மனைவியுடன் ஹனிமூனுக்கு போனபோது கூட வீணை வாசித்தவர் ஏ.ஆர். ரஹ்மான்: நடிகர் ரகுமான் கலகல
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பற்றி, அவரது உறவினரும், நடிகருமான ரகுமான் தெரிவித்துள்ள கருத்துக்கள் ரசிகர்களுக்கு வியப்பை தந்து வருகிறது. நடிகர் ரகுமான் தந்துள்ள இந்த பேட்டிதான், இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான்... 1992-ல் ரோஜா படத்தில் அறிமுகமாகி, இப்போது முதல் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.. 2 ஆஸ்கர் விருதுகளையும் பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர்.. அந்தவகையில் தமிழகத்தின் மிகப்பெரிய இசைச் சொத்து, நம்முடைய ஏ.ஆர். ரகுமான்
பிரபல நடிகர் ரகுமான் மனைவியின் சகோதரியைதான், ஏர் ஆர் ரஹ்மான் திருமணம் செய்துள்ளார்.. அதாவது, நடிகர் ரகுமானுக்கு, ஏஆர் ரகுமான் சகலை உறவுமுறை ஆவார். ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி பெயர் சாய்ரா. ரஹ்மானின் மனைவி மெஹரரின் மூத்த சகோதரி ஆவார்..

அக்கா சாய்ரா: நடிகர் ரஹ்மான், மெஹரை சந்திக்கும்போதுதான், அவருக்கு ஒரு அக்கா சாய்ரா இருப்பது தெரியவந்தது.. அதனால், சாய்ரா திருமணம் செய்து கொண்டால்தான் மெஹருக்கு திருமணம் செய்ய முடியும் என்று அவர்களுடைய அப்பா தெரிவித்திருக்கிறார்.. ஆனால், நடிகர் ரஹ்மானுக்கு மெஹரை பிடித்துப்போகவும், அக்காவின் கல்யாணத்துக்கு முன்பேயே நடிகர் ரகுமானுடன் மெஹருக்கு திருமணம் நடந்துள்ளது.
1999-ம் ஆண்டு "சங்கமம்" படத்தில் ஹீரோவாக ரஹ்மான் நடிக்க, அந்த படத்திற்கு ஏ.ஆர். இசையமைத்திருந்த பாடல்கள் அனைத்துமே பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 1995-ம் ஆண்டு சாய்ரா பானு என்பவருடன் திருமணம் நடந்தது. தொழில் பக்தி நிறைந்தவரான ஏ.ஆர். ரஹ்மான், தனக்கு கல்யாணமாகி மனைவியுடன் ஹனிமூனுக்கு சென்றபோது கூட, இசையமைக்கும் பணியிலேயே ஈடுபட்டிருந்ததாக, நடிகர் ரஹ்மான் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இரு துருவங்கள்: தி க்ளென் கோல்ட் ஃபவுண்டேஷனுடனான நேர்காணலில் இந்த விஷயங்களை நடிகர் ரகுமான் பகிர்ந்து கொண்டுள்ளார்... அந்த பேட்டியில் நடிகர் ரகுமான் சொல்லும்போது, "ஏ.ஆர். ரகுமான் என்னை விட ஆன்மீக மனிதர்.. அவருக்கும் எனக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன... இருவருமே இரு துருவங்கள்.. அவர் வடக்கு என்றால் நான் தெற்கு.. மிகவும் அமைதியாக இருப்பார்... தொழில் மீத அர்ப்பணிப்பு நிறைந்தவர்..
எனக்கு இன்னும் ஒரு விஷயம் ஞாபகத்தில் உள்ளது.. "ரகுமானுக்கு திருமணம் ஆனதும், என்னுடைய அண்ணியை ஹனிமூனுக்கு, ஒரு மலைப்பகுதிக்கு அழைத்து சென்றிருக்கிறார்.. அன்றைய தினம் இரவு போனில் அழைத்தேன். அப்போது மணி 12 அல்லது 1 ஆகிவிட்டிருந்தது.. போனை எடுத்த என் அண்ணி, தான் தூங்கிக்கொண்டிருப்பதாக சொன்னார். உடனே நான், "ரஹ்மான் எங்கே" என்று கேட்டேன்..
கம்போஸிங்: அதற்கு அண்ணி, "எனக்கு தெரியாது" என்றார்.. அப்போதுதான், ஏ.ஆர். ரஹ்மான் இன்னொரு ரூமில் வீணையை வாசித்துக்கொண்டிருந்தார். ஏதோ ஒரு படத்திற்காக கம்போசிங்கில் இருந்தார்.. அதுமாதிரிதான் ஏ.ஆர். ரஹ்மான்... எப்போதுமே ஏ.ஆர். ரஹ்மான் தனியாக இருக்க விரும்புகிறவர்... அவர் யாரிடமும் அதிகம் பேசமாட்டார்.. என்னிடம், ஆன்மீகத்தை தழுவுவது, இஸ்லாத்திற்கு மாறுவது பற்றியெல்லாம் என்னிடம் நிறைய பேசியிருக்கிறார்" என்றெல்லாம் அந்த பேட்டியில் நடிகர் ரகுமான் தெரிவித்துள்ளார்..!
சமீபத்தில்கூட, ஏ.ஆர். ரகுமான் திருமணம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகியிருந்தன.. அதாவது, தனக்கு வரப்போகிற பெண் எப்படியிருக்க வேண்டும் என்று 3 கண்டிசன்களை போட்டாராம் ஏ.ஆர். ரகுமான்.. முதலில் அந்த பெண் நன்றாக படித்திருக்க வேண்டும், இசை அறிவு கொஞ்சமாவது இருக்க வேண்டும்.
அன்பான மனைவி: இரண்டாவதாக, அந்த பெண் அழகாக இருக்க வேண்டும். மூன்றாவதாக, அனைவரையும் மதிக்கக் கூடிய மரியாதை தெரிந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்றாராம்.. இந்த 3வது கண்டிஷன் உள்ள பெண் கிடைக்க தான் கொஞ்சம் கடினமாக இருந்ததாகவும், இதையெல்லாம் தாண்டி ஏ ஆர் ரகுமானின் அம்மா அலைந்து திரிந்து ஒரு பெண்ணை பார்த்ததாகவும்.. அந்த பெண்தான் தன்னுடைய மனைவி சாய்ரா என்றும் ஏற்கனவே பேட்டிகளில் கூறியிருந்தார்.
திரைப்பயணம் துவங்கியதிலிருந்து இன்றுவரை எத்தனையோ இளைஞர்களுக்கு, மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக விளங்கி கொண்டிருப்பவர் ஏ.ஆர். ரஹ்மான்.. ரகுமான் பேச்சுக்கள் அத்தனையும் தேசிய அளவில் பலரின் கவனத்தையும் ஈர்த்துவிடுவது வழக்கமான ஒன்றாகும்.. கடுமையான உழைப்பாளியான ஏ.ஆர். ரகுமான், தன்னுடைய தொழில் பக்தியில் சிறந்து விளங்குவதை, அவரது சகோரர் நடிகர் ரகுமான் கூறியிருப்பது, பலருக்கும் வியப்பை தந்து வருகிறது.. சபாஷ் ஏ.ஆர். ரகுமான்...!!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications