Good Bad Ugly: இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல! பதட்டமா இருக்கு! அர்ஜுன் தாஸ் உருக்கமான பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் தான் நடித்த அனுபவம் குறித்து நடிகர் அர்ஜுன் தாஸ் உருக்கமாக பதிவு வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் பலருடைய கவனம் பெற்று வருகிறது.

பொதுவாக ஒரு சில நடிகர்களுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுபோல ஒரு சில நடிகர்களுக்கு சில நடிகர்கள் ரசிகர்களாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் எம்ஜிஆர்,சிவாஜி காலத்தில் தொடங்கி ரஜினி- கமல், அஜித்- விஜய் என்று பல நடிகர்களுக்கும் நடிகர்களே ரசிகர்களாக இருக்கிறார்கள். இது போலத்தான் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிகர் அஜித்தின் தீவிரமான ரசிகராம். ஆனால் அஜீத்துடன் தான் நடிப்பேன் என்று எதிர்பார்க்காத நேரத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து எமோஷனலாக போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார்.

Ajith Kumar Arjun Das Good Bad Ugly Movie

வியக்க வைக்கும் குரல்

அர்ஜுன் தாஸ் கதாநாயகனாகவும் வில்லன் நடிகனாகவும் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். அவருடைய தனித்துவமான குரலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அர்ஜுன்தாஸ் அஜித்குமார் நடிப்பில் இன்று வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த திரைப்பட அனுபவம் குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார்.

உற்சாகமான போஸ்ட்

அதில், இன்னும் சில மணி நேரங்கள்தான் இருக்கிறது. எனக்கு இன்னும் நிறைய பதட்டமாகவும், உற்சாகமாக, ஆர்வமாகவும் இருக்கிறது. அஜித் சாரின் படங்களுக்கு ஆரம்பத்தில் நான் மார்க்கெட்டிங் விளம்பரம் செய்து இருக்கிறேன். அப்போது நான் அவருடன் நடிப்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் பல வருடங்களுக்கு பிறகு அது இறுதியாக நடந்திருக்கிறது.

உணர்வு பூர்வமான தருணம்

நாங்கள் இரவு முழுவதும் விழித்திருந்து அதிகாலையில் தியேட்டருக்கு சென்று தியேட்டரில் பார்வையாளர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்று கவனித்து இருக்கிறேன், அது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது‌. இன்று அதே வேலையை மீண்டும் செய்யப் போகிறேன். ஆனால் ஒரு வித்தியாசம் இருக்கிறது. என்னவென்றால் நான் அஜித் சாருடன் திரையை பகிர்ந்து கொள்ளும்போது உங்களுடைய ரெஸ்பான்ஸ் பார்க்க முடியும்.

Ajith Kumar Arjun Das Good Bad Ugly Movie

அஜித்துக்கு நன்றி

என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி அஜித் சார். இது ஒரு முழுமையான மரியாதை. உங்களுடன் பணி புரிந்த ஒவ்வொரு நாளும் உங்கள் கருணை, உங்கள் தாராள மனப்பான்மை, உரையாடல்கள், நகைச்சுவைகள், கேலிக்கூத்துகள், டிரைவ்கள் நீங்கள் கொடுத்த ஆலோசனைகள் என எல்லாவற்றையும் கொண்டாட்டத்துடன் மதித்து எப்போதும் போற்றுவேன்.

ரசிகர்களுக்கு வேண்டுகோள்

இதற்கு முன்பும் சொல்லி இருக்கிறேன், இப்போதும் சொல்கிறேன்.. இப்போது நான் நடிப்பது உங்களால், உங்களுக்காக. மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அஜித் சாரின் ரசிகர்களுக்கு, உங்கள் அனைவரின் அன்பிற்கும் மரியாதைக்கும் மிக்க நன்றி. நான் உண்மையிலேயே உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

Ajith Kumar Arjun Das Good Bad Ugly Movie

அனைவருக்கும் நன்றி

குட் பேட் அக்லி படத்தை பார்த்துவிட்டு நீங்கள் அனைவரும் ஒரு முழுமையான கொண்டாட்டத்தை பெறுவீர்கள் என நம்புகிறேன். அதுபோல ஆதிக் சார் உங்களுக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளும் வாழ்த்துகளும்.., உங்கள் வாக்குறுதியை மறந்து விடாதீர்கள் என அர்ஜுன் தாஸ் குறிப்பிட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+