ஓடிடியில் அரண்மனை 4.. அநியாயம் பண்றீங்களேப்பா.. குமுறும் ரசிகாஸ்!
சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் உருவான "அரண்மனை 4" திரைப்படம் ஜூன் 21ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தில் சுந்தர் சி, தமன்னா பாட்டியா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோடை விடுமுறையில் ஹாரர் ஜானரில் ரிலீசான இப்படம் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் 100 கோடி வசூலை தாண்டியதாக கூறப்படுகிறது.
படத்தின் ஆரம்பத்தில் 20 நிமிடங்களும், படத்தின் கடைசி அரை மணி நேரமும் தவிர பிற பகுதிகள் ரொம்பவே ஸ்லோதான். ஆனாலும் போட்டிக்கு பெரிய படம் இல்லை என்பதால் 100 கோடி என்ற அந்த ரிப்போர்ட்டை பலரும் ஏற்றுக்கொண்டனர். இதனிடையே அதோ இதோ என சொல்லி இழுத்து ஒரு வழியாக, ஹாட்ஸ்டாரில், நேற்று படம் ரிலீஸ் ஆனது. புதிய படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் திரைப்படத்தை பார்த்து வந்தனர். ஆனால், புதிய திரைப்படம் என்பதால், ஹாட்ஸ்டார் தளம் அடிக்கடி விளம்பரங்களை ஒளிபரப்புவதாக ரசிகர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

ஈடுபாடு முக்கியம்: முக்கியமான காட்சிகளில் விளம்பரங்கள் வருவதால், படத்தின் ஈடுபாடு பாதிக்கப்படுவதாகவும், படத்தை ரசிக்க முடியவில்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, படத்தின் முக்கிய காட்சிகளில் விளம்பரங்கள் வரும்போது, பார்வையாளர்கள் படத்தின் ஈடுபாட்டை இழந்து விடுகின்றனர். இது ஒரு ஹாரர் திரைப்படம் என்பதால், விளம்பரங்கள் படம், கடத்த விரும்பும், பயத்தை இந்த விளம்பரங்கள், குறைத்து விடுகிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அரண்மனை 4 விமர்சனம்: முதல் பாதி ப்ளஸ், காமெடி மிஸ்! படம் எப்படி இருக்கு?
திடீர் விளம்பரங்கள்: ஹாரர் திரைப்படங்கள் பார்வையாளர்களை கதையோடு ஒன்றி பார்க்க வேண்டிய ஒன்றாகும். முக்கியமான காட்சிகளில் விளம்பரங்கள் வந்ததால், படம் பார்க்கும் அனுபவம் பாதிக்கப்பட்டது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஓடிடி தளங்களில் விளம்பரங்கள் இருப்பது வழக்கம் என்றாலும், அளவுக்கு மீறி விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவது ரசிகர்களுக்கு எரிச்சலூட்டும் விதமாக உள்ளது. சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை பதிவிட்டுள்ளனர். "படத்தை ரசிக்க முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. விளம்பரங்களை குறைக்க வேண்டும்" என்று ஒரு ரசிகர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். "விளம்பரங்களை குறைக்க வேண்டும்", "முக்கியமான காட்சிகளில் விளம்பரங்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று ஹாட்ஸ்டாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
புதிய படம்: இந்த விவகாரம் குறித்து ஹாட்ஸ்டார் தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. பொதுவாக ஓடிடி தளங்களில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது விளம்பரங்கள் அதிகமாக இருக்கும். சிறிது காலத்திற்கு பின் விளம்பரங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். அரண்மனை 4-ல் அளவுக்கு மீறி விளம்பரங்கள் இருந்தால், அது ரசிகர்களின் பார்வை அனுபவத்தை பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஹாட்ஸ்டார் தரப்பு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, ரசிகர்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் கதை: கதாநாயகன் மற்றும் அவரது குடும்பம் ஒரு பேய் வீட்டில் குடியேற, அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களால் அவர்கள் தவிக்கிறார்கள். படத்தின் பலம் அதன் ஒரு சில விஷுவல் எஃபெக்ட்ஸ். பேய்கள் மற்றும் பேய் வீடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்னணி இசையும் படத்திற்கு உயிர் ஊட்டுகிறது. ஆனால், கதைக்களம் புதுமையானது அல்ல. முந்தைய "அரண்மனை" படங்களை பார்த்தவர்களுக்கு, இந்த படம் அதே டெம்ப்ளேட் என்றுதான் தோன்றும். காமெடியிலும் சொதப்பல்தான். இருப்பினும் தமன்னா தனி ஒருவராக தனது நடிப்பால் படத்தை தாங்கி நிறுத்தியிருப்பார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications