Aranmanai Kili Serial: என்ன கொடுமை இது.. ரத்தத்தின் நிறம் சிவப்பு இல்லையா?
சென்னை: வர வர சீரியல்களில் லாஜிக் இருப்பதில்லை. சரி அதுதான் போகட்டும் விட்டு விடலாம் என்று பார்த்தால் மேஜிக் நடக்கிறது. இதை மக்கள் ரசித்து பார்க்கிறார்கள் எனும்போது மேஜிக் நடந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.
சித்தர்கள் சிவ பக்தர்களாக இன்றும் இருக்கிறார்கள். காசி, திருவண்ணாமலை போன்ற புண்ணிய தலங்களில் மட்டும் இல்லாமல் சில மனிதர்களுக்கும் அன்றாட வாழ்வில், ஏதோ ஒரு வகையில் வந்து போயுள்ளதாக கூற கேள்விப் பட்டும் இருப்போம்.
இதனால் மட்டும் அல்லாமல், தெய்வ பக்தி, வாழும் சாமியர்கள் மீது பற்று கொண்டவர்கள் மேஜிக் போன்ற காட்சிகள் சினிமாவிலோ, சீரியலிலோ வந்தால் தங்களுக்குள் கூட கேள்வி கேட்காமல் ரசித்து பார்க்கிறார்கள்.

அரண்மனை கிளி
விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் சித்தர் ஒருவர் வருகிறார். என் உயிரை எடுத்துக்கோ, என் புருஷன் உயிரை காப்பாத்துன்னு சொல்லித்தானே வாசுகி அம்மா பாம்பிடம் வந்து பூஜை செய்தே.. இப்போ உன் புருஷன் நடக்க ஆரம்பிச்சத்தும் மறந்துட்டியான்னு ஜானுவிடம் சித்தர் மிரட்டறார்.

நல்லா நடக்கட்டுமே
இல்லை சாமி என் புருஷன் நல்லா நடக்கட்டுமேன்னு இருந்தேன்.நான் மறக்கலைன்னு ஜானு சொல்ல, நீ நடக்கணும்னு தான் வேண்டிக்கிட்டே..நல்லா நடக்கணும்னு வேண்டிக்கலைன்னு சித்தர் மீண்டும் மிரட்டறார்.போகும் இடமெல்லாம் வந்து, வா வான்னு கூப்பிடறார்.

சித்தருடன் ஜானு
ஜானுவும் சித்தருடன் போக, அங்கு வனத்தில் ஒரு சிவன் சிலை. அதன் அருகில் நின்று இப்போது உன்னை ஒரு நாகம் சிவனின் ஆலகால விஷத்துடன் வந்து உன்னைத் தீண்டும். கொஞ்சம் கொஞ்சமாக உன்னுள் விஷம் இறங்கி, முப்பதாவது நாள் உன் உயிர் போகும்.அதற்கு முன் நீ இங்கு வந்துவிடு என்று கட்டளையிடுகிறார்.

தீண்டுகிறது பாம்பு
சொன்னபடி ஜானு கண்மூடி நிற்க, ஒரு நாகம் அவனது காலை தீண்டிவிட்டு செல்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவளது உடலில் விஷம் ஏறுவதை, முதலில் நகம் ஊதா நிறத்தில் மாறுவதாக காண்பித்து இருக்காங்க. அதை நெயில் பாலீஸ் என்று மற்றவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

ரத்தம் சோதனை
ஜானுவுக்கு ஜுரம் வந்து ஆஸ்பிடலுக்கு அழைச்சுட்டு போறா விஜயா .அங்கு ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்ல, ஜானு மாட்டேன் என்று சொல்கிறாள்.. விஜயாவின் பிடிவாதத்தால் ரத்த பரிசோதனைக்கு ஒப்புக் கொண்டாலும்,தானே தனது கையை குத்திப் பார்க்க
நிஜமா ரத்தம் ஊதா நிறத்தில் இருக்குதுங்க. இது சிவனின் ஆலகால விஷமாம்! சொல்வதற்கு ஒன்றுமில்லை!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications