பிக்பாஸில் சக்ஸஸ்.. டிஆர்பியை விடுங்க.. விஜய் சேதுபதி ஏற்படுத்திய தாக்கம் இதுதான்.. பிக் பாஸ் சீசன் 8
சென்னை: விஜய் டிவியின் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவான பிக்பாஸின், புதிய சீசன் துவங்கப்பட்டுள்ளது.. கமல்ஹாசன் இல்லாத பிக்பாஸ் எப்படி நகர போகிறது? விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி கையாள போகிறார்? என்றெல்லாம் நிலவிவந்த எதிர்பார்ப்புகள், தற்போது நம்பிக்கையை ஆழமாக விதைத்துவிட்டு வருகிறது.
இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.. இதற்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக திகழ்ந்தவர் கமல்ஹாசன்.. இந்த சீசனில் கமல் விலகிய நிலையில், 8-வது சீசனை நடத்த போவது யார் என்ற கேள்வி எழுந்தது.

விஜய் சேதுபதி: இறுதியில், விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.. எனினும், எதிர்பார்த்த வெற்றியை சீசன் 8 நிகழ்ச்சியும் தர வேண்டும் என்பதற்காக நிறைய மாறுதல்களுடன் தற்போது நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது.
2 வாரம் கடந்துள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி மீது பலருக்கும் பலவிதமான விமர்சனங்கள் உள்ளன. அதேபோல, விஜய் டிவி ரேட்டிங்கில் பிக்பாஸ் குறைந்துவிட்டதாக சலசலப்புகள் கிளம்பி உள்ளன.
ரேட்டிங்: குறிப்பாக மொத்தமுள்ள 18 போட்டியாளர்களில் 13 பேர் விஜய் டிவி பிரபலங்களாகவே இருக்கிறார்கள் என்றும், விஜய் டிவியில் பார்த்த முகத்தையே மீண்டும் பார்ப்பது, சலிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும், சுவாரஸ்யமில்லாத போட்டிகளை டிஆர்பி ரேட்டிங் குறைந்துவிட்டதாக மீடியாக்களில் தகவல் கசிந்து கொண்டிருக்கின்றன.
உண்மையை சொல்லப்போனால், விஜய்சேதுபதி சிறப்பாக நிகழ்ச்சியை நடத்துவதாக, பெரும்பாலான கமல் ரசிகர்களே வெளிப்படையாக பாராட்ட துவங்கியிருக்கிறார்கள்.. முதல்நாள் போட்டியாளர்களை வீட்டிற்குள் அறிமுகப்படுத்தியபோதே, விஜய் சேதுபதி பலரது எதிர்பார்ப்பையும் நிச்சயம் பூர்த்தி செய்து விட்டதாகவே இணையத்தில் கமெண்ட்கள் பதிவாகியிருந்தன. கடந்த வாரம் அந்த இந்த நம்பிக்கையானது, மேலும் வலுக்க துவங்கியது.
ஒரே தராசு: போட்டியாளர்களை விஜய் சேதுபதி மோசமாக திட்டவில்லையே தவிர, அனைவருக்குமே தலையில் "கொட்டு" வைத்து பேசியிருந்ததும், பாரபட்சமின்றி அனைவரையுமே ஒரே தராசில் நிறுத்தி பேசியிருந்ததும், தயவுதாட்சண்யமின்றி தவறுகளை சுட்டிக்காட்டியிருந்ததும் இணையவாசிகளின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்திருந்தது.. இதுதான் இந்த வாரம், போட்டியாளர்களை அவர் எப்படி கையாள போகிறார்? என்ற ஆர்வத்தையும் அதிகப்படுத்தியிருக்கிறது.
அதேசமயம், போட்டியாளர்கள், பிக்பாஸ் வீட்டிற்குள் சுவாரஸ்யமாக விளையாடவில்லை என்பதையும் தங்கள் ரசிகர்களிடம் கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்பதிலேயே போட்டியாளர்களின் முழு கவனமும் குவிந்துகிடப்பதால் சுவாரஸ்யம் மிஸ்ஸாகியிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே இந்த குறைகளை விஜய்சேதுபதி எப்படி களைய போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இந்த வாரம் ஏற்படுத்தியிருக்கிறது.
எலிமினேஷன்: அதுமட்டுமல்ல, 24 மணி நேர எலிமினேஷன், 2வது வாரம் எலிமினேஷன் என அடுத்தடுத்த பரபரப்புகளை பிக்பாஸ் தந்துவரும் நிலையில், இந்த வாரம் எலிமினேஷிலும் நிறைய போட்டியாளர்கள் உள்ளதால், யார் வெளியேற போகிறார்கள் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதுமட்டுமல்ல, வீட்டில் நடந்த சம்பவங்களின் பின்னணிகளை அலசுவதுடன், அதற்கான தீர்வுகளையும் சொல்லிவருவதால், நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடிவருகிறது.. கடந்த வாரம் விஜய சேதுபதி பேசும்போது, வீட்டில் ஆண்களிடம் ஒற்றுமை நிலவினாலும், பெண்கள் அணியில் ஒற்றுமை இல்லாததை சுட்டிக்காட்டி, அதை சரிசெய்து கொள்ளவும் பரிந்துரைத்திருத்தார்.. அதற்கேற்றவாறு, கடந்த வாரத்தில் பெண்கள் அணி பல விளையாட்டுகளில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications