Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே ஒரு வார்த்தையால் பிக் பாஸ் ரகசியத்தை உடைத்த அர்ச்சனா.. மாயா கேங் பற்றி வெளிப்படையான பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ச்சனா பேட்டி ஒன்றில் பிக் பாஸ் ரகசியங்களையும் மாயா எதனால் ரன்னராக தேர்வாக முடியவில்லை என்பதை பற்றியும் வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதே நேரத்தில் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது பற்றியும் தன்னுடைய கருத்தை அர்ச்சனா பதிவு செய்து இருக்கிறார்.

இத்தனை நாட்களாக அர்ச்சனா பி ஆர் க்கு பணம் கொடுத்து தான் டைட்டில் ஜெயித்தார் என்று சொல்லிக் கொண்டிருந்த நெட்டிசன்கள் இப்போது அர்ச்சனா பேசியிருக்கும் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து தெரித்து ஓடிவிட்டார்களா என்று அர்ச்சனாவின் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அதற்கு காரணம் அந்த வீடியோவிற்கு கீழே அர்ச்சனாவை பாராட்டி அவ்வளவு கமெண்ட்கள் இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் கடந்த சீசனை போலவே பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியும் டைட்டில் வின்னர் குறித்து அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. அர்ச்சனா பி ஆர்க்கு பணம் கொடுத்து தான் டைட்டில் ஜெயித்து விட்டார் என்று பலர் கூறி வந்திருந்த நிலையில் கடந்த இரண்டு வாரமாக அர்ச்சனா எந்த போஸ்டுகளும் போடாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

Archana spoke about Bigg Boss secrets and why Maya was not selected as the runner-up

அதில் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார். அதாவது நான் பிஆர்க்கு பணம் கொடுத்து ஜெயித்தேன் என்று பலர் சொல்கிறார்கள். எனக்கு 19 கோடி ஓட்டு வந்திருக்கிறது. ஒரு ஓட்டுக்கு ஒரு ரூபாய் என்றால் என்னால் அத்தனை ஓட்டுகளுக்கும் பணம் கொடுக்க முடியுமா? எனக்கு ஓட்டுகள் வந்தது என்னை பிடித்து பாதி பேர் போட்டார்கள் என்றால் இன்னொருவர் ஜெயிக்க கூடாது என்று எனக்கு போட்டவர்கள் மட்டும் தான் அதிகம்.

காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. கடைசி பைனலிஸ்ட் 5 போட்டியாளர்களில் மாயாவும் ஒருவராக இருந்தார். ஒரு சிலர் மாயாவுக்கு சப்போர்ட் செய்து கொண்டு இருந்தாலும் மாயா ஜெயிக்க கூடாது என்பதற்காக எனக்கு ஓட்டு போட்டவர்கள் அதிகமானவர்.

அதை நான் உண்மையாக வெளிப்படையாக சொல்லி தான் ஆக வேண்டும். அதனால் மாயா ரன்னர் ஆகாததற்கு கூட பிரதீப் தான் காரணம். பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்த விஷயத்தினால் கோபமடைந்த மக்கள் அதை வாக்குகளில் காட்டி விட்டார்கள். மேடை நாகரிகம் தெரியவில்லை, வார்த்தை பயன்படுத்தியது சரியில்லை, தனி நபரை தாக்கியது போன்ற காரணங்களை கூறி பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தால் ஓகே என்று சொல்லலாம்.

ஆனால் பெண்களுக்கு அவரால் பாதுகாப்பு இல்லை என்ற விஷயத்தை சொல்வது கண்டிப்பாக நியாயம் இல்லை. இது நிரூபிக்கப்படாமல் அவர் மீது பழி சுமத்தியது ஏற்புடையதும் இல்லை என்று அர்ச்சனா பேசியிருக்கிறார். அதோடு பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்ததற்கு காரணம் அவர் மிகவும் கடினமான போட்டியாளர் அவரை நேரடியாக எதிர்க்க முடியாது, அதனால் தான் நண்பர்களாக பழகி நேரம் கிடைத்ததும் குத்திவிட்டார்கள் என்று அர்ச்சனா பேசியிருக்கிறார்.

Archana spoke about Bigg Boss secrets and why Maya was not selected as the runner-up

இந்த பேட்டியை கேட்ட ரசிகர்கள் அர்ச்சனா சொல்வது அனைத்தும் உண்மை என்று கமெண்ட்களில் அர்ச்சனாவை பாராட்டுகின்றனர். அதே நேரத்தில் பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த பிறகும் பிக் பாஸ் பற்றி வெளிப்படையாக அர்ச்சனா பேசி விட்டாரே? கேமரா முன்பு சிலர் பொய் சொல்கிறார்கள் என்றாலும் கேமராவில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் அத்தனையும் கவனித்துக் கொண்டிருந்த சேனல் தரப்பினர்கள் கூட பிரதீப் மீது இப்படி ஒரு பழியை தூக்கி போட்டது தவறு தானே என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+