அர்னவ் பற்றி அன்ஷிதாவிடம் அப்பவே சொன்னோம்! சூட்டிங்கில் நடந்த பிரச்சனை.. அந்த பாவம்! அனுராதா ஓபன்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் அன்ஷிதா பற்றி நடிகை அனுராதா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். செல்லமா சீரியலில் நடிக்கும் போது அன்ஷிதாவால் அர்னவ் மற்றும் அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதர் இருவருக்கும் இடையே நடந்த பிரச்சனை பற்றியும் அனுராதா பேசியிருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள்தான் போட்டியாளராக கலந்து கொள்கிறார்கள். இதில் நேற்று எலிமினேஷனான அர்னவும் ஒருவர். இவர் விஜய் டிவியில் செல்லமா சீரியலில் கதாநாயகனாக நடித்தார். அவரோடு ஜோடியாக நடித்த அன்ஷிதாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே இணையத்தில் பலருக்கும் பரிட்சயமானவர்கள் தான். சில வருடங்களுக்கு முன்பு அர்னவின் மனைவி திவ்யா ஸ்ரீதர் செல்லம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது அன்ஷிதாவோடு தவறான தொடர்பில் இருக்கிறார். அதனால் எங்கள் வீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது, அன்ஷிதாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார் என்று போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தார்.
அதற்கு பிறகு அர்னவ் கைது செய்யப்பட்டு இருந்தார். இது சின்னத்திரை ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த சங்கதி தான். ஆனால் ஜாமினில் வந்த அர்னவ் ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டிருந்தார். அது போதாது என்று பல பேட்டிகளிலும் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த நிலையில் அந்த சீரியல் முடிவடைந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒருவரை ஒருவர் தெரியாதது போல காட்டிக் கொள்ளலாம் என்று முயற்சி செய்கிறார்கள். ஆனால் அன்ஷிதா அவரையும் மீறி பல இடங்களில் எனக்கு அர்னவை நன்றாகவே தெரியும் என்று சொல்லி விடுகிறார். ஆனால் அதிகமான இடங்களில் அர்னவ் அன்ஷிதாவை விட்டுக் கொடுத்து இருந்தார்.

அதனால் அன்ஷிதா கதறி அழுது இருந்தார். இது பற்றி செல்லமா சீரியலில் நடித்து வந்த நடிகை அனுராதா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் அன்ஷிதா மற்றும் அர்னவ் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒருவரை ஒருவர் தெரியாதது போல நடந்து கொள்வது பார்க்கும்போது வேடிக்கையாக தான் இருக்கிறது. இருவரும் எப்போதுமே சூட்டிங் ஸ்பாட்டில் ஒன்றாக இருப்பார்கள்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒருவரை ஒருவர் தெரியாது போல காட்டிக் கொள்ளலாம் என்று முயற்சி செய்கிறார்கள். ஆனால் அன்ஷிதா அவரையும் மீறி பல இடங்களில் எனக்கு அர்னவை நன்றாகவே தெரியும் என்று சொல்லி விடுகிறார். ஆனால் அதிகமான இடங்களில் அர்னவ் அன்ஷிதாவை விட்டுக் கொடுத்து இருந்தார்.
அவர் யார் என்று தெரியாதது போல நடந்து கொள்கிறார். 24 மணி நேர எபிசோட் பார்த்த ரசிகர்களுக்கு தெரியும் சொம்பு தூக்கி பட்டம் கூட அர்னவ் தான் இதை அன்ஷிதாவுக்கு கொடுக்க வேண்டும் அதை நானே கொடுப்பேன் என்று அடம் பிடித்து கொடுத்தார். நாங்கள் அன்ஷிதாவிடம் செல்லம்மா செட்டில் இருக்கும் போதே சொல்லி இருக்கிறோம்.
அர்னவ் அவனுடைய தேவைக்காக என்னைக்காவது ஒருநாள் உன்னை தூக்கி எறிந்துவிடுவான், அவனுக்கு அவனுடைய குடும்பம் முக்கியம் என்று போய்விடுவான் நீ நம்பாதே என்று சொன்னோம். ஆனால் அது இப்போது அன்ஷிதாவிற்கு தெரிய வந்திருக்கும். இன்னும் கொஞ்ச நாட்கள் அர்னவ் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்திருந்தால் அர்னவ் பற்றி முழுமையாக அன்ஷிதா தெரிந்திருப்பார்.
ஒருமுறை அர்னவ் மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே சண்டை நடந்தது. காரணம் அன்ஷிதா என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரிய பிரச்சனை ஏற்பட்டதால்தான் அன்ஷிதாவிற்கு திவ்யா மீது ரொம்ப கோபம் என்று நான் நினைக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியானது அதில் அன்ஷிதா திவ்யா ஸ்ரீதருக்கு போன் போட்டு நீ என் கையில் கிடைத்தால் உன்னை வெட்டி கொன்னு போட்டுருவேன் என்று மிரட்டி இருப்பார்.
அதோடு திவ்யா முன்பே அர்னவ்க்கு ஐ லவ் யூ சொல்லியிருந்தார். இதெல்லாம் எனக்கு தெரிந்தவரையில் தன்மீது கோபம் சுமத்தியதால் தான் அன்ஷிதா அப்படி நடந்து கொண்டது போல தான் எனக்கு தெரிந்தது. அதுபோலத்தான் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட சாச்சனா சாப்பாடு பிரச்சனை செய்த போது அன்ஷிதா அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார்.
அர்னவ் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்போது அன்ஷிதாவிற்கு எந்த பிரச்சனை என்றாலும் முதலில் சண்டைக்கு போவார். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் அவன் நடந்து கொண்டு விதம் எனக்கு வித்தியாசமாக இருந்தது.
ஒரு பெண் வயிற்றில் குழந்தையோடு இருக்கும்போது அழுது கொண்டு இருக்கிறாள் என்று நாங்கள் அன்ஷிதாவிற்கு அட்வைஸ் செய்தோம். ஆனால் அவள் கேட்கவே இல்லை மேலும் வெறுப்பு ஏத்துற மாதிரி தான் நடந்து கொண்டாள். அந்த பாவம் இப்போ அவங்களை தாக்குது என்று நினைக்கிறேன் என்று அந்த பேட்டியில் அனுராதா பேசியிருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications