Arundhathi Serial: ஆவிக்கு படையல் போடலாம்... அதுக்காக புருஷனையுமா?
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலை பேசாமல் சுட்டி டிவிக்கு மாத்திடலாம். அப்படி ஒரு சிறு பிள்ளைத்தனமான கதை.குழந்தைகள்கூட இதை விரும்பிப் பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான்.
பேய்க்கும் பேய்க்கும் சண்டை..அதை ஊரே வேடிக்கை பார்க்குது... தலை ஃபுல்லா முடியை வச்சுக்கிட்டு, மொட்டை சிவா கெட்ட சிவான்னு சொல்றியே..இப்படிப்பட்ட பேய் காமெடிகள்தான் சிறுவர்கள் கூட விரும்பிப் பார்ப்பது.
அருந்ததி கதையின் கான்செப்ட் என்னனு தெரியாமல் கூட இயக்குநர் காலை வச்சுட்டார் போலும்.கதை இத்திசை,அத்திசை என்று இல்லாமல் எல்லாத் திசையிலும் பயனிக்குது.

ஆவியின் நியாயம்
அருந்ததி ஒரு ஜர்னலிஸ்ட்..இவள் ஜமீன் வீட்டின் சிலை கடத்தலை கண்டுபிடித்து விட, அவளை அந்த வீட்டு பையனே சீரழித்து கிணற்றில் தள்ளி சாகடிச்சுடறான். இப்போது அவள் ஆவியாகி அவனை பழிவாங்க அலைகிறாள். யார் தன்னை இந்த மந்திரக் கட்டுக்களில் இருந்து விடுவிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கையில், சண்முகம் தன் காதலியுடன் வந்து ஆவியை விடுவிக்கிறான் .அவனுக்கு தெரியாமலே.

காதலி சண்முகம்
அமெரிக்காவில் இருந்து வந்த சண்முதத்தின் காதலி ,ஆவி, பேய் ,பூதம் என்று பயமுறுத்தும் குடும்பம் எனக்கு வேண்டாம் என்று அமெரிக்காவுக்கே கிளம்பிவிட, முருகனின் பக்தை தெய்வ சக்தி நிறைந்த தெய்வானை என்கிற ஏழைப் பெண்ணை சண்முகத்துக்கு கல்யாணம் செய்து வைக்கிறார்கள். அதாவது முருக பக்தையான தெய்வானையை மருமகளாகக் கொண்டு வந்தால் வீட்டில் தீய சக்தி இருக்காது என்பது ஈஸ்வரி அம்மாவின் நம்பிக்கை.

தெய்வானை அருந்ததி
அருந்ததி தெய்வானையின் புருஷன் உடலில் புகுந்துகொண்டு ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி ஒரு வழியாக தெய்வானையின் அருளாலே அருந்ததி சண்முகத்தை விட்டு விலகிடறா அருந்ததி தெய்வானையின் கண்முன் தோன்றி, தனக்கு இந்த வீட்டில் நடந்த அநீதி கதையை கூறி, அவர்களை பழி வாங்க தெய்வானையின் உதவி வேண்டும் என்று கேட்கிறாள்.தெய்வானையும், கணவன் சண்முகமும் கூட அருந்ததிக்கு உதவி செய்கிறார்கள்.

சண்முகம் ஆவிக்கு
அருந்ததி ஆவிக்கு தான் சண்முகத்தை கல்யாணம் செய்துகொண்டு சந்தோஷமாக மற்ற பெண்களை போல வாழ வேண்டும் என்று ஆசை வந்துருது. இதை தெய்வானையிடம் கேட்க, அதிர்ந்த தெய்வானை அருந்ததியின் ஆசைக்கு ஒப்புக் கொள்கிறாள். இதுவே ஒரு லூசுத்தனம்...இதற்கு சண்முகம் வேறு ஒப்புக்கொண்டாகனுமே.. அவன் இவளை லூசு லூசு என்று திட்டுகிறான்.ஒரு ஆவியை கல்யாணம் செய்துக்க சொல்றியே இது லூசுத்தனமா தெரியலையான்னு கேட்கிறான்.
ஐயோ...ரொம்ப முடியலைங்க!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications