அந்நியன் மாதிரி பண்ணுனாரு! 2 வருட வலி.. பிரேக்கப் பற்றி முதல் முறையாக அனுபமா பரமேஸ்வரன் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பதிவு கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியாவில் பேசுபொருளாக இருந்தது. "மன அமைதியை தேடி சில பாதைகளை விட்டு விட வேண்டி இருக்கிறது. என்னை மீண்டும் என்னிடம் அழைத்து வந்ததற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி" என்ற வகையில் அவர் பதிவிட்டிருந்தார். ரசிகர்கள் அனுபமாவிற்க்கு பிரேக்கப் ஆகிவிட்டதா? என்று கேட்க தொடங்கினார்கள். இதுவரைக்கும் இந்த விவகாரம் குறித்து நேரடியாக பேசாமல் இருந்த அனுபவமா தற்போது அளித்துள்ள பேட்டியில் தனது கடந்த கால உறவு குறித்து மனம் திறந்து பேசி இருப்பது இப்போது பரபரப்பாகி இருக்கிறது.

கேரளாவை சேர்ந்த அனுபமா பிரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானார். அந்த படத்தில் மேரி என்று கேரக்டரில் நடித்ததன் மூலம் ஒரே படத்தில் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதற்கு பிறகு மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பலமொழி படங்களிலும் நடித்து தனக்கான ஒரு இடத்தை பிடித்தார். தமிழில் கொடி, தள்ளி போகாதே, பைசன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

அனுபமா நடித்த படங்கள்

குறிப்பாக தனுஷ் நடித்த கொடி படத்தில் அனுபமா நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் படத்தில் அனுபவமா இணைந்து நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் பின்னர் அது காதலாக மாறியதாகவும் சோசியல் மீடியாவில் செய்திகள் பரவின.

Anupama Parameswaran Anupama Breakup Dhruv Vikram

துருவ் போடும் போஸ்ட்களுக்கு அனுபவமா கமெண்ட் கொடுப்பது, அனுபவமா போஸ்டுக்கு துருவ் லைக் கொடுப்பது என சோசியல் மீடியாவில் எப்போதுமே ஒரு சிக்னல் காட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் இருவருமே தங்களுடைய காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இல்லை. இந்த நிலையில் தான் சில வாரங்களுக்கு முன்பு அனுபமா திடீரென தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு எமோஷனலான போஸ்ட் வெளியிட்டு இருந்தார்.

அனுபமா பேட்டி

அதில் தன்னுடைய வாழ்க்கையில் அமைதியை தேடி, கண்டுபிடித்ததாகவும் தன்னுடைய வாழ்க்கைக்கு தேவை இல்லாத சில விஷயங்களை விட்டுவிட்டு மீண்டும் தன்னை தேடி வந்ததாகவும் அவர் சொல்லி இருந்தார். அந்த பதிவு வெளியானதும் ரசிகர்கள் துருவ்வுடன் இவருக்கு பிரேக்கப் ஆகிவிட்டதா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தான் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் தனக்கு பிரேக்கப் எதனால் நடந்தது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

Anupama Parameswaran Anupama Breakup Dhruv Vikram

2 வருட வலி

அதை அவர் பேசும்போது, தான் வெளியிட்ட அந்த பதிவை ஒரே நாள் ஏதோ நடந்து விட்டது என்பதற்காக உடனடியாக போட்டு விடவில்லை. அதற்கு பின்னால் சுமார் 2 வருடங்களாக அனுபவித்த உடல் மற்றும் மன ரீதியான வேதனை இருக்கிறது. தன்னை மீண்டும் தானே கண்டுபிடித்துக் கொள்வதற்கும் அந்த காலகட்டத்தில் இருந்து வெளியே வந்து குணமடைவதற்கும் தனக்கு நீண்ட நாட்கள் தேவைப்பட்டது. நான் இதற்கு முன்பு அனுபவித்தது சாதாரண காதல் பிரச்சனை அல்ல Narcissist abuse எனப்படும் உளவியல் ரீதியான கடுமையான துன்புறுத்தல்கள் தான் நான் அனுபவித்தேன்.

இது என்னை போன்று இந்த விஷயத்தில் நேரடியாக அனுபவித்தர்களுக்கு மட்டும்தான் அதன் வலியும் வேதனையும் தெரியும். காதலிக்கும் போது காதலின் மீது நம்பிக்கை வைத்து, தனிப்பட்ட காயங்களையும் பகிர்ந்து கொண்டேன். அப்படி என்னைப் பற்றிய தகவல்களை கேட்டுக்கொண்டு அதன் மூலம் ஒரு எமோஷனலான பிணைப்பை உருவாக்கினார். ஆரம்பத்தில் அவருடைய செயல்பாடுகள் நமக்கு கட்டுப்படுத்துவது போல தெரியாது. மிகவும் அன்பாகவும், அக்கறையாகவும் இருப்பது போல தான் இருக்கும் ஆனால் காலப்போக்கில் சின்ன சின்ன விஷயங்கள் மூலம் நம்மீது ஆதிக்கம் செலுத்த தொடங்குவார்கள்.

Anupama Parameswaran Anupama Breakup Dhruv Vikram

காதலால் கட்டுப்படுத்துதல்

உதாரணமாக நாம் சுடிதார் அணிந்து கொண்டிருக்கும் போது என் பொண்டாட்டி எவ்வளவு அழகா இருக்கா.. என பாராட்டுவார். அதைக் கேட்டதும் நம்ம மனசு நிறைந்துவிடும். பிறகு அவருக்கு பிடித்த உடைகளை நாம் தொடர்ந்து அணிய ஆரம்பித்து இறுதியில் என்ன உடை அணிய வேண்டும் என்பதை கூடவே அவரிடமே கேட்கும் நிலைக்கு நாம் போய் விடுவோம். இப்படித்தான் அவர் சொல்ல சொல்ல எனக்கே தெரியாமல் என்னுடைய சுய விருப்பங்கள் எல்லாமே மாறத் தொடங்கி விட்டது.

நிச்சயதார்த்தம் நிறுத்தம்

நாங்கள் காதலிக்க ஆரம்பித்தும் அவர் அவருடைய குடும்பத்திடம் என்னை அறிமுகப்படுத்தினார். உடனே அவருடைய குடும்பத்தினர் என் வீட்டுக்கு வந்தனர். என் பெற்றோர் அவரின் வீட்டுக்கு சென்றனர். இப்படி 3 மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் எங்கு நடத்துவது? எத்தனை பேர் வர வேண்டும்? என்ற பேச்சு வரைக்கும் வந்து விட்டது. அது எனக்கு ஒரு பயத்தை கொடுத்தது. அதனால் அந்த நிச்சயதார்த்தத்தை பலமுறை நான் தான் தள்ளிப் போட்டேன்.

இது சரியான நேரமில்லை, இன்னும் கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்ளலாம். நீ உன்னுடைய கேரியரில் கவனம் செலுத்து, இன்னும் நமக்கு வயது இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். நான் பணத்திற்காக அந்த உறவில் இருந்திருந்தால் நிச்சயதார்த்தத்தை ஒருபோதும் நிறுத்தி இருக்க மாட்டேன். அந்த நபர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும்போது அன்னியன் போல நடந்து கொள்வார்.

ஒரு நாள் ரொம்பவும் பாசமாக வந்து என்னிடம் பேசுவார். சரி இவ்வளவு காதலாக இருக்கிறாரே என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் அடுத்த நாளே வந்து சின்ன விஷயத்துக்கும் எதற்காக இப்படி செய்த என்று அன்னியன் போல மிரட்டுவார். அதனால் நமக்குள் ஒரு பயம் வரும். அடுத்த நாள் ரெமோபோல வந்து காதல் மொழி பேசுவார். அதனால் அந்த நபரை நம்மளால் புரிந்து கொள்ளவே முடியாது என்று அனுபமா பேசி இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+