சாய்ரா ரொம்ப தைரியமானவங்க.. அவங்க கிட்ட பிடித்ததே இது தான்! ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி
சென்னை: ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் அவருடைய மனைவி சாய்ரா இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். அதே நேரத்தில் ஏ.ஆர் ரகுமானின் சகோதரி ஏ.ஆர் ரஹைனா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் பல நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள் தொடர்ச்சியாக விவாகரத்து செய்தியை அறிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு ரஹ்மானிடம் இருந்து விவாகரத்து பெற்றதாக அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை பானுவின் வழக்கறிஞர் வெளியிட்ட நிலையில் இதனை ஏ.ஆர் ரஹ்மானும் உறுதி செய்துள்ளார்.

இவர்கள் இருவரின் பிரிவுக்கு என்ன காரணம் என்று பலரும் விவாதித்து வருகிறார்கள். இருவரும் தங்களுடைய தனிப்பட்ட விஷயங்களில் யாரும் தலையிட வேண்டாம் எங்களுக்கு பிரைவேசி வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில் ரஹ்மானின் சகோதரியும், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷின் அம்மாவுமான ஏ ஆர் ரஹைனா பேட்டி ஒன்றில் ஏஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா பானு குறித்து விகடன் youtube சேனலில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில், எனக்கு சாய்ரா பானுவை ரொம்பவே பிடிக்கும். அவங்க ரொம்ப தைரியமான பெண். அவங்களுக்கு எங்க வீட்டு சைட்ல இருந்து ரொம்ப விமர்சனம் கொடுப்பாங்க... ஏன் கொடுத்தோம் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அவங்க அதை எல்லாம் அப்படியே தூள் பண்ணிட்டு போயிடுவாங்க. என்ன விமர்சனம் வந்தாலும் அதைப்பற்றி கண்டு கொள்ள மாட்டாங்க.
அதுபோல அவங்களுக்கு ட்ரெஸ்ஸிங் சென்ஸ் ரொம்ப நல்லா இருக்கும். ரஹ்மானோட எல்லா ட்ரஸ்சையும் அவங்கதான் செலக்ட் பண்ணுவாங்க. ரொம்ப யூனிக்கா பியூட்டிஃபுல்லான டேஸ்டா அவங்களுக்கு இருக்கும். ட்ரஸ் கம்மி விலையாக இருந்தாலும் சரி அதிகமான விலையாக இருந்தாலும் சரி ரொம்ப அழகா செலக்ட் பண்ணுவாங்க. அவங்களோட டேஸ்ட் அழகாக இருக்கும்.
அதுமட்டுமல்ல வீட்டையும் ரொம்ப கிளீனா வச்சிருப்பாங்க. இதெல்லாம் சாய்ராவோட குவாலிட்டி. அதே மாதிரி அவங்க அதிகமா நகை போட விரும்ப மாட்டாங்க. பணம் இருக்குன்னு பந்தா பண்ண மாட்டாங்க. எப்பவும் ரொம்ப சிம்பிளா தான் இருப்பாங்க. கம்மியான நகை தான் போடுவாங்க. ஆனா நல்லா ஃபேஷனா டிரஸ் போடுவாங்க.
டிரெஸ்ஸுக்காக அதிகமா செலவு பண்ணுவாங்க என்று அந்த பேட்டியில் ரஹைனா பேசியிருக்கிறார். ஏ.ஆர் ரஹ்மானின் அம்மா ஏற்பாட்டில் தான் அவருடைய திருமணம் நடைபெற்றது. கடந்த 1995 ஆம் ஆண்டு ஏஆர் ரகுமான் சாய்ராபானுவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கதீஜா மற்றும் ரஹீமா என்ற இரண்டு மகள்களும் அமீன் என்ற மகனும் உள்ளனர்.
சமீபத்தில் தான் ஏஆர் ரஹ்மானின் மருமகனான ஜிவி பிரகாஷ் அவருடைய மனைவி பாடகி சைந்தவியை விவாகரத்து செய்திருந்தார். அந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் அதை தொடர்ந்து ரஹ்மான் அவருடைய மனைவியை பிரிந்திருக்கும் செய்தியும் நேற்றிலிருந்து அதிகமாக பேசப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications