பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறும் முக்கிய கதாபாத்திரம்.. ரசிகர்கள் அப்செட்!
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து முக்கிய நடிகர் ஒருவர் விலகிவிட்டார். இனி அவருக்கு பதில் யார் நடிக்க போகிறார்கள் என தெரியவில்லை.
தமிழ் தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிகளை காட்டிலும் சீரியல்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. விஜய் டிவியில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் மக்கள் அதிகம் பார்க்கும் சீரியல் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இதில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார், அவரது கணவர் கோபியாக சதீஷ் நடிக்கிறார்கள். ஒரு குடும்பத் தலைவியாக தனது அங்கீகாரத்திற்காக பாடுபடும் கேரக்டர் சுசித்ராவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகள்
கணவரிடம், மாமியாரிடம், பெண் குழந்தையிடம் அவமானம், மகனிடம் அரவணைப்பு, மாமனாரிடம் பாசம் ஆகியவற்றை பெற்று எப்படியெல்லாம் சுசித்ரா போராடுகிறார் என்பதுதான் இந்த சீரியலின் கதையாகும். கோபியாக நடிக்கு சதீஷுக்கு ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் சகவாசம் இருக்க அந்த பெண்ணிற்காக 25 ஆண்டுகள் குடும்பம் நடத்திய மனைவியை விவாகரத்து செய்ய துணிகிறார்.

பாக்கியா
எங்கே செல்கிறோம் என சொல்லாமல் பாக்கியாவை கோர்ட்டுக்கு அழைத்து செல்கிறார் கோபி. அங்கு என்ன நடக்கும் என்பது இன்றைய எபிசோடில் தெரியும். இவ்வாறு விறுவிறுப்பாக ஓடும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவர் வெளியேறி செல்கிறாராம்.

செழியன் கதாபாத்திரம்
அவர் வேறு யாரும் இல்லை. செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யன்தான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறாராம். இவர் எதற்காக சீரியலில் இருந்து விலகுகிறார் என தெரியவில்லை. ஆனால் இதுகுறித்து சேனல் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

ராதிகா கதாபாத்திரம்
ராதிகா கேரக்டரில் நந்திதா ஜெனிபர் நடித்திருந்த நிலையில் அவருக்கு பதிலாக தற்போது ரேஷ்மா நடித்து வருகிறார். இவர் கர்ப்பமாக இருந்ததால் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் ஆர்யன் விலகினால் அவருக்கு பதில் யார் நடிப்பார்கள் என தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications