இறப்பதற்கு முன்பு மனோபாலா சொன்ன அந்த வார்த்தை! என்னால் மறக்க முடியலை! சுந்தர் சி உருக்கம்
சென்னை: இறப்பதற்கு முன்பு இயக்குநரும் நடிகருமான மனோ பாலா சொன்ன வார்த்தையை இயக்குநர் சுந்தர் சி உருக்கமாக தெரிவித்துள்ளார். இன்று வரை அவர் கூறிய வார்த்தைகளை என்னால் மறக்க முடியவில்லை என்றும் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் என்றால் அவர் சுந்தர் சி. அவரது படங்கள் காமெடியில் கலக்கும். பேய் படமாக இருந்தாலும் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் இருக்கும்.

உள்ளத்தை அள்ளிதா, முறைமாமன், மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக, அருணாசலம், கலகலப்பு உள்ளிட்ட 24-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு அரண்மனை எனும் பேய் படத்தை இயக்கினார். இதைத் தொடர்ந்து அரண்மனை 2, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் அரண்மனை 4 எனும் படத்தையும் இயக்கியுள்ளார்.
இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்கிய மதகஜராஜா எனும் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என மிகவும் பிஸியாக வலம் வருகிறார் சுந்தர் சி. இவரிடம் சில படங்கள் கைவசம் உள்ளன.

மதகஜராஜா படத்தில் மனோபாலா நடித்துள்ளார். இந்த நிலையில் அரண்மனை புரமோஷன் நிகழ்ச்சியில் மனோபாலா குறித்து உருக்கமான விஷயத்தை சுந்தர் சி பேசியிருந்தார். அவர் பேசுகையில் அரண்மனை 4 படத்தில் மனோபாலா நடிக்காதது மிகப் பெரிய இழப்பு.
இந்த படத்தில் அவருக்கென ஒரு முக்கியமான கேரக்டர் இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் மனோபாலாவிடம் இருந்து ஒரு பெரிய மெசேஜ் வந்தது. அவர் கூறுகையில், "நான் மருத்துவமனையில் இருக்கிறேன். என்னால் உனக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது. எனவே இந்த படத்தில் (அரண்மனை 4) என்னால் நடிக்க முடியாது.

எனக்கு பதிலாக அரண்மனை 4 படத்தில் வேறு ஒருத்தரை நடிக்க வைத்துக் கொள். நான் ரொம்ப நாள் இருக்கமாட்டேன்" என கூறியிருந்தார். அதை படித்ததுமே எனது மனம் நொறுங்கிவிட்டது. அவர் கூறிய அந்த வார்த்தையை என்னால் மறக்கவே முடியவில்லை என சுந்தர் சி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
மனோபாலா இயக்குநர் பாரதிராஜாவுடன் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு மே 3 தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 69. இதுவரை மனோபாலா 40 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதுவரை 175 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications