விஜய் சேதுபதிக்கு எதிராக போஸ்ட் போட்ட முன்னாள் பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. காரணம் இதுதான்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிலையில் அவருக்கு எதிராக, அருண் பிரசாத்திற்கு ஆதரவாக பிக் பாஸ் ஏழாவது சீசனில் டைட்டில் வின்னர் அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
சர்ச்சைகளுக்கு பெயர் போன பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசன் தொடங்கிய முதல் நாளிலிருந்து இணையத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. விஜய் சேதுபதி இந்த சீசனில் முதல் முறையாக தொகுப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த சீசனில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது சரியில்லை அவர் ஒரு தலை பட்சமாக நடந்து கொள்கிறார் என்று அதிகமான விமர்சனங்கள் எழுந்து வந்தது.

சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து ரெஸ்ட் எடுக்க போகிறேன் என்று ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டு விட்டார். அதற்குப் பிறகு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் முதல் நாள் அவர் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி போட்டியாளர்களிடம் பெரிய அளவில் ஒட்டாமல் நடந்து கொண்டார்.

அது போல அடுத்த வாரத்தில் விஜய் சேதுபதி அங்கிருக்கும் போட்டியாளர்கள் சிலரிடம் நடந்து கொண்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. போட்டியாளர்களை பேச விடாமல் தான் நினைக்கும் வார்த்தைகள் அவர்களுடைய வாயிலிருந்து வரவேண்டும் என்று அதற்கு தகுந்த மாதிரி அவர்களை ட்விஸ்ட் செய்து கேள்வி கேட்டு மடக்கி உட்கார வைப்பதுபற்றி சிலர் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். சிலர் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இப்போது அதில் இரண்டு போட்டியாளர்கள் வெளியே அனுப்பப்பட்டு இருக்கின்றனர். இப்படியான நிலையில் கடந்த சீசனில் டைட்டில் வின்னரும் இந்த சீசனின் போட்டியாளர் அருணின் தோழியுமான அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில் விஜய் சேதுபதி அருணை கண்டிப்பது போன்ற காட்சிகளும் அதோடு அருண் அங்கிருக்கும் சக போட்டியாளர்களிடம் தன்மையாக நடந்து கொள்ளும் காட்சிகளும் எடிட் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் கடந்த வாரத்தில் சொம்பு தூக்கி என்ற பட்டத்தை விஜய் சேதுபதி அருணை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று ஆண்கள் அணியின் நீங்கதான் சொம்பு தூக்கி என்று சொல்வது போல பேசிய காட்சிகளும் இருந்தது.

இந்த வீடியோவை ஷேர் செய்த அர்ச்சனா அந்த வீடியோவில் standbyarunprasad என்ற ஹேஸ் டேக்கையும் வைத்திருக்கிறார். இது குறித்து இந்த வீடியோவை சிலர் பகிர்ந்து அருணுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். சிலர் விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி டைட்டில் வின்னர்ராக தேர்வான அர்ச்சனா இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய நண்பனுக்காக போட்ட பதிவு அதிகமாக பேசப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications