நயன்தாரா கெட்டப்பில் கலக்கும் அறந்தாங்கி நிஷா... கதிகலங்கிப் போன ரசிகர்கள்!
சென்னை: நயன்தாராவின் பாட்டுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டிருக்கும் நிஷாவை பார்த்து பலபேர் பயந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்து விட்டார்களாம்.
வீடியோ தான் ஹைலைட் என்றால் அதைவிட ஹைலைட் அவரைப் பற்றி அவரே கலாய்த்து போட்டிருக்கும் கேப்ஷன் தான் என்கிறார்கள் ரசிகர்கள்.
அடடா இந்த தில்லுக்கு தான் உங்கள ரசிகர்களுக்கு இவ்வளவு பிடிச்சிருக்கு என்று ரசிகர்கள் வாழ்த்துக்களையும் பொழிகிறார்கள். என்ன இருந்தாலும் இவர் ரொம்பவே தைரியசாலிதான்!

இதை யாரும் எதிர்பார்க்கலை
அடடா நிஜமாவே நீஷாதானா!!!? என்று சமூக வலைதள வாசிகளை சற்று நிலைகுலையச் செய்து விட்டார் அறந்தாங்கி நிஷா என்றுதான் சொல்ல வேண்டும்.அறந்தாங்கி நிஷா அவரது ஐடியில் இந்த வீடியோவை போஸ்ட் செய்திருப்பதால் மட்டுமே உடனடியாக அவர் அறந்தாங்கி நிஷா என்று அடையாளம் காண முடிகிறது வேறு ஏதேனும் ஐடியில் இந்த வீடியோவை போஸ்ட் செய்தது இது யாரென்று கண்டுபிடியுங்கள் என்று சொல்லி இருந்தால் கண்டுபிடிப்பது சற்று கடினமாக இருந்திருக்கும். ஏனென்றால் இப்பொழுது அவர் போஸ்ட் செய்து இருக்கும் வீடியோவை பார்த்தால் இவ்வாறு தான் சொல்லத் தோன்றுகிறது.விஜய்டிவி தத்தெடுத்த செலிபிரிட்டிகளில் ஒருவர் அறந்தாங்கி நிஷா, அடிப்படையில் சிறந்த பேச்சாளரான இவர் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்து இருந்தாலும் அதை எல்லாவற்றையும் விட பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவரை ஒருபடி மேலே சென்று மக்களிடம் சேர்த்தது எனக்கூறலாம்

எப்படி இப்படி பள பளக்குது
.பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது அர்ச்சனாவின் அன்பு கேங்கில் இருந்ததால் சற்று எதிர்மறையான விமர்சனங்களை இவர் பெற்றிருந்தாலும் இவரது எளிமையான குணமும் மற்றவர்களிடம் பழகும் விதமும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவரது வெகுளித்தனமான பேச்சுக்கென்றே ஒரு ரசிகர் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது.கலக்கப்போவது நிகழ்ச்சியின் போது யார் எப்படி கலாய்த்தாலும் சிரித்த முகத்துடனே அதை கடந்து செல்லும் நிஷா,அவரது பொறுமையான குணத்திற்காக நல்ல பெயரை வாங்கி இருந்தார். அதன்பிறகு இவர் கலந்து கொண்ட பிக் பாஸ் ஷோ மட்டுமின்றி அதற்கு பிந்தைய ரியாலிட்டி ஷோக்களில் இவர் புலம்புவதும் மற்றவர்களிடம் உரையாடுவதும் தங்கள் பக்கத்து வீட்டில் உள்ள கேரக்டர் போலவே இருப்பதாக பலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். பொதுவாக பார்ப்பதற்கு அழகாக இருப்பவர்களை விட பேசுவதும் பழகுவதும் பக்கத்து வீட்டு கேரக்டர் போல் இருப்பவர்களை எளிதில் ஏற்றுக் கொள்ளும் நம் தமிழ் ரசிகர்கள் அறந்தாங்கி நிஷா வையும் தங்கள் அபிமான செலிபிரிட்டி ஆக ஏற்றுக்கொள்ள தயங்கவில்லை.

ரசிகர்கள் அசந்தே போய் விட்டார்கள்
இவர் அவ்வப்பொழுது தன் கணவர் ரியாஸ் உடனும் தன் குழந்தை ஷபாவுடன் சேர்ந்து உரையாடும் க்யூட்டான வீடியோ சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. வேறு செலிபிரிட்டிகளுடன் யாருடனாவது இணைந்து அவ்வப்போது சில போட்டோக்களை வீடியோக்களை எடுத்து போஸ்ட் செய்து வந்தாலும் சின்ட்ரெல்லா டிரஸ்ஸில் ஆளே அடையாளம் தெரியாமல் தற்பொழுது இவர் போட்டுள்ள வீடியோ பார்த்து ஆச்சரியப் படாதவர்கள் இருக்க முடியாது. இது தொழில்நுட்ப வளர்ச்சியா?? அல்லது தொழில் நுட்பக் கோளாறா!? என்று சிலரை புலம்பும் வைத்துவிட்டது.

அப்படியே ஜொலிக்குதே
"காசு வந்துட்டா காக்கா கூட கலராகிடும்" என்று பருத்திவீரன் படத்தில் சித்தப்பு சரவணன் சொன்ன டயலாக் ஒரு வேளை உண்மையா தான் இருக்குமோ!!என்று தமிழ் ரசிகர்களை யோசிக்கவும் வைத்துவிட்டது.நேராக பார்ப்பதற்கு சற்று கருப்பாக இருக்கும் அறந்தாங்கி நிஷா ஃபுல் மேக்கப்பில் செல்போன் ஆப் உதவியுடன் கலராக மாறி போட்டிருக்கும் வீடியோவை பார்த்து மிரண்ட இணையவாசிகள், எந்த கடையில பெயிண்ட் வாங்கினீங்க?.. என்றும்,எந்த பெயிண்ட் கம்பெனிக்கு விளம்பரம் என்றும்!??கலாய்த்து வருகின்றனர். ஆனால் இவரது ஆதரவு வட்டத்திலுள்ள ரசிகர்களோ, அக்கா உங்களுக்கு கருப்புதான் அழகு என்றும், நீங்க எந்த கலரா இருந்தால் என்ன அக்கா உங்க குணமே உங்களுக்கு அழகு சேர்க்கும் அப்புறம் எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று அக்கறையாக கேட்டும் வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications