என்னது அறந்தாங்கி நிஷா தாசில்தாரா..? ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து அசத்தல்
சென்னை: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அறந்தாங்கி நிஷா சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் சின்னத்திரையில் அறந்தாங்கி நிஷாவுக்கு எதிர்பாராத வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் முக்கியமான கேரக்டர் தான்.

அந்த வகையில் முன்னணி சீரியலான தென்றல் வந்து என்னைத் தொடும் எனும் சீரியலில் அறந்தாங்கி நிஷாவின் அறிமுகம் வேற லெவலில் வந்திருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்ற அறந்தாங்கி நிஷா தன்னுடைய காமெடி திறமை காரணமாகவே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், சிறப்பு போட்டியாளராகவும், நடுவராகவும் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சமீப காலமாக பல ஹிட்டான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் முக்கியமான கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து இருநதார். அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில்
முக்கிய கேரக்டரில் நேற்றைய எபிசோடில் அறிமுகமாக இருக்கிறார்.
அதாவது தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் வெற்றிக்கு சுடர் தன்னுடைய மகள் என்பது தெரிந்து அபி மீது மீண்டும் காதல் வயப்படுகிறார். அதோடு மீண்டும் வெற்றியுடன் சேர வேண்டும் என்று முடிவில் இருக்கிறார். அதே நேரத்தில் வெற்றிக்கு உண்மை தெரியும் என்று தெரிந்து விட்டால் அபி சுடரை எங்கேயாவது கூட்டிட்டு போய் விடுவார் என்ற பயத்தில் யாரும் உண்மையை சொல்லாமல் இருக்கின்றனர்.

இப்படியாக இருக்கும்போது வெற்றியும் அபியும் வெற்றியின் கிராமத்திற்கு செல்கின்றனர். அப்போது அங்கு காதல் தம்பதிகளாக அறந்தாங்கி நிஷா மற்றும் சிங்கப்பூர் தீபன் இருவரும் என்ட்ரி கொடுக்கின்றனர். அதுவும் பைக்கில், "காதல் பிசாசே காதல் பிசாசே" என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியப்படியே வருகின்றனர். அப்போது அறந்தாங்கி நிஷா," நான் குரூப் ஒன் எக்ஸாமுக்கு படிச்சி பாஸாகி தாசில்தார் ஆகியிருக்கேன்" என்று சிங்கப்பூர் தீபனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications