நடிகை திவ்யா "சர்ச்சை நடிகரோடு” சாட்டிங்..ஆதாரத்தை வெளியிட்ட அர்ணவ்.. இப்படியா பேசுனாங்க?
சென்னை: சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் மற்றும் அவருடைய கணவர் அர்ணவ் குடும்ப பிரச்சினை மீண்டும் வெடித்திருக்கிறது.
இவர்களுடைய பிரச்சனையில் சீரியல் நடிகர் ஈஸ்வரர் சம்பந்தப்பட்டிருப்பதாக அர்ணவ் சில ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார்.
தனக்கு எதிராக தன்னுடைய கேரியரை காலி செய்ய ஈஸ்வரருடன் திவ்யா ப்ளான் போட்டதாக அர்ணவ் குற்றசாட்டு வைத்திருக்கிறார்.

செல்லம்மா சீரியல் நடிகர் அர்ணவ் மற்றும் அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதர் குடும்பப் பிரச்சனை சில மாதங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அர்ணவ் மீது திவ்யா போலீஸ் கம்பளைண்ட் கொடுத்ததால் அர்ணவ் ஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகு இந்த பிரச்சனை கொஞ்சம் அமைதியாக இருந்தது.
ஆனால் இப்போது மீண்டும் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்து கொண்டிருக்கிறது. திவ்யா கைக் குழந்தையோடு பிரபல செய்தி சேனல் ஒன்றில் அர்ணவ் பற்றி பல ரகசியங்களை கூறி அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதைத்தொடர்ந்து இப்போது அர்ணவ் திவ்யா மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து சில ஆதாரங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அர்ணவ் மற்றும் திவ்யா குடும்பச் சண்டை மீண்டும் மீடியாக்களில் வர தொடங்கி இருப்பதற்கு பின்னணியில் சீரியல் நடிகரான ஈஸ்வர் இருப்பதாக அர்ணவ் பரபரப்பான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். ஏற்கனவே அர்ணவ் ஆரம்பத்திலிருந்து என்னுடைய நண்பராக இருந்த ஈஸ்வர்தான் எங்களுடைய பிரச்சனைக்கு காரணம் என்றும் கூறிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பிரபல செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அர்ணவ், எங்க பிரச்சனை போலீசுக்கு வந்து நான் கைதாகி பிறகு ஜாமினில் வந்து இப்போ மீண்டும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். என்னுடைய பெயரில் வாங்கப்பட்ட அந்த வீட்டில் கூட இப்ப திவ்யா தான் இருக்காங்க. அந்த வீட்டுக்கு கூட நான் போறது இல்ல. ஆனால் சில youtube சேனல்களில் சாதாரணமாக என்கிட்ட பேட்டின்னு கூப்பிட்டாங்க, நானும் போனேன் அப்போ திவ்யா பற்றி சில கேள்விகளை கேட்டாங்க. அதற்கு சில பதில்களையும் சொன்னேன் இவ்வளவு தன் நடந்தது.
நான் ஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகு திவ்யாவுக்கு எந்த தொந்தரவும் தரல. ஆனா இந்த மாதிரி சூழ்நிலையில மறுபடியும் இந்தப் பிரச்சனை மீடியாவுக்கு வருதுன்னா இது திட்டமிட்டு பண்ணியிருக்காங்க. நடிகை ஈஸ்வர் தான் எங்க ரெண்டு பேருக்கும் இடையே கேம் ஆடுறதா நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அது இப்போ உண்மை என்கிற மாதிரி திவ்யாவும் ஈஸ்வரும் பேசிய சில ஸ்க்ரீன் ஷாட்டுகள் எனக்கு கிடைச்சிருக்கு அத பாத்தா உண்மை தெரிஞ்சிடும்.
நான் ஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகு சேனல்ல என்ன தொடர்ந்து நடிக்க வச்சுட்டு இருக்காங்களே, அவன் கேரியரை காலி செய்யணும் அதுக்கு ஏதாவது ஐடியா கொடு என்று திவ்யா ஈஸ்வர் கிட்ட கேட்டு இருக்காங்க. அதற்கு ஈஸ்வர் அவனுடைய கடந்த காலத்தை பற்றி உனக்கு தெரிஞ்சதெல்லாம் மீடியா கிட்ட சொல்லு, மத்தத அவங்க பாத்துக்குவாங்கன்னு ஈஸ்வர் பதில் சொல்றதுமான அந்த சேட்டிங்ல இருக்கு.

திட்டமிட்டு தான் அவங்க இந்த மாதிரி செய்து இருக்காங்க நானுமே திவ்யாவின் கடந்த காலத்தை பத்தி பேச என்கிட்ட நிறைய வீடியோ, ஆடியோ ஆதாரம் இருக்கு. அதை எல்லாம் வெளியிட எனக்கு தெரியாதா?என்னோட சேனல் தரப்பில் இருந்து நீங்க சட்டப்படி என்ன செய்யனுமோ அதை செய்யுங்க. ஆனா திரும்ப திரும்ப இந்த பிரச்சனைய மீடியா முன்னாடி கொண்டு செல்லாதிங்க அது சீரியலையும் பாதிக்கும்னு சொல்லி இருக்காங்க. அதனால தான் நான் பேசாம இருக்கேன் என்று அர்ணவ் கூறி இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து ஈஸ்வர் பிரபல செய்தி சேனலில் பேசுகையில் எனக்கு என் பிரச்சனையே தீர்க்க முடியாத தான் இருக்கு. இவங்க ரெண்டு பேருக்கும் உதவி செய்யப் போய் அது எனக்கே எதிராக மாறி, இந்த மாதிரியான பிரச்சனைகளை கிளப்பி விடுறாங்க. இது பற்றி எதுவும் நான் இனி பேச விரும்பல. ஒருத்தர் நம்மள பார்த்து குறைச்சுக்கிட்டே இருந்தா நாம கண்டுக்காம விட்றது தான் நல்லதுனு நினைக்கிறேன் என பதில் கொடுத்திருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications