Aranmanai Kili Serial: அழகான புடவை.. பொட்டு.. ஆனாலும் என்னவோ மிஸ்ஸிங்!
சென்னை: பொறுமைக்கு உதாரணமாக பெண்களை சொல்வார்கள், அதே பெண்களுக்கு குடும்பத்தில் பெருமை சேர்ப்பதும் இந்த பொறுமைதான். ஆனால், எல்லா சமயத்திலும் பொறுமையாக இருந்துவிட முடியாது இல்லையா!
ஆனால், விஜய் டிவி அரண்மனை கிளி சீரியலின் ஜானு இந்த ரகம்தான். எப்போதும் அசாத்திய பொறுமை என்று. ஒரு வேளை அவள் பொங்க வேண்டிய நேரம் இன்னும் வரவில்லையோ என்னவோ.
யார் பந்து போட்டாலும் கேட்ச் பிடிப்பது போல, யார் குதர்க்கமாக தன்னிடம் பேசினாலும் நழுவி சென்று, அவர்களே அறியாதபடி மூக்கை உடைத்து விட்டு செல்வதில் கெட்டிக்காரியாக வலம் வருகிறாள் ஜானு.

அருணுக்கு ஆர்த்தி
வீட்டில் கணவனின் தம்பி அருணுக்கு,ம், ஆர்த்திக்கும் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்க, ஜானுவிடமிருக்கும் நாலைந்து நல்ல புடவைகளில் எதை உடுத்திக் கொள்வது என்று அவளுக்கு குழப்பம்.. கணவன் அர்ஜுனிடம் சென்று எதை சார் உடுத்திக்கறது என்று கேட்க, அவனுக்கு எந்த புடவையும் பிடிக்கலை. எல்லாமே பழசா இருக்கு ஜானுன்னு சொல்றான்.

பரம்பரை புடவை
இதை பார்த்துக் கொண்டு இருந்த மீனாட்சி அம்மா அர்ஜுனை அழைத்து, இது நம்ம பரம்பரை புடவைக்காரர் நெய்து கொடுத்த பட்டுப் புடவை. இதை ஜானுகிட்டே குடுத்து கட்டிக்க சொல்லுன்னு சொல்றாங்க. அவனும் ஜானுவிடம் வந்து கொடுக்க, அவளுக்கு மீனாட்சி அம்மாதான் குடுத்தாங்க என்று சொல்வதை நம்பவே முடியலை. .

ஏதோ மிஸ்ஸிங்
பரம்பரை பட்டுப் புடவையை உடுத்திக் கொண்டு ஜானு அழகாக வர, அதைப்பார்த்த அர்ஜுன், ஜானு இங்கே வா வந்து உட்காருன்னு கூப்பிடறான். சார், நிறைய வேலை இருக்கு சார்.. நான் போறேன்னு ஜானு சொல்ல, அதுக்குத்தான் ஆட்கள் இருக்கண்களே ஜானு. புடவை நல்லா இருக்கு. பொட்டு கூட மேட்சா இருக்கு.. ஏதோ மிஸ்ஸிங் ஜானுன்னு சொல்றான்.

எல்லாமே ஓகேதான்
என்ன சார் சொல்றீங்க..பூ, வளையல் எல்லாமே இருக்கே.என்ன சார் மிஸ்ஸிங்.. வேணும்னே என்னை வம்புக்கு இழுக்கறீங்க சார்னு சொல்ல, உன் நகத்தை பாரு. இந்த பாலீஷ் நல்லா இல்லை புடவைக்கு மேட்சா நான் நக பாலீஷ் போட்டுவிடறேன் இருன்னு சொல்றான்.

இவர்களா விவாகரத்து கேட்கிறார்கள்
அவளும் வெட்கத்தில் முகம் சிவந்து, மன மகிழ்ச்சியோடு தனது கையை அவன் மடி மீது வைத்து அர்ஜூன் முகத்தை பார்க்கிறாள். அர்ஜுன் ஜானுவின் கையை தனது கையில் தாங்கி விரல்களுக்கு நக பாலீஷ் போட்டுவிடுகிறான். இப்போது சொல்லுங்கள், இவர்களா விவாகரத்து செய்து பிரியப் போகும் தம்பதி?
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications