தேவையில்லாம பேசாதீங்க! கண்டனம் தெரிவிக்கிறேன்.. பிரியங்கா- மணிமேகலை! அறந்தாங்கி நிஷா பேட்டி
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சினைக்கு அறந்தாங்கி நிஷா தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதில் பிரியங்காவிற்கு எதிராக பர்சனல் அட்டாக் நடப்பது குறித்து என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
கடந்த சில வாரங்களாகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே இருக்கும் பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டது. மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு காரணம் பிரியங்கா என்று போட்ட போஸ்ட் தான் என இணையத்தில் பெரிய அளவில் கருத்துகளை பெற்றது.

ரசிகர்கள் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்து வந்த நிலையில் விஜய் டிவி பிரபலங்கள் பிரியங்காவிற்கு ஆதரவாக வீடியோக்கள் மற்றும் போஸ்ட்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மணிமேகலை இதுவரைக்கும் இரண்டு வீடியோ வெளியிட்டிருக்கும் நிலையில் பிரியங்கா இது குறித்து எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்து வருகிறார்.
இந்த பிரச்சனை தற்போது சமூக வலைதளத்தில் குறைய தொடங்கி இருக்கும் நிலையில் அறந்தாங்கி நிஷா இன்று பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடம் இது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது. அறந்தாங்கி நிஷா விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு இப்போது தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் உடன் அவருக்கு நல்ல நட்பு இருக்கும் நிலையில் இவர் யாருக்கு சப்போர்ட் செய்ய போகிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு அறந்தாங்கி நிஷா நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர்கள் இருவருக்கும் பிரச்சனை நடந்தபோது இல்லை.

அதனால் யார் மீது தப்பு யார் மீது சரி என்று என்னால் சொல்ல முடியாது. அதே நேரத்தில் நான் அவர்கள் இருவரிடமும் தனிப்பட்ட முறையில் எதுவும் பேசவில்லை. அவர்களிடம் அங்கு என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்து கொண்டால்தான் நான் அவர்களைப் பற்றி கருத்து சொல்ல முடியும். ஆனால் எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது. எதற்காக தேவையில்லாமல் சிலர் இணையத்தில் தவறாக பேசுகிறார்கள் அந்த தெரியவில்லை.
இரண்டு பெண்கள் அவர்களுடைய வேலை விஷயமாக தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய வேலையைப் பற்றி வேண்டுமென்றால் பேசிக் கொள்ளலாம். ஆனால் அதை விட்டுவிட்டு ஒரு பெண்ணின் குடும்ப வாழ்க்கை மற்றும் பர்சனல் வாழ்க்கையைப் பற்றி பேசுவது ரொம்ப தவறு. அது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு நான் கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறேன்.
நான் எப்போதுமே பெண்களுக்கு ஆதரவாக பேசுவேன். இப்போதும் ஒரு பெண்ணின் கேரக்டர் குறித்து தவறாக பேசுவதால் நான் இந்த கருத்தை தெரிவிக்கிறேன். அதனால் நான் இருவரில் யார் மீது தப்பு என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் எண்ணம்போல்தான் வாழ்க்கை அமையும் என்று நான் கூறுகிறவள். நான் விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். என் மீது யாரும் பொறாமைப்பட்டது கிடையாது என்று அறந்தாங்கி நிஷா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications