தமிழ்நாட்டில் பொது கட்டட விதிகள் மாறுகிறது.. வீட்டு வசதி துறை அதிகாரிகள் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுதும் அமல்படுத்தும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பொது கட்டட விதிகள், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முதல் உள்ளாட்சி அமைப்புகள் வரை மீண்டும் திருத்தப்பட உள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறினார்கள். சில தொழில்நுட்ப மற்றும் அனுமதி நடைமுறைகளில் 12 மீட்டர் என்ற அளவு 14 மீட்டராக மாற்றப்பட்டிருந்தது. அது இன்னமும் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் தற்போது அதிக உயரமில்லாத பிரிவில் கட்டடத்தின் உயர வரம்பு, 18 மீட்டர் அதாவது, 59 அடியாக உள்ளது. இது, 24 மீட்டர் அதாவது, 78 அடி வரை திருத்தி அமைக்க வாய்ப்புள்ளது

தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் வெளியானது. இதில், மனை பிரிவுகள், உட்பிரிவுகள் இவற்றுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில், மனை பிரிவுகளில் சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர, 10 சதவீதம் இடம் பொழுதுபோக்கும் இடத்துக்காக ஒதுக்கப்பட்டு அந்த இடத்தை உள்ளாட்சி அமைப்புக்கு இலவசமாக வழங்க வேண்டும். இதுதவிர கூடுதலாக மொத்த பரப்பில் ஒரு சதவீத பகுதி பொது பயன்பாட்டுக்காகவும், 0.5 சதவீத பகுதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

land Tamil Nadu house

அதேபோல் ஒரு புல எண் (அ) ஒன்றுக்கும் மேற்பட்ட புல எண்ணில் அடங்கியுள்ள இடத்தில் அமைக்கப்படும் புதிய மனைப்பிரிவுகள் (New Layout) யாவும் நகர் ஊரமைப்பு துறையின் ஒப்புதல் பெற்ற பின்னரே, ஊராட்சி மன்ற நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட வேண்டும். இதற்கு ஊராட்சி மன்ற தீர்மானம் அவசியமாகும்

புதிதாக உருவாக்கப்படும் மனைப்பிரிவுகளில் வரைபடத்தின்படியான சாலை, தெருவிளக்கு, கழிவு நீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சம்பந்தப்பட்ட மனைப்பிரிவின் உரிமையாளரால் செய்து கொடுக்கப்பட்ட பின்னரே ஊராட்சி மன்ற நிர்வாகத்தினால் அனுமதி வழங்கப்பட வேண்டும்

மனைப்பிரிவு அமைப்பவர் மனைப்பிரிவு அனுமதிக்காக வரைபடத்துடன் (புளூ பிரிண்ட்) பெருநகர் வளர்ச்சி ஆணையம்/துணை இயக்குநர், நகர் ஊரமைப்புத் துறை அவர்களுக்கு நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்

மனைப்பிரிவு இடம் புறம்போக்கில் அமையவில்லை என்பதற்கான வட்டாட்சியர் சான்று மற்றும் நில உச்சவரம்பு சட்டம் 1978-ன் கீழான நிலமல்ல என்பதற்கான சான்றும் பெற வேண்டும்

கல்குவாரியிலிருந்து 300 மீட்டர் தூரத்திற்குள் அமையக்கூடாது.

நீர் நிலைகளிலிருந்து 15 மீட்டர் தூரத்திற்குள் மனைப்பிரிவு அமையக்கூடாது.

வசிப்பிடங்களுக்கான மனைப்பிரிவிலுள்ள அணுகு சாலைகள் (தெருக்கள்) குறைந்த பட்சம் 7 மீட்டர் மற்றும் பிரதான சாலைகள் 10 மீட்டருக்கும் மேல் அகலத்தில் அமைந்திருக்க வேண்டும்.

9 மீட்டருக்கும் அதிகமான அகலம் உள்ள சாலைகளிலும் தெருக்களிலும் 9 மீட்டர் இடைவெளியில் நிழல் தரும்மரங்களை அமைத்து தர வேண்டியது மனைப்பிரிவு விண்ணப்பதாரரின் கடமையாகும்

மனைப்பிரிவானது தேசிய அல்லது மாநில நெடுஞ்சாலை மற்றும் அதன் புறவழிச் சாலையை ஒட்டி அமையவுள்ளதெனில் தேசிய அல்லது மாநில நெடுஞ்சாலைத் துறையின் இசைவினையும் பெற்ற பின்பே அம்மனை பிரிவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்

இரயில்வே துறைக்கு சொந்தமான இடத்திலிருந்து 30 மீட்டர் தூரத்திற்குள் எந்த மனைப்பிரிவோ கட்டுமானமோ அமைத்தல் கூடாது

புதிய மனைப்பிரிவு (New Layout) அனுமதி வழங்குவதற்கு முன்பாக அந்த மனைப்பிரிவிற்கான சாலையாக அணுகுசாலை வரையறை உள்ளதா என்பதையும், அந்த அணுகுசாலை செய்யப்பட்டு, அதற்கான வருவாய் ஆவணங்களையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஆவணங்களின் அடிப்படையில் சாலையென உறுதி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு விதிகள் உள்ளன. இந்த 2019 விதிகளில் சில அடிப்படை மாற்றங்கள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மூன்றாவது முழுமை திட்ட வரைவு ஆவணம் தயாரிப்பதற்கான பணி நடந்து வருகிறது. பொது கட்டட விதிகளை திருத்தும் பணிகளை, இரண்டு கட்டங்களாக மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறோம். முதல் கட்டத்துக்கான வரைவு தயாரித்துவிட்டோம்.

தற்போது கட்டட அனுமதி பணியில் ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக, பல்வேறு கோரிக்கைகள் எங்களுக்கு வந்திருக்கிறது. தற்போது அதிக உயரமில்லாத பிரிவில் கட்டடத்தின் உயர வரம்பு, 18 மீட்டர் அதாவது, 59 அடியாக உள்ளது. இது, 24 மீட்டர் அதாவது, 78 அடி வரை திருத்தி அமைக்க வாய்ப்புள்ளது. சாதாரண கட்டடங்களுக்கான எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறியீடு, 2 மடங்காக உள்ளது. இதில், 50 சதவீதம் வரை உயர்வு வழங்க வாய்ப்புள்ளது. இயல்பு நிலையில், 22 அடி அகல சாலைகள் இருப்பது கட்டாயம் ஆகும்.

அதேபோல் தமிழ்நாட்டில் அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை செய்யப்பட்ட இடங்களில், 14 அடி, 16 அடி அகல சாலைகள் இருக்கின்றன. இதன் தொடர்பு பகுதிகளில், கட்டட அனுமதி வழங்குவதற்கான சாலை அகலங்கள் விரைவில் வரையறுக்கப்பட உள்ளன. மேலும், கட்டடங்களில் பக்கவாட்டு காலியிடம் விடுவது தொடர்பான விதிகளும் மாற்றப்பட இருக்கிறது. தொழிலக மற்றும் வணிக கட்டடங்களுக்கு தேவையான மாற்றங்களும் செய்யப்பட உள்ளன என்று அதிகாரிகள் கூறினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+