அப்படி கூப்பிடாதீங்க! கசாப்பு கடையா வச்சிருக்கேன்! எனக்கு பிடிக்கல, மூஞ்ச பாரு! திடீரென டிடியை திட்டிய ஏஆர் ரஹ்மான்
சென்னை: இசையமைப்பாளராக பிரபலமடைந்த ஏஆர் ரஹ்மான் சமீபத்தில் பேசிய பேட்டி தான் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த பேட்டியில் தொகுப்பாளினியான டிடி தான் கேள்வி கேட்டிருக்கிறார். அப்போது டிடி கேட்ட கேள்வியை கேட்டு கடுப்பான ஏ.ஆர் ரகுமான் என்னை அப்படி கூப்பிடாதீங்க நான் கசாப்பு கடையா வச்சிருக்கேன் என்று கோபப்பட்டு டிடியை பார்த்து, மூஞ்ச பாரு என திட்டியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ரோஜா படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். சின்ன வயதிலிருந்து இசையமைக்க வேண்டும் என்று கனவோடு இருந்த ஏஆர் ரகுமான் இளையராஜாவிடம் 500க்கு மேற்பட்ட திரைப்படங்களில் வேலை செய்திருக்கிறார். இளையராஜா மட்டுமல்லாமல் பல முன்னணி இசையமைப்பாளர்களிடமும் கீபோர்டு வாசிக்கும் வேலை செய்து இருக்கிறார். இவருடைய அப்பா மறைவிற்குப் பிறகு குடும்பத்தை கவனிக்கும் மொத்த பொறுப்பும் ஏ ஆர் ரஹ்மானுக்கு வந்தது.

குடும்ப பொறுப்பு
அப்பா சொல்லிக் கொடுத்த இசையை வைத்து தன்னுடைய திறமையை காட்ட தொடங்கிய ஏ ஆர் ரகுமானுக்கு விளம்பரப்படங்கள் வாய்ப்பு தான் ஆரம்பத்தில் வந்தது. விளம்பர படங்களில் இருந்து இசையமைக்க தொடங்கிய ஏஆர் ரஹ்மான் மணிரத்தினம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய வெற்றியை நிலை நிறுத்திக் கொண்டார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இப்ப வரைக்கும் எவர்கிரீன் பாடல்களாக பலருடைய மனதை ஆக்கிரமித்து இருக்கிறது.
ரோஜா பட பாடல்கள்
ரோஜா திரைப்படத்தில் காதல், மோகம், சோகம் என எல்லாம் கலந்த கலவையாக உருவான பாடல்கள் மீண்டும் கேட்க தூண்டும் வகையிலே இருந்தது. அதுபோல ஏஆர் ரஹ்மான் முதல் படத்தில் தேசிய விருதையும் பெற்றுவிட்டார். அதற்கு பிறகு குத்தாட்டம் போடணுமா ஏ ஆர் ரஹ்மான் பாடலை போடுங்க என்று சொல்லும் அளவிற்கு இவருடைய பாடல்கள் இடம் பிடித்து விட்டது. தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் ஏ.ஆர் ரகுமான் கலக்கி கொண்டிருக்கிறார்.
டிடி கேட்ட கேள்வி
ஹாலிவுட் படங்களின் டைட்டிலுக்கு இவருடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் வாங்கி இருக்கிறார். அதே நேரத்தில் சமீப காலமாக ஏ ஆர் ரஹ்மான் பற்றிய செய்திகளும் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தான் சமீபத்தில் ஏஆர் ரஹ்மான் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். பொதுவாக இஸ்லாமியர்களை பாய் என்று சிலர் அழைப்பார்கள். அதுபோல ஏ ஆர் ரஹ்மான் பற்றிய செய்திகள் வரும்போது எல்லாம் அவரை பெரிய பாய் என்று பலர் குறிப்பிடுவார்கள்.
கோபப்பட்ட ஏஆர் ரஹ்மான்
இது பற்றி டிடி ரஹ்மானிடம் கேள்வி கேட்கும் போது "பெரிய பாய்" என்று கூப்பிட்டு இருந்தார். அதற்கு சிரித்த ரஹ்மான் என்னது பெரிய பாயா ? என்று கேட்க, ஆமா சார் உங்களுக்கு இப்படி ஒரு பெயர் இருக்கிறது உங்களுக்கு தெரியாதா? என்று டிடி கேட்டதும், வேணாம் எனக்கு இது பிடிக்கல, சின்ன பாய், பெரிய பாய் என்று நான் என்ன கசாப்பு கடையா வச்சிருக்கேன்? மூஞ்ச பாரு என்று சிரித்தபடி சொல்லி இருக்கிறார். தல என்று அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை என்று அஜித் சொன்னது போல இப்போது நான் ஏஆர் ரஹ்மானும் தன்னை பாய் என்று அழைக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications