இப்படி வரிசையா கிளம்பிட்டாங்களே.. பிரபல நடிகையும் டைவர்ஸ் பண்றாங்களா? இணையத்தில் ஓவர் புகைச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியினர் பரபரப்புக்கு இடையே, இன்னொரு ஜோடி விவாகரத்து செய்ய போவதாக தகவல்கள் கிளம்பி வருகின்றன.. இப்படியொரு கிசுகிசுவை கிளப்பிவிடுவதே சோஷியல் மீடியாக்கள்தான் என்கிறார்கள்.

ஜெயம் ரவி, ஆர்த்தி ஜோடிக்கு இடையே சலசலப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. ஜெயம்ரவி தரப்பில் விவாகரத்து கோரப்பட்டதையடுத்து ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜெயம் ரவியுடன் எடுத்த போட்டோக்களையும் டெலிட் செய்துள்ளார்.

television suriya jyothika

என்ன காரணம்: என்னும், இவர்களுக்குள் என்ன பிரச்சனை? எதனால் டைவர்ஸ் என்பதெல்லாம் உறுதியாக தெரியவில்லை. ஆனால், ஆர்த்தியின் அம்மா கொடுத்த டார்ச்சர், ஆர்த்தியின் அளவில்லாத செலவு, என யூகங்கள் றெக்கை கட்டி பறந்துவருகின்றன. இந்த ஜோடியின் விவாகரத்துக்கே இன்னும் காரணம் தெரியாத நிலையில், இன்னொரு சூர்யா - ஜோதிகா இடையே முறிவு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பை கிளம்பியிருக்கிறது.

சூர்யா, ஜோதிகா இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக, கடந்த 2, 3 வருடங்களாகவே சோஷியல் மீடியாவில் புகைந்து கொண்டுதான் இருக்கிறது.. வழக்கம்போல் கற்பனை கதைகளும் வலம்வந்து கொண்டேதானிருக்கின்றன. எனினும், இதற்கு ஒரு முற்றுப்புள்ளிகள், சூர்யா ஜோதிகா தரப்பிலிருந்தும் வைக்கப்படவில்லை என்பதால், இந்த புகைச்சல் ஓவராகி கொண்டிருக்கிறது. ஜெயரம் ரவி டைவர்ஸ் மனு அனுப்பியதையடுத்து, தற்போது சூர்யா விவகாரத்தையும் சிலர் கிளறி விட்டுள்ளனர்.

இதுதான் காரணமா: 2 நாட்கள் முன்பு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் Kindwoods News என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியிலும், ஜெயரம்ரவி விவகாரம் குறித்து பேசும்போது, சூர்யா ஜோடி தம்பதி பற்றியும் பேசியிருக்கிறார்.

"சினிமா கல்ச்சரில் ஒரு ஆடி காரில் ஆணும், ஒரு ஆடி காரில் பெண்ணும் போவாங்க... ஏன்னா பல பிரச்சனைகளுக்கு ஈகோ தான்.. உன் கிட்டயும் 100 கோடி இருக்கு. என் கிட்டயும் 100 கோடி இருக்கு. இங்கு பணம் பிரச்சனை இல்லை. ஈகோதான்... இது போன்ற கல்ச்சரில் மிகப்பெரிய சந்தேக வளையம் வருது... அடுத்த செகண்டே டைவர்ஸ்.

தம்பதிகள்: மனைவி கேட்பாள், "என்னோட சுதந்திரத்தில் நீ எப்படி தலையிடலாம்ன்னு? அதே மாதிரி இன்னொரு ஆணுடன் சுற்றும்போது, இதையே கணவனும் கேட்பான். இதுதான் விவாகரத்துக்கு காரணம்... ஆயா குழந்தைகளை கவனித்து அவர்களுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்து விடுவாள். அதனால் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் தொடர்பு இருக்காது. எல்லாம் போனில் தான் பேசுவார்கள். உடனே 2 வருஷத்துக்குள்ள டைவர்ஸ்...

ஐடி பீல்டும் இப்படித்தான் நடக்கிறது... கல்யாணம் பண்ணிட்டு ஜோதிகா, சூர்யாவுக்கே இந்தப் பிரச்சனைங்கறாங்க. குழந்தைகளை படிக்க வைக்கிறதுக்கு பம்பாய் போறேன்னு அங்கேயே ஜோதிகா செட்டிலாகிட்டாங்க. சிவக்குமார் ஹோட்டல்ல சாப்பிடுறாருன்னு சொல்றாங்க. அப்போ சுதந்திரம் என்பது குழந்தைகளின் எதிர்காலத்துக்குள் கட்டுப்படணும். ஆனால், குழந்தை, குட்டி, அம்மா, அப்பா என்ற தொடர்பு வளையத்தில் இருந்து வெளியே போய்விடுகிறார்கள்" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

ஜோதிகா: ஆனால், ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜோதிகா மும்பையில் செட்டிலாகியது குறித்து சில விசயங்களையும் பகிர்ந்திருக்கிறார். "பசங்க 2 பேருமே மும்பையில் படித்து வருகிறார்கள். அவர்களின் ஹையர் ஸ்டடிஸ் போக போறாங்க. அவர்களுடன் நான் இருக்க வேண்டும். இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறேன்.. அதனால்தான், மும்பையில் செட்டில் ஆகியிருக்கிறோம். இந்த வேலைகளை முடிந்ததுமே சென்னை திரும்பி விடுவோம்" என்று விளக்கமே தந்திருந்தார்.

எனினும், ஜெயம் ரவி - ஆர்த்தி விவகாரம் சூடுபிடித்துள்ளதால், ஜோதிகா சூர்யா விவகாரத்தையும் இந்த நேரத்தில், சிலர் மீடியாவில் பதிவிட்டு ஊதி பெரிதாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

அறிவுறுத்தல்: அதாவது, சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க கூடாது என்று சூர்யாவே ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தும்கூட, ஜோதிகா பாலிவுட்டில் நிறைய நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கு சம்மதித்துள்ளாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்யா மன வருத்தத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது...

அதுமட்டுமல்ல, தன்னுடைய அப்பா சிவகுமாரிடம் இதுகுறித்து சூர்யா புலம்பினாராம். எனவே, இனி வரும் நாட்களில் ஜோதிகா, தொடர்ந்து பாலிவுட்டில் நெருக்கமாக யாருடனாவது நடிக்க நேர்ந்தால், நிச்சயம் தம்பதி இருவரும் பிரிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று கடந்த 2 நாட்களாகவே செய்திகள் இணையத்தில் கசிந்து கொண்டிருக்கின்றன.

முணுமுணுப்புகள்: ஆனால், இது குறித்து இந்த தம்பதிகள், எந்த ஒரு அதிகார தகவல்களையும் தரவில்லை. இதுவரை எந்த வதந்திகளுக்குமே முற்றுப்புள்ளி வைக்கவில்லை.. எந்த முணுமுணுப்புகளுக்குமே விளக்கம் தரவில்லை. அவரவர் அவரவர் வேலையை சரியாக பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+