நாளைக்கு ஜெயிலர் திரைப்படம்.. இன்று அறந்தாங்கி நிஷா உருக்கமான பதிவு.. காரணம் அந்த பிரபலம் தானாம்
சென்னை: நடிகர் அறந்தாங்கி நிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
அதைத்தொடர்ந்து தொகுப்பாளராகவும், நடிகையாகவும் தொடர்ந்து கொண்டிருக்கும் அறந்தாங்கி நிஷாவின் வாழ்க்கையில் பெரிய மகிழ்ச்சி கிடைத்து இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

நாளை வெளியாக இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை அறந்தாங்கி நிஷாவும் முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பதாகவும் அது குறித்து மேலும் பல தகவல்களையும் அதில் தெரிவித்திருக்கிறார்.
அறந்தாங்கி நிஷா சாதாரண கிராமத்தில் பிறந்து இருந்தாலும் பல சோதனைகளை தாண்டி தான் இப்ப வரைக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நாளை வெளியாக இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் அறந்தாங்கி நிஷாவும் நடித்திருக்கிறாராம். இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி இருந்தது.
அதில் அறந்தாங்கி நிஷாவின் பெயரும் இடம் பெற்று இருந்தது. அது குறித்து இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், ரொம்ப நன்றி நெல்சன் சார். இந்த இடத்துல என்னுடைய பெயர் இருக்கிறது பார்க்கிறதுக்கு எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அறந்தாங்கியில் இருந்து நான் திரை உலகத்துக்கு போகும் போது என்னை நம்புன என்னுடைய நண்பர்களுக்கும், என் குடும்பத்துக்கும் நன்றி. எனக்கு எப்பவுமே என்னுடைய ஊர் பிடிக்கும். இந்த இடத்தில் அறந்தாங்கி நிஷா என்று பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு.

ஒரு கிராமத்தில் இருந்து கிளம்பும்போது நிறைய விமர்சனங்கள் இப்போது வரைக்கும் அது வந்துட்டு தான் இருக்கு. ஆனா ஒன்னு மட்டும் நம்ம எந்த இடத்துக்கு வேணாலும் போலாம். ஆனால் அந்த துறையை நம்ம உண்மையா காதலிக்கணும். அப்படி காதலிச்சா கண்டிப்பா நமக்கு நல்லதே நடக்கும். நம்ம வேலைக்கு நம்ம உண்மையா இருந்தா, நம்ம வேலை நம்மள கண்டிப்பா நல்லா பாத்துக்கும்.
எப்பவுமே என் கூட நிற்கிற என்னுடைய ஊர் நண்பர்கள், திரையுலக நண்பர்கள், என்னுடைய குடும்பம், என்னுடைய பட்டிமன்ற நண்பர்கள், என்னுடைய சமூகவலைத்தள நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி. அப்புறம் முக்கியமா என்ன விமர்சனம் செய்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்களும், பிரபலங்களும் அறந்தாங்கி நிஷாவிற்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அதோடு அப்போ கோவை சரளா, இப்போ அறந்தாங்கி நிஷா என்று சிலர் பாராட்டியும் வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications