Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏஆர் ரஹ்மான் பற்றிய சர்ச்சைகள்.. மகன் மீண்டும் போட்ட திடீர் பதிவு.. சப்போர்ட் செய்யும் பிரபலங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் குறித்து பலர் அவதூறு கருத்துக்கள் பரப்பி வருவது குறித்து அவருடைய மகன் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதற்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஏஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா தன்னுடைய கணவர் ஏஆர் ரஹ்மானை பிரிவதாக வழக்கறிஞர் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து சில மணி நேரத்தில் ரஹ்மானும் அதை உறுதி செய்திருந்தார். அதற்கு பிறகு ரஹ்மான் பற்றி பல அவதூறும், ஆதாரமற்ற செய்திகளும் பரவி வருகிறது.

television ar rahman

சமீபத்தில் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் சில பிரபலங்கள் விவாகரத்து செய்தியை அறிவித்து வருகிறார்கள். இது அவர்களுடைய தீவிரமான ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் அவருடைய மனைவி பிரியும் செய்தி கூட அப்படித்தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி ஒரு சில பிரபலங்கள் ஏஆர். ரஹ்மான் பற்றி பல அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.

ஏ.ஆர் ரகுமான் மற்றும் அவருடைய மனைவி எதற்காக பிரிந்தார்கள் என்று விளக்கம் கொடுக்கிறோம் என்கிற பெயரில் இந்த தம்பதியின் விவாகரத்திற்கு அதுதான் காரணம் இதுதான் காரணம் என்று பல கட்டுக் கதைகளும் வலம் வருகிறது. சுயலாபத்திற்காக பல youtube சேனல்களில் வாய்க்கு வந்த கதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பரப்பப்படும் தகவல்கள் ஒரு சாதனையாளராக பார்க்கப்படும் ஏ ஆர் ரஹ்மானை தாக்கும் விதத்தில் தான் உள்ளன.

வேலை நிமித்தமாக ஏ ஆர் ரஹ்மான் தன்னுடைய குடும்பத்தின் மீது அக்கறை காட்டாததும் தன்னுடைய சவுண்டு இன்ஜினியரையே மகளுக்கு திருமணம் செய்து வைத்ததிலும் சாய்ராவுக்கு உடன்பாடு இல்லை அப்போது இருந்தே அவர்களுக்குள் பிரச்சனை உருவாகிவிட்டது, இதுதான் இவர்களுடைய பிரிவுக்கு காரணமாக இருக்கும் என்று சிலர் ஆதாரம் இன்றி தகவல்கள் பரப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் இது குறித்து ஏ ஆர் ரஹ்மானின் மகன் அமீன் தன்னுடைய வருத்தத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் ஒரு குழந்தை புகைப்படமும் தன்னுடைய தந்தையின் புகைப்படத்தையும் சேர்த்து வைத்திருக்கிறார்.

television ar rahman

அதற்கு என் தந்தை ஒரு சாதனையாளர். இசை துறைக்கு அவர் அளித்த பங்களிப்புக்காக மட்டுமல்ல, பல ஆண்டுகளாக அவர் சேர்த்த மதிப்புகள், மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காகவும் அவரை சாதனையாளராகவே பார்க்கப்படுகிறார். அவர் குறித்து தவறான மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதை பார்ப்பது வருத்தம் அளிக்கிறது.

தயவு செய்து இது போன்ற தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்கவும். அவருடைய கண்ணியத்தையும் அவர் நம் அனைவரிடமும் ஏற்படுத்திய நம்ப முடியாத தாக்கத்தையும் போற்றி பாதுகாப்போம் என அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார். அதற்கு நடிகை வினோதினி எல்லோரும் அவரையும் அவருடைய மதிப்புகளையும் அறிவார்கள்.

எதிர்மறையை புறக்கணிக்கவும். இது அனைத்தும் சீக்கிரமாக விலகிவிடும். உங்கள் குடும்பத்தின் மீது எங்களுக்கு மிகுந்த அன்பு இருக்கிறது என்று கூறி இருக்கிறார். அதுபோல பாடகராகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஏடிகே, "அன்பான மகனுக்கு நீங்கள் உதாரணம். அருமையாக சொன்னீர்கள்" என்று பாராட்டி இருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து பல பிரபலங்கள் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் அவருடைய குடும்பத்திற்கு ஆதரவாக கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+