சின்னத்திரை ஷோவில் நடுவராகும் ஏஆர் ரஹ்மான்.. அதுவும் எந்த சேனல்? என்ன நிகழ்ச்சி தெரியுமா?
சென்னை: சோனி விஷா புதிய தமிழ் சேனல் மூலம் இசை நிகழ்ச்சிக்கு நடுவராக களமிறங்கும் ஏஆர் ரஹ்மான் இதற்கு முன்பே பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த முறை தான் தமிழ் சின்னத்திரையில் முக்கியமான ஒரு புதிய பொறுப்பில் வருகிறார்.
தமிழ் சின்னத்திரை உலகில் புதிதாக ஒரு பெரிய மாற்றத்திற்கு சோனி நிறுவனம் தயாராகி வருகிறது. தமிழுக்கு என புதிய தொலைக்காட்சி சேனலான சோனி விஷாவை அறிமுகப்படுத்தும் பணிகளில் சோனி நிறுவனம் பரபரப்பாக வேலைகளை பார்த்து வருகிறது. இந்த சேனல் வரும் தீபாவளியில் இருந்து ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடுவராகும் ஏ ஆர் ரஹ்மான்
sony பிக்சர்ஸ் நெட்வொர்க் தென் இந்திய விரிவாக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாக இந்த புதிய தமிழ் சேனல் உருவாகி வருவதாக அதன் தலைமை செயல் அதிகாரி கௌரவ் பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த புதிய சேனலில் நிகழ்ச்சிகளில் நடிகை சமந்தா பங்கேற்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியும் தற்போது இசை துறையின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவரான ஏ ஆர் ரஹ்மான் நடுவராக பங்கேற்க உள்ள தமிழ் ஐடெல் இசைத்திறமை தேடும் நிகழ்ச்சியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய இசை நிகழ்ச்சி
இசை அமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என உலக அளவில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுள்ள ஏ.ஆர் ரஹ்மான் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சி நடுவராக அமரப் போகிறார் என்ற தகவல் தற்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழ் ஐடெல் போன்ற ஒரு திறமையை தேடும் நிகழ்ச்சியில் ரஹ்மான் நடுவராக இருந்தால் புதிதாக வரும் பாடகர்களுக்கு அவரிடம் இருந்து நேரடியான அட்வைஸ் கிடைக்கும் என்பதால் இந்த நிகழ்ச்சியின் மீது ஆரம்பத்திலேயே கவனம் திரும்பி இருக்கிறது.
ஏ ஆர் ரகுமான் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வருவது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பே பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், சில இசை நிகழ்ச்சிகளில் வெற்றி பெறும் பாடர்களுக்கு பரிசுகளை வழங்கியும் இருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு நன்றாக நினைவில் இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றான விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 2013 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஒரு சிறப்பு எபிசோடில் ஏ ஆர் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சின்னத்திரையில் ஏ.ஆர் ரஹ்மான்
அந்த எபிசோடில் போட்டியாளர்கள் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல்களை பாடியிருந்தனர். அப்போது ரஹ்மான் நேரடியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியிலும் ஏ.ஆர் ரஹ்மான் ஸ்பெஷல் என்ற சிறப்பு எபிசோடில் அவர் பங்கேற்று இருந்தார். குழந்தைகள் அவரது பாடல்களை பாடிய நிலையில் அவர் கெஸ்ட் ஆக கலந்து கொண்டு அந்த பாடல்கள் உருவாகும் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பேசி இருந்தார்.
ஏ.ஆர் ரஹ்மான் தலைகனம் இல்லாதவர்.. ஆனால் இளையராஜா! வெங்கடேஷ் பட் பேசிய வார்த்தை! வந்தாச்சு பஞ்சாயத்து
ஆனால் ஒரு முழுமையான இசை திறமையை தேடும் நிகழ்ச்சியில் தொடர்ந்து நடுவராக இருப்பது என்பது வேறு விஷயம். 2007 ஆம் ஆண்டிலேயே Mission Ustaad என்ற இசை நிகழ்ச்சியில் ரஹமான் நடுவராக பங்கேற்று இருந்தார். ஐநாவின் சமூக நோக்கங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில் இசையின் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியும் இடம்பெற்று இருந்தது. மேலும் 2005 இல் channel V super singer நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் ரஹ்மான் செலிப்ரிட்டி ஜட்ஜ் ஆக இணைந்து இருந்தார். அந்த வரிசையில் தற்போது தமிழ் தொலைக்காட்சியில் ஒரு புதிய தமிழ் இசை திறமை நிகழ்ச்சியில் முக்கிய நடுவராக ரஹ்மான் வந்திருப்பது பலருடைய கவனத்தை ஈர்க்கிறது.


Click it and Unblock the Notifications
