கமல் சொல்லி தான் நான் அதை பண்ணுனேன்.. மாயா பற்றி பேசிய காரணம் இதுதான்.. அர்ச்சனா சொன்ன பகீர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த சீசன் டைட்டில் பின்னராக அர்ச்சனா தேர்வாகி இருந்தார். இந்த நிலையில் முதல் முறையாக அர்ச்சனா இன்று லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.
டைட்டில் ஜெயித்த பிறகும் எந்த பதிவுகளையும் வெளியிடாமல் இருந்து வந்த அர்ச்சனா முதல் முறையாக இப்போது லைவில் ரசிகர்களிடம் பேசி இருக்கையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் உள்ளே தான் விளையாடியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் என்றும் அர்ச்சனா பேசியிருக்கிறார்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அதில் கலந்து கொண்ட எல்லா போட்டியாளர்களும் தொடர்ச்சியாக பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் டைட்டில் வின்னராக தேர்வான அர்ச்சனா இன்று முதல்முறையாக பேட்டி கொடுத்திருக்கிறார். இதுவரைக்கும் தான் வெற்றி பெற்றதற்கு குறித்து இணையத்தில் எந்த பதிவும் வெளியிடாமல் இருந்து வந்த அர்ச்சனா இன்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.

அதில் பிக் பாஸ் வீட்டிற்குள் தான் ஒவ்வொரு வாரமும் விளையாடி கொண்டிருக்கும்போது வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் சொல்லும் அட்வைஸ் படிதான் நான் அடுத்து விளையாடி இருக்கிறேன். வெளியே நம்முடைய விளையாட்டு எந்த மாதிரி போய்க்கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெரியாது. ஆனால் வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் சொல்லும் அட்வைஸ் கேட்டு ஓ இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமா என்று நான் என்னை பல இடங்களில் மாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
அதேபோல அர்ச்சனாவிடம் கமல்ஹாசன் மாயாவிடம் மட்டும் கேள்விகளே கேட்கவில்லையே என்ற ஒரு பேச்சு வருகிறது அது பற்றி நீங்க பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஏதாவது நினைத்தீர்களா என்று கேட்க, அதற்கு அர்ச்சனா அதை பற்றி எல்லாம் நாங்கள் நினைச்சதே கிடையாது. ஏன்னா வெளியே நம்முடைய விளையாட்டு எப்படி போயிட்டு இருக்குங்கறது தெரியாது.
கமல் சார் அந்த நேரத்தில் என்ன பேசுறாரோ அதை வச்சு தான் நாங்க எல்லாருமே விளையாடிகிட்டு இருந்தோமே தவிர மாயா செஞ்சது தப்பு சரி அதை ஏன் இவரு கேட்கல என்கிற யோசனையே எங்களுக்கு அந்த நேரத்தில் வந்தது கிடையாது. அதுபோல கடைசி நேரத்தில் நான் மாயாவோடு பேசியது குறித்தும் பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதாவது ஒரு டாஸ்க்கில் கூட நான் மாயா தான் நல்ல பிளேயர் என்று சொல்லி இருந்தேன்.
அது குறித்து பலரும் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் நான் ஆரம்பத்தில் உள்ளே விளையாடிக் கொண்டிருந்த விதம் பிறகு மாறுபட்டதற்கு காரணம் கடைசி நேரத்தில் உள்ளிருந்த ஒரு சிலர்கள் தான். அவர்களிடமும் நாம் சண்டை போட்டால் மீண்டும் அவர்களை தான் பார்க்க வேண்டும். எங்கே போனாலும் அவர்கள் முகத்தில் தான் முழிக்க வேண்டும். அதனாலேயே சண்டையை குறைத்துக் கொண்டேன்.
அதனால் மாயாவிடம் நானும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தேன். பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த எல்லோருமே அந்த சீசன் ஜெயிக்க வேண்டும் மக்கள் மனதில் நம் ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று நோக்கத்தோடு தான் வந்திருப்பாங்க. அதற்காக அவங்க அவங்க விளையாட்டை விளையாடிட்டு இருப்பாங்க. ஆனா வெளியில அவங்களோட கேரக்டர் வேற மாதிரி தான் இருக்கும் என்று அந்த பேட்டியில் அர்ச்சனா பேசியிருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications