ஷோவே இல்லை மாகாபா...கெஞ்சிய அறந்தாங்கி நிஷா!
சென்னை: விஜய் டிவியின் Mr & Mrs சின்னத்திரை சீசன் 2 நிகழ்ச்சியை கடந்த 2 வாரங்களாக மகாபா மட்டுமே தொகுத்து வழங்கி வந்தார்.இந்த வாரம் முதல் அறந்தாங்கி நிஷாவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார்.
எதுக்கும்மா இங்கே வந்தேன்னு மகாபா கேட்டபோதுதான் ஷோவே இல்லை மகாபா.. என்னையும் கொஞ்சம் ஆட்டத்தில சேர்த்துக்கோ என்று நகைச்சுவையாக கெஞ்சினார்.
இவர் ரக்ஷனுடன் சேர்ந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார்.பின்னர் இவருக்கு குழந்தை பிறந்து ஓய்வில் இருந்தார். இப்போது மீண்டும் விஜய் டிவி பக்கம் வந்துள்ளார்.

Mr & Mrs சின்னத்திரை சீசன் 2
கடந்த முறை Mr & Mrs சின்னத்திரை சீசன் 1 இல் நிஷா தனது கணவருடன் நிகழ்ச்சியின் பங்கேற்பாளராக கலந்துக்கொண்டனர். அதற்கு முன்பு விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்று அனைவர் மத்தியிலும் புழப்பெற்று இருந்தார். இவர் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது முதல் விஜய் டிவி இவருக்கு எதாவது ஒரு வாய்ப்பை அவ்வப்போது வழங்கி வருகிறது.

மகாபா மட்டுமே
Mr & Mrs சின்னத்திரை சீசன் 2 நிகழ்ச்சியை மகாபா மட்டுமே தொகுத்து வழங்கி வந்தார். நடுவர்களாக கோபிநாத், திவ்யதர்ஷினி ஆகியோர் பங்கேற்று உள்ளனர். இந்த நிலையில்தான் அறந்தாங்கி நிஷாவும் நிகழ்ச்சியை மகாபாவுடன் தொகுத்து வழங்க வந்துள்ளார்.

காய்கறி வண்டி
காய்கறி வண்டியை குடுத்து இங்கே எதுக்கும்மா உன்னை அனுப்பி வச்சாங்க என்று மகாபா கேட்க. இந்த நிகழ்ச்சிக்கு ஆங்கரா வந்து இருக்கேன் மகாபா என்று கூறினார் நிஷா...ஏம்மா காய்கறி விக்கற மாதிரி இருக்கே.. இது உனக்கு சரி வராது கிளம்பு கிளம்பு என்று மகாபா சொன்னார்.

ஷோ இல்லை மகாபா
மகாபா.. குக்கு வித் கோமாளி ஆங்கரா இருந்தேன்.. இப்போ முடிஞ்சு போச்சு...சூப்பர் சிங்கர் போலாம்னு போனேன்..சரிகமபரிசன்னு இழுக்கணுமாம்.. முடியாதுன்னு துரத்தி விட்டுட்டாங்க..சரி Mr & Mrs சின்னத்திரை சீசன் 2 ஜட்ஜா போறேன்னு சொன்னேன்னு நிஷா சொல்ல, ஏம்மா எங்களுக்கே ரெண்டு வாரமா வேலை இல்லம்மா என்றார் திவ்யதர்ஷினி. அதுக்குத்தான் மகாபா ஆங்கரா வந்து இருக்கேன்.. ஷோவே இல்ல மகாபா.. Mr & Mrs சின்னத்திரை முதல் சீசன்தானே எனக்கு வாழக்கை கொடுத்துச்சு.. இப்போதும் வேணும் மகாபா என்று சொன்னார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications