Aranmanai Kili Serial: போறாளே.. ஜானு பொலபொலவென்று கண்ணீர் விட்டு..!
சென்னை: கணவனுக்காக தனது உயிரை காணிக்கையாக்க, அர்ஜுனை அழ விட்டு, தானும் பொலபொலவென்று கண்ணீர் விட்டபடி சித்தர் அழைத்த கோயிலுக்கு போகிறாள் ஜானு.
உன் புருஷன் கையால உன் கழுத்தில் மாலையைப் போட்டுக்கிட்டு வான்னு சொல்லிட்டு போறார் சித்தர்.அர்ஜுன் ஜானுவை விட மாட்டேன்னு அழுது அடம் பிடிக்கிறான்.
இவளும் கணவனைப் பிரிய மனசில்லாமல் பொலபொலவென்று கண்ணீர் விட்டபடி சித்தர் அழைத்த இடத்துக்குப்போகிறாள்..

கடைசி மாலை
சார் என் கழுத்தில் முதல் மாலையை நீங்கதான் போட்டீங்க. இப்போ கடைசி மாலையையும் போட்டு விடுங்க சார் சந்தோஷமா போறேன்னு ஜானு சொல்ல அழுகிறான் அர்ஜுன். உன்னை விட்டுட்டு நான் எப்படி வாழ்வேன் ஜானு என்று அழ, வாழப் பழகிக்கோங்க சார்னு சொல்றா ஜானு.

புன்னகை மன்னன்
கடைசியா உங்க முகத்தை மனசில நினைச்சுகிட்டே நான் போகணும் சார்.இப்படி அழு மூஞ்சியா உங்க முகத்தை வச்சுக்காதீங்க. சிரிச்ச முகமா என்னை பாருங்க சார்னு புன்னகை மன்னன் படத்தில் கமலிடம் ரேகா கேட்பது போல கேட்கிறாள்.

மாலையும் கழுத்துமாக
மாலையும் கழுத்துமாக கண்ணீருடன் அர்ஜுனின் கையை விட்டுவிட்டு நான் போறேன் சார்னு சொல்லிட்டு அர்ஜுன் அழ அழ போகிறாள் ஜானு. சாமி வந்துட்டேன்..என்னை காணிக்கை ஆக்குங்கன்னு ஜானு சொல்ல, சித்தர் உடுக்கை அடிக்க ஆரம்பிக்கிறார்.

உடல் நிறம்
ஜானு கண்களை மூடி நிற்க அப்படியே மயக்கமாகி இலைதழை படுக்கையில் விழுந்துடறா. அவள் உடல் காலில் இருந்து கழுத்து வரை நீல நிறமாக மாறுகிறது. அது சிவனின் ஆலகால விஷம் கொண்ட பாம்பு தீண்டிய விஷம் என்று சித்தர் சொல்கிறார். அர்ஜுனும் அந்த இடத்தைத் தேடி வந்துட சித்தர் போ போ என்று விரட்டுகிறார்.
இன்றைக்கும் முடிவு தெரியலை!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications