மருமகளே... மாடிப்படியில உன் புள்ள ஃபர்ஸ்ட் ஷோ காமிச்சான்.. இப்போ செகண்ட் ஷோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் நடிகை வடிவுக்கரசி சீரியலுக்கு பிளஸ்னு சொல்லலாம். இதுவரைக்கும் அவங்களுக்கு இப்படி பணக்கார மிடுக்கான கதாபாத்திரம் எந்த சீரியலிலும் அமையலை.

நல்ல நல்ல கலரில் பட்டு சேலை உடுத்தி, அழகான ரவிக்கை போட்டு ரொம்ப அழகா இருக்காங்க வடிவுக்கரசி. நடுநடுவே ஜோக் அடிக்கறதென்ன, கலாய்க்கறது என்னன்னு ரொம்ப அருமை.

வியர்த்து விறுவிறுத்து அடுப்பங்கரையில் சமைச்சுக்கிட்டு, அழுதுகிட்டு இருக்கும் வடிவுக்கரசிக்கு இந்த சீரியலில் விடுதலை குடுத்து இருக்காங்க.

வேஷ்டி சட்டையில்

வேஷ்டி சட்டையில்

எல்லாரும் கீழே இருக்க, அர்ஜுன் வேஷ்டி சட்டையுடன் கீழே வர்றான்.அவன் பின்னால, ரோஜா இரண்டு கைகளையும் பின்னால மறைச்சுக்கிட்டு வர்றா. வேஷ்டி சட்டையில் இறங்கிய அர்ஜுனைப் பார்த்த பாட்டி வடிவுக்கரசி.. மருமகளே உன் மகன் படம் காட்ட ஆரம்பிச்சுட்டான்.. இன்னும் என்னென்ன படம் காட்ட போறானோன்னு சொல்றாங்க.

கையில மருதாணி

கையில மருதாணி

அர்ஜுன்.. என்னடா இது புதுக்கோலம்.. நல்லாருக்குடா.. சரி சரி வா சாப்பிடலாம்.. தோசை ஊத்தறேன்னு சொல்றாங்க அம்மா. இல்லைம்மா.. இன்னிக்கு எல்லாத்துக்கும் நான்தான் தோசை ஊத்தி தரப் போறேன்னு.. சொல்றான். உங்களுக்கு உதவி செய்ய ரோஜாவால முடியாது. பாருங்க அவ கையில மருதாணி வச்சிருக்கான்னு சொல்றான்.

தலையில முண்டாசு

தலையில முண்டாசு

எல்லாரும் ஆச்சரியமா பார்க்க.. பயப்படாதீங்க ரொம்ப நல்லா தோசை ஊத்துவேன்னு அர்ஜுன் சொல்றான். அர்ஜுன் நீ தோசை ஊத்துப்பா.. காலையில நீ போட்ட காபியே அருமையா இருந்துச்சுன்னு பாட்டி சொல்றாங்க. அர்ஜுன் துண்டை தலையில முண்டாசு மாதிரி கட்டிக்கிட்டு அடுப்பங்கரை போறான்.

தோசை சுட்டு சுட்டு

தோசை சுட்டு சுட்டு

அருமையான தோசைகளை சுட்டு சுட்டு போட, பாட்டிக்கு ரெண்டு தோசை போதும்டா... அதுக்கு மேல அவங்க சாப்பிட மாட்டாங்கன்னு அம்மா சொல்றாங்க. ஏன் மருமகளே.. என் பேரன் கையால சுட்ட தோசை இன்னும் கூட ஒண்ணு சேர்த்து சாப்பிடுவேன்.. நீ வை அர்ஜுன்னு சொல்றாங்க.

ரோஜாவுக்கு

ரோஜாவுக்கு

ஏண்டா எல்லாருக்கும் தோசை சுட்டு குடுத்தே.. ரோஜாவுக்கு குடுடா அவ சாப்பிடட்டும்னு அம்மா கல்பனா சொல்றாங்க.. ஏன் மருமகளே.. அவன் பொண்டாட்டிக்கு இன்னும் ஸ்பெஷலா தோசை செய்து அவனே ஊட்டி கூட விடுவான்.. இதை நீ சொல்லணுமான்னு பாட்டி கேட்கறாங்க.

ரோஜா சாப்பிட

ரோஜா சாப்பிட

பார்த்தியா.. பாட்டி அந்த காலத்து மனுஷி.. இங்கிதம் தெரிஞ்சவங்க.. நீயும் நானும் தனியா இருக்கணும்னு எல்லாரையும் அனுப்பிட்டாங்கன்னு சொல்றான் அர்ஜுன். ஆனால், வழக்கம் போல பாட்டி, கல்பனா, யசோதா, யசோதா புருஷன்னு எல்லாரும் இந்த காட்சியை மறைஞ்சு நின்னு பார்க்கறாங்க..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+