இப்படியுமா இருப்பார்கள் பெண்கள்.. மாமியார்கள் குலத்துக்கே இவர்கள் மிகப் பெரிய அவமானம்.. !
Recommended Video

சென்னை:கல்யாணவீடு சீரியலில் கோபியின் இரண்டு தங்கச்சி மாமியார்களும் இப்படியும் பெண்கள் இருப்பாங்களான்னு யோசிக்க வைக்குது.வாயில் பெட்ரோல் ஊத்தி கொளுத்துங்கன்னு சொல்ற அளவுக்கு வம்பு பேசறது...
சின்ன குழந்தைங்க மாதிரி எப்பவுமே பழிவாங்கணும்னு காண்டுலயே சுத்தறது...ஒட்டு கேக்கறது, நக்கல், நையாண்டித் தனம் பண்றது...வீட்டுல யாரு பேச்சையும் கேட்கறதில்லை..
இப்படி ஒவ்வொரு வீட்டுலயும் பெண்கள் இருந்தா எப்படிங்க சமாளிக்கறது. கண்ணை சுத்தற மாதிரி இருக்கு இந்த அக்காட்சிகள் எல்லாம்.
Also Read | நல்லாதான் போய்ட்டிருந்துச்சு.. திடீர்னு செருப்பால அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. இது பாஜக கலாட்டா!

அன்னிக்கு...
அன்னிக்கு தன்னை நக்கல் பண்ணின சம்பந்திக்கு கரண்டி காம்பு சூடு வச்சாங்கல்ல... அவங்க இன்னிக்கு கோபி, அவங்க அம்மா, வரும்கால சம்பந்தி சகிதமா இவங்களுக்கு பத்திரிக்கை வைக்க வராங்க.

அடுப்புல தோசைக் கல்லு
இவங்க தூரத்துல வரத்தைப் பார்த்தவுடனே அடுப்புல தோசைக்கல்லை போட்டுட்டறாங்க. இந்தம்மா. எதுக்கு தோசை ஊத்தவா, நீங்க வேற... ரெண்டாவது சம்பந்திய பழிவாங்கத்தான்.

நக்கல் சிரிப்புனாலதான்
என்னை மன்னிச்சுரு, அன்னிக்கு நான் உனக்கு சூடு வச்சது தப்புதான்... நான் வேலை செய்ததை பார்த்து நீ நக்கலா சிரிச்ச...அதான் சூடு வச்சுட்டேன். எதையும் மனசுல வச்சுக்காம பத்திரிகையை வாங்கிகிட்டு, கல்யாணத்துக்கு வந்துருன்னு வரும்கால சம்பந்தி கெஞ்ச..

மறந்துரு...
சரி சரி அதை எல்லாம் நான் மறந்துட்டேன்... வாங்க உள்ள போகலாம்னு சொல்லிட்டு, நேர கொல்லை பக்கம் அழைச்சுக்கிட்டு போயி, நீங்க. செய்த காரியத்துனால என்னால பாத்திரம் தேய்க்க முடியலைன்னு நடிக்கறாங்க.

நான் தேக்கறேனே
ஐயோ உனக்கு எதுக்கு சிரமம் நான் பாத்திரம் தேய்க்கறேன்....அப்புறமா நீ காபி போடு என்று வரும்கால சம்பந்தி சொல்ல, உனக்கு உட்கார மனக்கட்டை கொண்டு வரட்டான்னு கேட்கறாங்க இவங்க.நல்லா கேட்ட...எனக்கு மூட்டு வலி, மனக்கட்டை கொண்டு வா... உட்கார்ந்து தேய்க்கறேன்னு வெள்ளந்தியா வரும்கால சம்பந்தி சொல்ல...

பின்புறத்தில்
மனக்கட்டையின் உள்ளே பழுத்த தோசைக்கல்லை மறைத்து எடுத்து வந்து,அவங்களை எழுந்திரிக்க சொல்லி, அடியில வைக்கறாங்க... உட்கார்ந்தவுடன் பாவம்...கிடுகிடுக்க கத்தி, சூடு தாங்காமல் ஓடுகிறார் காவிரி ஆற்றைநோக்கி

கண்றாவி .
பின்னாலேயே கோபியின் அம்மாவும், என்னாச்சோ என்று ஓடிவர, அதற்கு பின்னால் ஓடிவரும் முதல் சம்பந்தி, ஒடி வந்தவர் பாதியில் நின்று டான்ஸ் ஆடுகிறார்.இவர் கத்திய படி காவிரி ஆற்றின் தண்ணியில குதித்து விடுகிறார்.

காமெடியா
காமெடிக்கு நிச்சயம் இவ்ளோ வக்கிரம் தேவையில்லை.மத்தது எல்லாம் எல்லா குடும்பத்துலயும் இல்லேன்னாலும், எதோ ஒரு குடும்பத்துல நடக்குதுன்னு விட்டுலாம்... கொஞ்சம் யோசிங்க திருமுருகன். குடும்பம் நடத்தி பிள்ளைகள் பெற்ற பெண்மணிகள் இப்படி இருப்பாங்களா... காமெடிக்குன்னாலும் சென்ஸ் இல்லாத காமெடியா?
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications