஊருடனான தனது பிணைப்பை நினைவுகூர்ந்த அந்தோணி தாசன், இந்த வீடியோவின் மூலம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பதிவிட்டிருக்கிறார். தான் வளர்ந்த தெருக்களில் நடந்து செல்லும் காட்சிகளும், அங்கு இருந்தபடியே பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

Anthony Daasan Tamil Cinema Folk Singer Viral Video

காசு பணம் துட்டு மணி பாடல்

அந்தோணி தாசன் இன்று சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான 'சூது கவ்வும்' படத்தின் 'காசு பணம் துட்டு மணி' பாடல். இந்த பாடல் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த அவர், தொடர்ந்து பல படங்களில் நாட்டுப்புற இசை கலந்த பாடல்களைப் பாடியிருக்கிறார். ஜிகர்தண்டா படத்தின் பாடல்கள், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்ற சொடக்கு மேல சொடக்கு போடுது உள்ளிட்ட பாடல்களும் அவருடைய குரலை ரசிகர்களிடம் மேலும் பிரபலமாக்கின.

பாடகராக மட்டுமில்லாமல் நடிகராகவும், நாட்டுப்புற கலைஞராகவும் பயணித்து வரும் அந்தோணி தாசன், மேடை நிகழ்ச்சிகள் மூலமாகவும் ரசிகர்களை சந்தித்து வருகிறார். ஆனால், இன்று அவருக்கு கிடைத்திருக்கும் இந்த அடையாளத்துக்குப் பின்னால் எத்தனையோ போராட்டங்கள் இருந்திருக்கின்றன என்பதை அவருடைய இந்த வீடியோ நினைவூட்டுகிறது.

Anthony Daasan Tamil Cinema Folk Singer Viral Video

ஒரு காலத்தில் சாப்பாட்டுக்காகப் பிச்சை எடுத்த தெருக்களில் இன்று தனது வாழ்க்கைய பற்றிப் பேசிக்கொண்டு நடந்து செல்லும் அந்தோணி தாசனின் வீடியோ, வெறும் பழைய நினைவுகளை பகிரும் பதிவாக மட்டும் இல்லாமல், அவர் கடந்து வந்த பாதையையும் எடுத்துக் காட்டுகிறது. இதனாலேயே இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+