ஆணவமாக பேசி, அசிங்கப்பட்டு பிக் பாஸை விட்டு வந்த அர்னவ்.. ஆனால் அவருடைய மனைவி போட்ட போஸ்ட்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் இருந்து நேற்று அர்னவ் வெளியேற்றப்பட்டு இருந்தார். அதே நேரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கும் அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பலருடைய கவனத்தைப் பெற்று வருகிறது.
நடிகர் அர்னவ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு சன் டிவியில் சக்தி, பிரியசகி உட்பட சில சீரியல்களில் நடித்திருக்கிறார். அப்போது சீரியலில் தன்னோடு நடிக்கும் போது காதலித்து வந்த நடிகை திவ்யா ஸ்ரீதரோடு ஐந்து வருடங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த அர்னவ் 2 முறைகளில் திருமணம் செய்து கொண்டார்.

அர்னவ் முஸ்லிம் என்பதால் முஸ்லிம் முறையிலும் திவ்யா ஸ்ரீதர் இந்து என்பதால் இந்துமுறையிலும் இரண்டு முறைகளில் திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்த போது விஜய் டிவியில் செல்லம்மா சீரியலில் அர்னவ் கதாநாயகனாக அறிமுகமானார்.
அந்த சீரியலில் நடிக்கும் போது அந்த சீரியல் கதாநாயகியாக நடித்த அன்ஷிதாவோடு அர்னவிற்கு தொடர்பு இருப்பதாகவும் அதனால் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் திவ்யா பேட்டிகளில் பேசியிருந்தார். அதுபோல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார்.
இந்த பிரச்சனை சின்னத்திரையில் பலருக்கும் தெரிந்ததுதான். அதற்குப் பிறகு அர்னவ் போலீசால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்திருந்தார். தொடர்ந்து சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அன்ஷிதாவோடு அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலும் அன்ஷிதா மற்றும் அர்னவ் இருவரும் கலந்து கொண்டனர். இது பற்றி இணையத்தில் பலர் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அர்னவ் எலிமினேஷன் ஆனார். அவர் வெளியே வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி உள்ளிருக்கும் போட்டியாளர்களிடம் கடந்த வாரத்தில் உங்கள் எல்லோருக்கும் ஒரு பட்டம் கொடுக்கப்பட்டதே அந்த பட்டத்திற்கு நான் தகுதியில்லை என்று நினைக்கும் நபர்கள் அதை வேறு யாருக்கு கொடுக்கலாம் என்று கேட்டிருந்தார்.
அதில் அதிகமான போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டத்திற்கு பொருத்தமான நபர் அர்னவ் தான் என்று அவரை கைகாட்டி இருந்தனர். அதற்குப் பிறகு நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அர்னவிடம் விஜய் சேதுபதி உங்களுடைய நண்பர்களிடம் உங்கள் மனதில் இருப்பதை சொல்லலாம் என்று சொன்னதும் பெண் போட்டியாளர்கள் எல்லாரும் சூப்பரா விளையாடிட்டு இருக்காங்க என்று பேசிய அர்னவ் ஆண்கள் எல்லோரும் ஜால்ரா என்று சொல்லியிருந்தார்.
அதோடு என்னடா நீங்க எல்லாரும் விளையாடிட்டு இருக்கீங்க? பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துட்டு எல்லாரும் ஒன்னா சேர்த்து கேம் விளையாடுறீங்களா? உங்களை எதிர்த்து நான் கேள்வி கேட்டா நீங்க என்ன குரூப்சம் செய்து குத்துவீங்களா? நீங்க யாருடா என்று வாடா போடா என ஒருமையில் திட்டி இருந்தார்.
அப்போது விஜய் சேதுபதி குறுக்கிட்டு இப்படி எல்லாம் பேசக்கூடாது உள்ளே இருக்கிறவங்க என்னுடைய கண்டஸ்டண்ட். என் முன்பு நீங்க இப்படி பேசலாம் பேசக்கூடாது. நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது பேசியிருக்க வேண்டியதை இந்த இடத்தில் வன்மத்தை நீங்கள் கக்க வேண்டிய அவசியம் இல்லை.
நாம் ஒருவருக்கு மரியாதை கொடுத்தால் நல்ல மரியாதை நமக்கு கிடைக்கும் என்று அவரிடம் சற்று கடினமாகத் தான் பேசியிருந்தார்.நேற்றிலிருந்து ட்விட்டர் பக்கத்தில் அர்னவ் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் நிலையில் அர்னவ் உடைய மனைவி திவ்யா ஸ்ரீதர் இதையெல்லாம் பற்றி கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் தான் தீபாவளி ஸ்பெஷல் எபிசோடில் சூட்டிங் கலந்து கொண்டிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
சில நாட்களாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் அன்ஷிதா மற்றும் அர்னவிற்கும் இடையே சண்டை ஏற்படும் போது திவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ரொம்பவும் சந்தோஷமாக இருப்பது போல டான்ஸ் ஆடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதை பார்க்கும் ரசிகர்கள் நீங்கள் இதுபோல எப்பவும் இருக்க வேண்டும் என்று கருத்து கூறி வருகிறார்கள்.
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் உங்களுடைய கணவர் உங்களை வேண்டாம் என்று விட்டு விட்டு சென்ற பிறகு நீங்கள் போராடி தனி ஆளாக குழந்தையை பெற்று இன்று குழந்தையையும் நல்லபடியாக வளர்த்து வரும் நிலையில் இன்னமும் நீங்கள் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். உங்களுக்கு கஷ்டங்கள் ஏற்படுத்தியவர்களுக்கு உங்கள் கண் முன்பு அடுத்தடுத்து அடி விழுந்து கொண்டிருக்கிறது என்று அவருக்கு ஆதரவாக பல கருத்துக்கள் குவிந்து வருவதையும் பார்க்க முடிகிறது.












Click it and Unblock the Notifications