அர்ச்சனாவோட ரெண்டு பக்கமும்.. நல்லா புசுபுசுன்னு.. செல்லக் குட்டிங்க!
சென்னை: சும்மா சொல்லக் கூடாதுங்க.. அர்ச்சனா நிஜத்திலும் கூட சூப்பர் எனர்ஜிதான் .பிக் பாஸ் வீட்டில் பார்த்த அதே எனர்ஜியுடன் இப்போது வீட்டை விட்டு வந்த பிறகும் கூடுதல் எனர்ஜியோடு காட்சி த ருகிறார்.
வீட்டுக்கு வந்த அதேவேகத்தில் புத்துணர்வுடன் தனது வேலைகளில் தீவிரமாகி விட்டார் .நிஷாவை சந்தித்தார்.. குடும்பத்தினருடன் சின்னதாக வெளியில் போய் விட்டு வந்தார். வீடியோக்களில் பிசியாக இருக்கிறார்.
அந்த வகையில் புதுசாக ஒறு போட்டோ போட்டுள்ளார் .அதில் தனது செல்லமான நாய்க்குட்டிகளுடன் பார்க்கவே படு எனர்ஜியாக காட்சி தருகிறார் அச்சும்மா.

அச்சும்மாவின் புதிய நாய்க்குட்டிகள்
அச்சும்மா என்பதுதான் அர்ச்சனாவின் செல்ல ப்பெயர். அவருக்கு நாய்கள் என்றாலே கொள்ளைப் பிரியம் .அவர் பிக் பாஸ் வீட்டுக்குப் போயிருந்த சமயத்தில் அவரது செல்லநாய் ரொம்பவே அவரை மிஸ் செய்ததாம் .அர்ச்சனாவும் கூட தனது நாய் மீது மிகுந்த ஏக்கத்தில்தான் இருந்தார்.

மிஸ்ஸிங்
வீடு திரும்பியபிறகு நாயும் சேர்ந்து அவருக்கு சூப்பராக வரவேற்பு கொடுத்தது. அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அலை பாய்ந்து அது அர்ச்சனாவை முத்தமிட்டது . அர்ச்சனாவும் குணிந்து அதன் வாயில் முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். அப்படிப்பட்ட அர்ச்சனா புதுசாக 2 நாய்களுடன் இபபோது போஸ் கொடுத்துள்ளார்.

புதிய நாட்கள் வரவு
இதுதொடர்பாக ஒரு போஸ்ட் போட்டுள்ளார் அர்ச்சனா. அதில் அர்ச்சனாவின் வலது பக்கம் ஒரு நாயும், இடது பக்கம் இன்னொரு நாயும் தொங்கிக் கொண்டுள்ளன .இரண்டுமே நல்லா புசுபுசுன்னு முகமே தெரியாத அளவுக்கு போஷாக்காக இருக்கிறது. இரண்டையும் பிடித்து கையில் தாங்கியிபடி தோளில் அணைத்தபடி பூரித்த முகத்துடன் காட்சி தருகிறார் அர்ச்சனா.

சூப்பர் வைரல்
இந்த நாய்க்கும் இப்போது ரசிகர்களிடையே வரவேற்பு பலமாக இருக்கிறது. பலரும் இது புது நாய்களா அல்லது பழைய நாய்களா என்று கேட்டு வருகின்றனர் . பேரு என்ன என்றும் பலர் கேட்டு வருகின்றனர். ஆனால் அர்ச்சனா இதுகுறித்து எந்தத் தகவலையும் கேப்ஷனையும் போடவில்லை.

பிரவுன் கலர்
ஒரு நாய் கருப்பு கலரில் அழகாக இருக்கிறது .இன்னொருநாய் பிரவுன் கலரில் செம க்யூட்டாக இருக்கிறது. நடுவில் அர்ச்சனாவின் முகம் அதை விட பூரிப்பாக இருக்கிறது. என் மகிழ்ச்சியின் மொத்தக் குவியலும் இதுதான் என்றும் கேப்ஷன் போட்டுள்ளார் அர்ச்சனா. இந்த நாய்களும் இப்போது அர்ச்சனாவின் புகைப்படத்தில் இடம் பெற்று வைரலாகியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications