ஆர்த்திக்கு வந்த மெசேஜ்.. பாடகியுடன் காரில்.. இதான் விஷயம்.. இறங்கி வர்றாரா ஜெயம் ரவி? பிரபலம் பளீர்
சென்னை: நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இதுகுறித்து தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். அப்போது ஜெயம் ரவியுடன் தான் பேசியது குறித்த விவரங்களையும் அதில் விரிவாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
Fine Time Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொன்னதாவது: "ஜெயம் ரவி டிஸ்டர்பாக இருக்காரு.. அவரை சந்திக்க வேண்டாம் என்று பிஆர்ஓ என்னிடம் சொன்னார்கள்.. உடனே நான், "அவரை சினிமாவில் நடிக்க வர்றதுக்கு முன்னாடியிருந்தே எனக்கு தெரியும்.. அவராக பேசினால், நான் பேசறேன்னு சொன்னேன்.

அதுபோலவே, பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது, ஜெயம் ரவி என்னையும் தனிமையில் தான் சந்தித்தார்.. ஜெயம் ரவியே என்னிடம் பேசினார். அப்போ நான் அவரிடம் கேட்டேன், "ஆர்த்தியின் ஆடி கார் எடுத்துட்டுத்தானே மும்பை, கோவை எல்லாம் பாடகியுடன் சுத்துனீங்க" என்று கேட்டேன்.
பொய் : அதற்கு ஜெயம்ரவி, "அது சத்தியமான பொய்..ண்ணே.. அவங்களுக்கு ஏது ஏழரை கோடி ரூபாய்? நான் சினிமாவில் சம்பாதித்த பணத்தில்தான் வெளிநாட்டு கார் வாங்கினேன்... நான்தான் என் மனைவி பெயரில் வாங்கினேன். வேகமாக கார் ஓட்டினது, கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதற்காக ஃபைன் போட்டதெல்லாம் உண்மைதான். என் மனைவி பெயரில் நான் கார் வாங்கியதால், நான் ஃபைன் கட்டின விஷயம், என் மனைவிக்கு மெசேஜ் மூலம் போய்ட்டது.
என் மாமியார் 3 படம் எடுத்தாங்க.. நஷ்டம் வந்தது.. என்னுடைய சினிமா கேரியரையே என் மாமியார் ஒழிக்க முடிவு பண்ணிட்டாங்க.. அதை நான் கண்டுபிடிச்சிட்டேன்.. வேலைக்காரனை வெச்சிட்டே என்னை அவமானப்படுத்தனாங்க.. பேங்க் செக்புக் வாங்கிட்டாங்க.. பாஸ்புக் முடக்கி வெச்சிட்டாங்க.. நான் எங்காவது பணம் எடுத்தால், உடனே என் மனைவிக்கு மெசேஜ் போகுது. ஆனால், என் மனைவி பணம் எடுத்தால், அந்த கணக்கு எனக்கு வருவதில்லை.
பிறந்தநாள்: என்னுடைய சுயமரியாதையை இழந்து, புருஷனா நான் அங்கே இருக்கணுமா? நான் போன் எடுக்கவே இல்லைன்னு சொல்றாங்களே? என் பையன் என்கூடதான் பிறந்தநாள் முழுக்க இருக்கான்.. என்மேல அவன் அன்பை காட்டுவது போல, என் மனைவியும் என்னிடம் அன்பை காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பேன் இல்லையா? என் மனைவி மேல நான் சந்தேகப்படலையே? எனக்கு தெரியாமல் வெளிநாடுகளுக்கும், பப்புக்களுக்கும் போறாங்களே?
நான் இப்போதுவரை என் மனைவியை தப்பாக சொல்லவேயில்லை.. என் மாமியாரை பற்றிதான் சொல்றேன்.. 2 முறை ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன்.. முதல் தடவை நோட்டீஸ் அனுப்பியபோது, அவங்க அப்பா விஜயகுமார் என்கிட்ட வந்து பேசினார்.. என் தரப்பு நியாயத்தை சொல்லவும், எதுவுமே பேசாமல் கிளம்பி போய்விட்டார். ஆனால், என்னுடைய பசங்க, என்னை பற்றியும், அவங்க அம்மா பற்றியும் தப்பா நினைச்சிட கூடாது" என்று என்னிடம் ஜெயம் ரவி சொன்னார்.
இறங்கி வருவார்: எனக்கு தெரிந்து ஐஸ்வர்யா - தனுஷ் இருவருமே தங்கள் குழந்தைகளுக்காக ஒன்று சேர்ந்ததுபோல, 2 பசங்களுக்காக ஜெயம் ரவியும் இறங்கி வருவார் என்று அவரது பேச்சில் எனக்கு தெரிகிறது. ஆனால் மாமியார்கிட்ட இருந்து பிரிந்து தனிக்குடித்தனம் இருந்தால், இருவரும் சந்தோஷமா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்" என்றார் பயில்வான் ரங்கநாதன்.
பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கள், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.. தம்பதி இருவரும் குழந்தைகளுக்காக இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளபோது, பயில்வான் பேசியிருப்பது, பெருத்த நிம்மதியை தந்து வருகிறதாம். ஏற்கனவே, ஜெயம் ரவியுடனான சமாதானத்துக்கு தயார் என்று ஆர்த்தி அறிவித்திருந்த நிலையில், ஜெயம் ரவியின் பேச்சிலும் மாற்றம் தென்படுவதாக பயில்வான் தெரிவித்திருப்பது, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.












Click it and Unblock the Notifications