Arundhathi Serial: ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை... அடடா!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் அருந்ததி பேய்க்கும், சண்முகம் மனுஷனுக்கும் கல்யாணம் நடக்குது. அருந்ததி சீரியல் திகில் சீரியலா இல்லாமல் விளையாட்டுத் தனமானதாக இருக்கிறது.
ரொம்பவெல்லாம் யாரும் யாரையும் பயமுறுத்த வேணாம் என்று முடிவெடுத்து கதையை இப்படி விளையாட்டுத் தனமாக கொண்டு போகிறார்கள் போலும் என்று எண்ணத் தோன்றுகிறது.
வரலாற்றிலேயே முதன் முதலாக பேய்க்கும், மனுஷனுக்கும் கல்யாணம் என்று ப்ரோமோவில் சொல்லி இருந்தார்கள். அந்த கல்யாணம் ஒரு வழியாக நடந்து முடிஞ்சுருச்சு.

எல்லாமே கருப்பு
கருப்பு கருப்புன்னு எல்லாமே கருப்பு நிறத்தை வச்சு பேய் கல்யாணத்தில் கருப்பு நிறத்தை மையப்படுத்தி இருக்கிறார்கள். தீப்பிடிச்சு எரிஞ்சு கருப்பு வீடுதான் கல்யாண மண்டபம். கருப்பு நிறத்தில் உடைகள்,கருப்பு மாலை, கருந்தேள்,கரு நாகம் என்று இத்தனைக்கும் நடுவில் கருப்பு தாலி கட்டி கல்யாணம்.

வந்துட்டு போயிடறேன்
சரி.. ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சுருச்சு. இனி நாம நம்ம வீட்டுக்கு போகலாம் வா தெய்வானைன்னு சண்முகம் கூப்பிட, வீட்டுக்கு வந்து வலது காலை எடுத்து வச்சு உள்ளே வந்துட்டு,போயிடுறேன் சண்முகம்னு கெஞ்சுது ஆவி.சரி என்று இதற்கும் சம்மதிச்சு வீட்டுக்கு அழைச்சுட்டு போறாங்க.

உள்ளே சண்முகம்
கேட்டோடு நிறுத்தி அருந்ததி வலது காலை வச்சு உள்ளே வந்தவுடன், தெய்வானை அருந்ததியை அனுப்பிட்டு வா நான் உள்ளே போறேன்னு சொல்லிட்டு சண்முகம் போறான். தெய்வானை நான் வீட்டுக்கு உள்ளே வந்து வலது காலை வைக்கணும் தெய்வானை..ப்ளீஸ்னு கெஞ்ச, தெய்வானை பாவம் பார்த்து ஒதுங்கியதுதான்.. அவளை வெளியே தள்ளி கேட்டை பூட்டி விடுகிறாள் அருந்ததி.

சண்முகத்துடன் உள்ளே
படுக்கையறையில் சண்முகம் தெய்வானைக்காக காத்திருக்க, அருந்ததி காட்சி தருகிறாள், இன்னிக்கு நான் உங்களுக்கு புது பொண்டாட்டி. இனிமேல் என் கூடத்தான் உங்களுக்கு வாழ்க்கை சண்முகம். இன்னிக்கு நமக்கு முதலிரவுன்னு அருந்ததி சொல்ல, பயந்து விறுவிறுத்து நிற்கிறான் சண்முகம். வெளியே கதவைத் திற அருந்ததின்னு கத்திக்கிட்டு நிக்கறா தெய்வானை.
இதுதான் ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டின கதைன்னு சொல்றது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications