Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடக்கொடுமையே! ஏர்போர்ட்டில் அறந்தாங்கி நிஷாவுக்கு நடந்த அவலம்.. கொந்தளிக்கும் பிரபலங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்த அறந்தாங்கி நிஷா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஏர்போர்ட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது ஒரு நபர் தன்னுடைய நிறத்தை சொல்லி தன்னை அவமானப்படுத்தியதை வேதனையோடு பகிர்ந்திருந்த நிலையில் அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

பொதுவாக உருவ கேலி என்பது எல்லா இடத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒல்லியாக இருந்தால் என்னாச்சு ஒல்லியா இருக்கிறீங்க? எதுவும் நோயா என்று கேட்பது, கொஞ்சம் குண்டாக இருந்தால் என்ன ஆச்சு இவ்வளவு குண்டாக இருக்கிறீர்கள்? உடம்பை குறைக்கிற வேலைய பாருங்க உங்களுக்கு எதுவும் நோய் இருக்கிறதா என்று கேட்கிறது, கருப்பா இருக்கிறவங்க கிட்ட இவ்வளவு கருப்பா இருக்கிறீங்களே? என்று அவங்களுடைய மனசை நோகடிப்பது...

Television Vijay TV Aranthangi Nisha

கட்டையா இருந்தாலும் சரி, நெட்டையா இருந்தாலும் சரி எப்படி இருந்தாலும் சரி பார்ப்பவர்கள் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக ஒருவருடைய உடல் மற்றும் அவர்களுடைய பிரச்சனைகளை பற்றி தான் முதல் வேலையாக பேசுகிறார்கள். பலரைப் பார்க்கும்போது ஏன்டா இவர்களைப் பார்த்தோம் என்று நொந்து போகிற அளவிற்கு நம்மை விசாரிக்கிறோம் என்கிற பெயரில் மனதை காயப்படுத்துறவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

அக்கறையாக பேசுவது போல என்னாச்சு ஏன் இப்படி மாறி போயிட்டீங்க என்பது பலருடைய கேள்வியாக இருக்கும். ஒரு சிலர் இந்த மாதிரி கேள்விகளுக்கு அசால்ட்டாக பதிலடி கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். ஆனால் ஒரு சிலரால் இப்படிப்பட்டவர்களிடம் சிக்கி அவர்களை தாண்டி வருவது பெரிய வேதனையாக இருக்கும். இதுபோல ஒரு சம்பவத்தில் தான் நடிகை அறந்தாங்கி நிஷாவுக்கும் இன்று பாதிக்கப்பட்டிருக்கிறார்.

பொதுவாக மக்கள் மத்தியில் கலராக இருந்தால் மட்டும்தான் அழகு என்ற நினைப்பு பலருடைய மனதில் ஆள் வேரூன்றி இருக்கிறது. அதனால் தான் பல பியூட்டி கிரீம்களால் முகத்தை வெள்ளையாக மாற்றுகிறோம் என்று அட்வர்டைஸ்மெண்டை பார்த்து எவ்வளவு விலை கொடுத்தும் அந்த க்ரீமை வாங்கி பணத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாருமே பலரால் காயப்பட்டவர்களும், அவமானப் பட்டவர்களாக தான் இருப்பார்கள். அதுபோலத்தான் இன்று நடிகை அறந்தாங்கி நிஷா ஏர்போர்ட்டில் நடந்து வந்து கொண்டிருக்கும்போது அவரிடம் ஒரு நபர் நீங்கள் விஜய் டிவி நிஷா வா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அறந்தாங்கி நிஷா ஆமாம் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு மீண்டும் அவர் நீங்க அறந்தாங்கி நிஷா வா என்று கேட்டு அதிர்ச்சியோடு பார்ப்பது போன்றே பார்த்துக் கொண்டிருந்தாராம்.

அதற்கு அறந்தாங்கி நிஷா என்ன ஆச்சு ஏன் இப்படி கேக்குறீங்க என்று கேட்க நாங்க இவ்வளவு நாளா எப்படி எல்லாம் ஏமாந்து போயிருந்திருக்கோம். டிவில உங்களை அவ்வளவு கலரா காட்டுறாங்க ஆனா நிஜத்தை நீங்க இவ்வளவு கருப்பா இருக்கீங்க? இப்படி இருக்கிற உங்களை அந்த டிவில அவ்வளவு அழகாக காட்டுறாங்க... என்று மீண்டும் மீண்டும் அந்த நபர் அறந்தாங்கியின் நிஷாவின் நிறத்தை வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தாராம்.

அதற்கு அறந்தாங்கி நிஷா கருப்பாக இருப்பதில் ஒன்று அசிங்கம் இல்லை என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம். உள்ளுக்குள் அதிகமாக கோபம் வந்தாலும் அதை வெளியே காட்டவில்லை, அதற்கு காரணம் யாரையும் உணர்வு ரீதியாக கஷ்டப்படுத்த கூடாது என்பது என்னுடைய விருப்பம் ஏனென்றால் நான் அப்படி பல இடங்களில் அவமானப்பட்டு கஷ்டப்பட்டு இருக்கிறேன். அதை நான் இன்னொருவருக்கு செய்ய விரும்பவில்லை என்று வந்து விட்டேன் என அறந்தாங்கி நிஷா கூறியிருக்கிறார்.

இது குறித்து அறந்தாங்கி நிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று நடந்த இந்த நிகழ்வை பற்றி பேசி இருக்கிறார். அதோடு எவ்வளவோ வளர்ச்சி வந்தாலும் இந்த மாதிரி மக்களின் மன‌நிலை இன்னும் மாறவில்லை. இவ்வளவு கேவலமான மனநிலையோடு இருப்பவர்களிடம் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அந்த வீடியோவில் அறந்தாங்கி நிஷா பேசியிருந்த நிலையில் அவருக்கு அனிதா சம்பத், ரேகா நாயர் உட்பட பல சின்னத்திரை பிரபலங்களும் அறந்தாங்கி நிஷாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அறந்தாங்கி நிஷா தன்னுடைய சொந்த பணத்திலிருந்து புயல், மழை பாதிப்பின் போது பல ஏழைகளுக்கு உதவி செய்து இருக்கிறார். அதுபோல லாரன்ஸ் மாஸ்டரின் மாற்றம் என்று சேவையில் இணைந்து பலருக்கு உதவி செய்து வருகிறார். ஆனாலும் ஒரு சிலர் அவருடைய நல்ல குணத்தை புரிந்து கொள்ளாமல் வெளியே இருக்கும் நிறத்தை வைத்து இவ்வளவு கேவலமாக பேசுவது தவறு என்பது பலதரப்பட்டவர்களின் கருத்தாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+