யாருங்க இது? அறந்தாங்கி நிஷாவா! ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே!
சென்னை: 14 கிலோ வரை ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போயிருக்கிறார் அறந்தாங்கி நிஷா! அவருக்கு என்ன ஆனது, எப்படி உடல் எடையை குறைத்தார்?
நகைச்சுவையில் மனோரமா, கோவை சரளா, உள்ளிட்டோரை தவிர யாராலும் சாதிக்க முடியாது என இருந்த போது என்னால் முடியும் என அறங்தாங்கியில் இருந்து வந்தவர்தான் நிஷா.

இவருடைய தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கும். இவர் கருப்பாகவும் சற்று குண்டாகவும் காணப்படுவார். ஆனால் திறமையில் இவரை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது. அந்த அளவுக்கு ஸ்டான்ட் அப் காமெடியில் கலக்கினார்.
கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பழனி, நிஷா காம்பினேஷன் நன்றாக இருக்கும். அது போல் ராமருடன் இணைந்தும் நிஷா நிறைய ஷோக்களை செய்துள்ளார். தற்போது விஜய் டிவியின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டார். இவர் ராமர் வீடு, மிஸ்டர் அன்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
அது போல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். சின்னத்திரையில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த இவர், மாரி 2, ஆண் தேவதை, கோலமாவு கோகிலா, திருச்சிற்றம்பலம், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அது போல் ராயனிலும் நடித்துள்ளார்.
நிஷா நடித்தோம், சம்பாதித்தோம் என இல்லாமல் சமூக சேவைகளையும் செய்து வருகிறார். மிக்ஜாம் புயலின் போது நிஷா நிறைய பேருக்கு உதவிகளை செய்துள்ளார். சினிமா பின்னணியே இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்துள்ளார் நிஷா. இவர் விஜய் டிவியில் நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கி வருகிறார்.
கலக்க போவது யாரு சீசன் 10 நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தற்போது அதிக உடல் எடை கூடி காணப்படுகிறார். இந்த நிலையில் கடுமையான டயட்டில் இருந்து 50 நாட்களில் 14 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். அவர் பழைய புகைப்படத்தையும் உடல் எடை குறைத்தவுடன் இருக்கும் புகைப்படத்தையும் போட்டு ஒப்பிட்டு காட்டியுள்ளார். ஏதோ ஒரு அகாதெமியில் சேர்ந்து இவர் தனது உடல் எடையை டயட் மற்றும் எளிய உடற்பயிற்சிகள் மூலம் குறைத்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications