திங்கள் கிழமையும் குறையாத ஜெயிலர் 2 வேகம்.. ஒரே நாளில் இத்தனை கோடியா வசூல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 படம் வசூலில் அடுத்தடுத்த மைல்கற்களை கடந்து வருகிறது. பொதுவாக பெரிய படங்கள் வெளியாகும் முதல் வார இறுதியில் வசூல் அதிகமாக இருக்கும். திங்கள் கிழமை வந்துவிட்டால் வசூல் கணிசமாக குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், 'ஜெயிலர் 2' படத்தை பொறுத்தவரை வாரத்தின் முதல் நாளிலும் கணிசமான வசூல் கிடைத்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் டைகர் முத்துவேல் பாண்டியனாக நடித்திருக்கிறார். அக்டோபர் 15ஆம் தேதி வெளியான இப்படம், முதல் வார இறுதியிலேயே உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலை கடந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நேற்று அக்டோபர் 19ஆம் தேதி திங்கட்கிழமை படத்தின் வசூல் எவ்வளவு என்ற விவரமும் வெளியாகியுள்ளது.

Jailer Rajinikanth Box Office

ஜெயிலர் 2 வசூல் நிலவரம்

சாக்னில் வெளியிட்டுள்ள வசூல் கணக்கின்படி, 5வது நாளான நேற்று இந்தியாவில் மட்டும் ஜெயிலர் 2 படம் சுமார் ரூ.42.35 கோடி நெட் வசூல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் மட்டும் ரூ.31.40 கோடி வசூல் செய்திருக்கிறது. தெலுங்கில் ரூ.7.15 கோடியும், இந்தியில் ரூ.3.35 கோடியும், கன்னடவில் சுமார் ரூ.45 லட்சமும் வசூலித்துள்ளதாக கூறுகின்றன.

திங்கள் கிழமை வசூல்

ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் ரூ.55.85 கோடி நெட் வசூல் கிடைத்திருந்த நிலையில், திங்கட்கிழமை வசூல் குறைந்திருக்கிறது. இருந்தாலும் ஒரே நாளில் ரூ.42 கோடிக்கும் அதிகமாக வசூல் கிடைத்திருப்பது படத்தின் திரையரங்க வரவேற்பை காட்டுகிறது. குறிப்பாக, திங்கட்கிழமையிலும் தமிழ் பதிப்பின் வசூல் ரூ.30 கோடியை கடந்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

மொத்த வசூல் நிலவரம்

இதுவரை இந்தியாவில் இப்படத்தின் மொத்த நெட் வசூல் சுமார் ரூ.242.25 கோடியை எட்டியுள்ளதாகவும், வெளிநாட்டு வசூலையும் சேர்த்து உலகளவில் மொத்த வசூல் ரூ.477.75 கோடியாக இருப்பதாகவும் சாக்னில்க் கணக்கிட்டுள்ளது. அதாவது, உலகளவில் ரூ.500 கோடி வசூல் என்ற மைல்கல்லை படம் நெருங்கியுள்ளது. இப்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்பார்ப்பு ஒன்றுதான். ஜெயிலர் 2 எப்போது ரூ.500 கோடியைக் கடக்கும் என்பதுதான.

முதல் வாரத்தின் மீதமுள்ள நாட்களிலும் இதே அளவுக்கு வரவேற்பு தொடருமா? வார நாட்களில் வசூல் எந்த அளவுக்கு நிலையாக இருக்கும் என்பதுதான் அடுத்த சில நாட்களில் தெரியவரும். ரஜினியின் இந்த படம் வசூலில் இன்னும் என்னென்ன சாதனைகளைப் படைக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+