சும்மாவே ஜங்கு சங்குன்னு ஆடும்.. நிஷாவைத் தூக்கி வைத்து கொஞ்சி மகிழும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் புறம் பேசக்கூடாது என்று ஒவ்வொரு சீசனிலும் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த அறந்தாங்கி நிஷா என்னமா இருக்காங்க என்று பேச ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள்.

அவர் பேசுவது குறித்து பிக்பாஸ் ஒன்னுமே சொல்லலையே. ஆனா இவ்வளவு நாளா நீங்க பேசிக்கிட்டு இருந்ததுதான் பொய்யா என்று நேற்றைய எபிசோடில் அறந்தாங்கி நிஷா பேசியதை வைத்து மீம்ஸ்கள் போட்டு குவிக்கிறார்கள் நெட்டிசன்கள்.

சும்மாவே நாங்க ஆடுவோம் இப்போ சலங்கை வேற கட்டிவிட்டு இருக்கு கேட்கவா வேணும் என்று நிஷாவிற்கு விதவிதமாக மீம்ஸ்களை போட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

பட்டிமன்றம் டாஸ்க்

பட்டிமன்றம் டாஸ்க்

எல்லாமே நேத்திக்கு நடந்த டாஸ்க் பற்றித்தான். நேற்றைய டாஸ்க் பட்டிமன்றத்தை வைத்திருந்தார் பிக் பாஸ். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டி நிலவுகிறதா அல்லது பாசமான குடும்பமாக இருக்கிறதா என்று ஒரு பட்டிமன்றத்தை வைத்தனர். அதில் பலர் கொளுத்தி போடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த பிக்பாஸ்க்கு கிடைத்தது என்னவோ பல்பு தான்.

நிஷா பேச்சு சூப்பர்

நிஷா பேச்சு சூப்பர்

ஏதாவது கண்டெண்ட் கொடுத்து கண்டஸ்டன்ட்ஸ் பண்ணுவார்கள் என்று பார்த்தால் எல்லாமே உப்புக்கு சப்பாக தான் இருக்கிறது என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். அதில் நிஷா பேசியது மட்டும் தான் கொஞ்சமாக எடுபடுகிற இருந்தது என்றும் கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள். இந்த வீட்டிற்குள் வந்த நாள் முதலே இவர் அவருடைய கேரக்டரில் தான் இருந்து கொண்டிருக்கிறார் என்று இவருடைய ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறார்கள்.

நீங்கதான் நடிக்கலை

நீங்கதான் நடிக்கலை

நீங்கள் மட்டும்தான் நடிக்காமல் உண்மையான கேரக்டரில் அப்படியே இருந்து கொண்டிருக்கிறீர்கள். இப்படியே லாஸ்ட் வரைக்கும் இருங்க. விளையாட்டில் வெற்றி பெறுகிறோமா இல்லையோ பணத்துக்காகவும் பதவிக்காகவும் உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாதீர்கள் என்று கூறியிருக்கிறார்கள். போனவாரம் இவருக்கும் ஜித்தன் ரமேசும் நடந்த சண்டையில் கூட இவர் ஸாரி கேட்டு செய்த தப்பை புரிந்துகொண்டார்.

ரசிகர்களுக்கு ஹேப்பிதான்

ரசிகர்களுக்கு ஹேப்பிதான்

அதனைச் சுட்டிக்காட்டி இவருடைய ரசிகர்கள் இவருக்கு ஆதரவாக இருக்கின்றார்களாம். அதேபோல தற்போது இவர் பட்டிமன்றத்தில் பேசியிருப்பது வைரலாக பரவி வருகிறது. அதில் இந்த வீட்டிற்குள் அன்பு தான் நிலவுகிறது. போட்டி என்று வந்தால் குடும்பம் குடும்பமாக இருக்காது ஜெயிக்கிற பக்கமா அது பெருசு கிடையாது . அன்பா அவருடைய அவர் அவருடைய கேரக்டரில் வாழ்ந்துவிட்டுப் போயிரனும் என்று சொல்லி இருக்கிறார் .

அழகான மன நிலை

அழகான மன நிலை

அதுமட்டுமல்லாமல் கிராமத்தில் புறம் பேசுபவர்கள் மனநிலையையும் அழகாக அனுபவித்து சொல்லி இருந்தார் .அது அங்கு இருந்த கண்டஸ்டன்டையும் பிக்பாஸ் ரசிகர்களையும் சிரிக்க தான் வைத்திருக்கிறது. இந்த வீட்டிற்குள் இவர் செய்யும் சிறு சிறு சேட்டைகள் தான் கொஞ்சம் சிரிக்கிற மாதிரி இருந்துகொண்டிருக்கிறது. மற்றவர் ஆளாளுக்கு சண்டை போட்டுக்கொண்டு சண்டைக்காட்சிகளை காட்டிக் கொண்டிருந்தனர்.

கிண்டல் ஜாலி சிரிப்பு

கிண்டல் ஜாலி சிரிப்பு

ஆனால் இவர் அடிக்கடி அடுத்தவர்களையும் கிண்டல் பண்ணி சிரித்துக் கொண்டு தன்னை கிண்டல் பண்ணுவார். அவர்களுக்கும் நன்றாக கம்பெனி கொடுத்து இந்த நிகழ்ச்சியை ஒரு சுவாரஸ்யமாக கொண்டு போய்க்கொண்டு இருக்கிறார் . ஆனால் இதுதான் இவரது உண்மையான குணமா ரசிகர்கள் இவரை ஏற்றுக் கொள்வார்களா என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும். எது நடந்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன் என்று ஜாலியாக இருக்கிறார் நிஷா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+