Arundhathi serial: அருந்ததியில் கொலுவுக்கு ஏற்ப பிள்ளை அம்மன்.. கலசம்!
சென்னை: இப்போது கொலு வைத்து பூஜை செய்வதில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். கொலுவில் பல விதங்களில் தீம் கொலு வைத்து, விருந்தினர்களை அழைத்து உபசரித்து வருகிறார்கள்.
இந்த சமயத்தில் கொலுவில் முதன் முதலில் இடம் பெறுவது கலசம்தான். முதல் படியின் நடுவில் கலசத்தை வைத்து, பின்னர் முதல் படி பொம்மையில் ஆரம்பித்து ஒன்பதாவது படி பொம்மை வரை பாரம்பரியமான பொம்மைகளை வைத்து கொலுவை அலங்கரிப்பார்கள்.
அதன் படி திகில் சீரியல், பேய் சீரியல் என்றெல்லாம் பயமுறுத்திய அருந்ததி சீரியலில், அம்மன் கலசம் என்று கதை போகிறது. இந்த ஒரு வார காலம் அம்மனுக்கு உகந்தது என்பதை சீரியல் கதாசிரியர் நன்றாக உணர்ந்து கதையை கொண்டு போகிறார்.

கொலை வன்மம்
அருந்ததி சீரியலில் சாமி சிலையை வெளி நாட்டுக்கு கடத்துவது, அதை அருந்ததி பார்த்துவிட்டு, அவர்களிடம் மாட்டிக் கொள்வது, பின்னர் அவள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாகடிக்கப்படுபவது என்பது அருந்ததி கதை. அருந்ததி இவர்களை பழிவாங்க வரும்போது அவள் சிலை கடத்திய வீட்டுக்கு தீய சக்தி என்று அழைக்கப்படுகிறாள்.

காப்பு மஞ்சள் கயிறு
தீய சக்தி அண்டாமலிருக்க முதலில் ருத்திராட்ச காப்பு என்று ஆரம்பித்தார்கள்.இப்போது அதையும் தகர்த்து அருந்ததி தெய்வானையுடன் நட்பாகி, பாதி காரியத்தை சாதித்துக் கொண்டாலும், காரியத்தை சாதிப்பதற்குள் சக்தியை இழந்துவிடும்படி தெய்வானை பூஜை செய்கிறாள். மீண்டும் சக்தியைப் பெற அருந்ததி முயற்சி செய்து கொண்டு இருக்கிறாள்.

கலசம் வீட்டில்
வீட்டில் கலசத்தை வைத்து அம்மன், கால பைரவர் பூஜை செய்து கொண்டு இருக்கிறார்கள். அருந்ததி அந்த வீட்டுக்குள் வர, சண்முகத்தின் சித்தியின் கண்களில் சக்தியை அனுப்பி விடுகிறாள். சித்தி சண்முகத்துக்கு நல்லது நடக்க கூடாது என்று கதிரேசனிடம் சொல்ல, அவனும் கலசத்தை தூக்கிப் போட்டுடுங்க. நான் வீட்டில் உள்ளவர்களை கோயிலுக்கு அழைச்சுட்டு போறேன்னு சொல்லி, தந்திரம் செய்கிறான்.

கையில் மஞ்சள் கயிறு
கையில் மஞ்சள் கயிறு இருக்கும் வரை கலசத்தை தொட முடியும். இதை அறியாத சித்தி தேவிப்பிரியா அதை பிச்சு எரிய கலசத்தை தொட முடியவில்லை. பின்னர் கயிறை எடுத்து கட்டிக்கொண்டு கலசத்தை கையில் எடுத்து காரில் வச்சு எடுத்து எங்காவது தூக்கிப்போட வேண்டும். அதன் பின்னர் இந்த பூஜை நின்று விடும் என்று சித்தி எடுத்துப் போக கார் ஸ்டார்ட் ஆகவில்லை. அடுத்து சண்முகம் அதை வீசி விடுகிறேன் ,இந்த கலச பூஜையை தடுத்து நிறுத்துகிறேன் என்று கிளம்ப,
அழகான சின்ன பெண்ணாக அம்மன் கலசத்தில் காட்சி தந்து, நிற்கிறாள். இந்த சரஸ்வதி பூஜைக்கு ஏற்ப கால கட்டத்தில் அருந்ததி கதை நகர்கிறது. இதுவும் கூட ரசிக்கும்படி நன்றாக இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications