அர்ச்சனா வாய் இருக்கே வாயி.. எத்தாத்தண்டி.. அர்ச்சிக்கும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் எல்லா சீசன் களிலும் சண்டைக்கும் காதல் காட்சிக்கும் பஞ்சமில்லாமல் தான் விரு விருப்பாக சென்று கொண்டிருக்கும் .ஆனால் இந்த சீசனில் முழுக்க முழுக்க சண்டையும் மட்டுமே காட்டி ரசிகர்களை பாடாய்ப்படுத்தி வருகிறார்களாம்.

அதிலும் அடிக்கடி ஒவ்வொருவராக அழுது அனுதாபத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ரசிகர்கள் வேதனையோடு வெதும்பி வருகிறார்கள்.

அந்த வரிசையில் புதிதாக இறங்கி இருந்தாலும் நானும் வருகிறேன் என்று என்னால முடியும் என்று அர்ச்சனாவும் அழுது ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

 ஆ ஊன்னா அழுவாச்சி

ஆ ஊன்னா அழுவாச்சி

என்னம்மா இப்படி பண்ணுறீங்களே ஆனா ஊனாண்ணா எல்லாரும் அழுதுக்கிட்டே இருந்தா அதை எப்படித்தான் பாக்குறது எப்பவோ ஒரு தடவை அழுதா பரவாயில்லை இப்படி தினமும் எல்லாரும் அழுதுக்கிட்டே இருந்தா இது சீரியலுக்கு மேல ஜவ்வு போல இழுத்துகிட்டு இருக்கு என்று ரசிகர்கள் குமுறி வருகிறார்கள். நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து ஒவ்வொருவராக அழுதழுது தான் கொண்டிருக்கிறார்கள்.

 சோகத்தில் அர்ச்சனா

சோகத்தில் அர்ச்சனா

அந்த மாதிரி நேற்று பிக் பாஸ் இந்த வார சமையலுக்கு அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் அளவோடுதான் வழங்குவோம் என்று கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் சமையல் எரிவாயு தண்ணீர் போன்றவையும் குறிப்பிட்ட அளவிற்கு தான் வழங்குவோம் என்று கூறிவிட்டார் .இதைக் கேட்டு அங்கு இருந்தவர்கள் ஆளாளுக்கு பேசிக்கொண்டிருந்தனர் இது எப்படி சாத்தியம் என்றும் காரசாரமாக விவாதம் வைத்திருந்தது.

 கடுப்பான சமையல் டீம்

கடுப்பான சமையல் டீம்

என்ட்ரியான அன்னைக்கு தான் கமலஹாசன் போல மக்களின் பிரதிநிதி என்று அறிமுகமான அர்ச்சனா தற்போது சமையல் டீமில் இருப்பதால் சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அளவோடு வழங்குவதை இவரால் தாங்க முடியவில்லையாம். அதனால் எப்படி அதை வைத்து சமாளிக்க முடியும் 16 பேருக்கும் சாப்பாட்டுக்கு என்ன செய்கிறது என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

 மூக்கைச் சிந்திய அர்ச்சனா

மூக்கைச் சிந்திய அர்ச்சனா

அதுவரைக்கும் கேம் ஷோக்களில் அழகியாக மாறி இருந்த இவர் சமையல் கட்டுக்குள் வந்தது கணக்கு வழக்கு பற்றி யோசிச்சி சாப்பாடு இல்லாமல் எப்படி எல்லாரும் இனி இருக்கப் போகிறீர்கள் என்றெல்லாம் தனியாக நின்று அழுது கொண்டிருக்கிறார். அவருக்கு ஆறுதல் சொல்ல குடும்பமே ஒன்றிணைந்து கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்து கடுப்பான ரசிகர்கள் கமெண்ட்டுகளாக போட்டு கொட்டி தீர்த்து வருகிறார்கள்.

 நல்ல பயிற்சிதான்

நல்ல பயிற்சிதான்

இந்த வீட்டுக்குள்ள வரும்போதே ரசிகர்களை எப்படி எல்லாம் ஏமாத்தணும் என்று நன்றாகவே ட்ரெயினிங் எடுத்துட்டு தான் எல்லாரும் வருகிறார்கள் போல அதனால்தான் ஆளாளுக்கு அழுது அழுது சிம்பத்தி கிரியேட் பண்ணி கொண்டிருக்கிறார்கள் என்று வெறுப்பாக ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள் .அதிலும் அர்ச்சனா அழும்போது சாப்பிட்டுக்கொண்டிருந்த கேப்ரில்லா சாப்பாட்டை அப்படியே வைத்துக்கொண்டு ஓடி சென்று அவருக்கு ஆறுதல் கூறி இருக்கிறார். இதைப்பற்றி அப்படியே மீம்ஸ் கிரியேட் டர்கள் மீம்ஸ்களாக கலாய்த்து வருகிறார்கள்.

 கட்டிப்பிடி வைத்தியம்

கட்டிப்பிடி வைத்தியம்

இந்த வீட்டுக்கு என்ன நடக்கிறதோ இல்லையோ அடிக்கடி கட்டிப்பிடி வைத்தியம் மட்டும் நடந்து கொண்டிருக்கிறது .வேறு ஒன்றும் உருப்படியாக இல்லை என்று ரசிகர்களின் மனக்குமுறலாய் இருக்கிறது .ஒன்று சண்டை போடுகிறார்கள் இல்லையென்றால் அழுது கொண்டிருக்கிறார்கள். இதை தவிர வேறு ஒன்றும் இல்லை .நேற்று தான் முதல் முறையாக ஒரு கேம் ஷோ வைத்திருக்கிறார்கள். அதையும் முழுமையாக முடிக்காமல் இன்று விடுமுறை என்று பாதியிலேயே முடித்து நாளையும் தொடரும் என்று பிக்பாஸ் கூறிவிட்டார்.

 நமத்துப் போன பட்டாசு

நமத்துப் போன பட்டாசு

அர்ச்சனா இந்த வீட்டிற்குள் அறிமுகமான அன்று அனைவரும் சுரேஷுக்கும் இவருக்கும் விவரிக்கும் தான் காம்பெடிஷன் நடக்க போகிறது என்றெல்லாம் எதிர் பார்த்து வந்தனர். ஆனால் அவர் இந்த வீட்டிற்குள் வந்ததும் நமத்துப் போன பட்டாசா மாறி இருக்கிறார் .இவரைப் பார்த்து பலரும் கலாய்த்து வருகிறார்கள் .ஆனால் இவருடைய ரசிகர்கள் இவருக்கு புலி பதுங்குவது பாய்வதற்கு தான் பொறுத்திருந்து பாருங்கள் அர்ச்சனாவின் ஆட்டத்தை என்றும் சப்போர்ட் பண்ணி கொண்டு இருக்கிறார்கள்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+