Arundhathi Serial: அருந்ததிக்கு தெய்வானை உடம்பை கொடுக்க.. அச்சோ!!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியல் ஒரு திகில் சீரியல் என்று ஆரம்பத்தில் சொல்லி சொல்லி ப்ரோமோவில் பயம் காண்பித்தார்கள். ஆனால், இப்போது கதை வேறு திசையில் பயணிப்பது போல இருக்கிறது.
திடீர்னு சண்முகம் தனது மனைவி தெய்வானையை காதலிக்க ஆரம்பிச்சு இருப்பது, ரொமான்ஸ் என்கிற பெயரில் ஏதாவது காட்சிகள் வைப்பது என்று அபத்தமாக இருக்கிறது.
தெளிவாக சொல்ல வேண்டிய விஷயத்தை தலையை சுற்றி மூக்கை தொடுவது போல அங்கங்கு காட்சியை கொண்டு போவது கொஞ்சம் போராகத்தான் இருக்கிறது.

தெய்வானை அருந்ததிக்கு
அருந்ததியை ஆவியை சதிகாரர்கள் பாட்டிலில் அடைத்து அவளை அழித்துவிட நினைக்க, பாட்டிலோடு எடுத்துச்செ சென்று சாமியாரிடம் கொடுத்து அவளை வெளியில் எடுக்க சொல்கிறார்கள். அவர் என்னென்னவோ செய்து பார்த்தும், அவள் அந்த வட்டத்துக்குள் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் பெண்ணின் உடலொன்று தேவைப்படுகிறது என்று சாமியார் சொல்ல, தெய்வானை தனது உடலை கொடுப்பதாக கூறுகிறாள்.

நோ சண்முகம்
சண்முகம் இதுக்கு முடியாது என்று சொல்கிறான்.எனக்கு என் மனைவி தெய்வானைத்தான் முக்கியம்னு சொல்ல,அருந்ததி ஏதோ வலியால் துடிக்கிறாளாம். ஆனால், தெய்வானையை சண்முகம் வீட்டுக்கு அழைத்து வந்துடறான். ஆனால் ,தெய்வானை மனசு கேட்காமல் சாமியாரிடம் போயி, தான் தனது உடம்பை அருந்ததிக்கு கொடுப்பதாக சொல்ல, அருந்ததி இப்போது தெய்வானையின் உடம்புக்குள் புகுந்து வீட்டுக்கு கிளம்பறா.

சண்முகம் தெய்வானை
வீட்டுக்கு வரும் தெய்வானையை சண்முகம் வாயைப் பொத்தி பயமுறுத்தி, பின்னர் அவளை முத்தமிட போகிறான். அவள் ஒதுங்கிக் கொண்டு, என்ன மாமா.. இந்த நேரத்துலன்னு சொல்றா. அது சரி அருந்ததி இப்போ எப்படி இருக்ககான்னு கேட்க, தெய்வானைக்குள் இருக்கும் அருந்ததிக்கு மகிழ்ச்சி வந்துருது. அருந்ததி மேல உங்களுக்கு இவ்ளோ பாசமா மாமான்னு டிராக் மாற, இருக்காதா பின்னே.. அருந்ததி என் பொண்டாட்டியோட தோழியாச்சே. அவள் நல்லா இருந்தால்தானே நீ சந்தோஷமா இருப்பேன்னு சொல்றான்.

அது இதுக்குத்தானா?
ஓ.. அருந்ததியை பத்தி விசாரிச்சது இதுக்குத்தானா? அருந்ததி மேல உனக்கு ஃபீலிங்ஸ் இலையான்னு கொஞ்சம் கெட்ட குணம் எட்டிப் பார்க்குது. இப்படி கதையை வேறு டிராக்கில் கொண்டு போவார்கள் போலவும் தெரிகிறது. அருந்ததி சண்முகம் மேல ஆசைப்படுவாள் போலும். அருந்ததி கொஞ்சம் போர்தான்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications