Aryan OTT: ஓடிடிக்கு வரும் விஷ்ணு விஷாலின் ஆர்யன்.. எப்போ, எதில் எதிர்பார்க்கலாம் தெரியுமா?
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால், செல்வராகவன் நடிப்பில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கிரைம் திரில்லர் திரைப்படமான ஆர்யன் படம் திரையரங்குகளில் வெளியாகி ஓரளவிற்கு வெற்றி பெற்று, இப்போது ஓடிடிக்கு வரப்போகிறது. அது பற்றிய தகவலை விரிவாக பார்க்கலாம்.
நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய நடிப்பை வெளி காட்டுவதற்காக சரியான கதைக்களத்தை தேடிக் கொண்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஷ்ணு விஷால் ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் அறிமுகமான புதியதில் இருந்த நடிப்பு வேட்கை இப்போதும் குறைவதில்லை. சமீபத்தில் அவர் தயாரித்து நடித்த கிரைம் திரில்லரான ஆரியன் படம் அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வந்தது. பிரவீன் கே. இயக்கிய இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் இயக்குநர் செல்வராகவனும் முக்கிய கேரக்டரில் எடுத்திருந்தார்.

அதுபோல ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படம் விவி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. அதேபோல இந்த படத்திற்காக பல மாதங்களாகவே புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர். இந்த படத்தின் கதை என்ன என்பது பற்றி பார்க்கும் போது, ஒரு லைவ் ஷோவை மையமாகக் கொண்ட மர்ம சம்பவத்திலிருந்து கதை பயணிக்கிறது.
லைவ் நிகழ்ச்சியில் செல்வராகவன் செய்யும் ஒரு அதிர்ச்சி காரியம் பல தொடர் கொலைகளுக்கு வழிவகுக்கிறது. இந்த கொலை வழக்கை விசாரிக்க விஷ்ணு விஷால் ஒரு சின்சியர் போலீஸ் ஆபீசராக வருகிறார். அவர் வந்த பிறகு உண்மையான கொலையாளி யார் என்று கண்டுபிடித்தாரா? அதற்கு பின்னணியில் நடந்தது என்ன என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கிறது. விஷ்ணு விஷால் சில வருடங்களுக்கு முன்பு நடித்த ராட்சசன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் அதேபோல இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும் அதே போல இல்லை என்றாலும் இந்த படம் வேறுவிதமான ஒரு திரில்லர் படமாகவே இருக்கிறது.
படம் முழுக்க விஷ்ணு விஷால் தீவிரமான ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தனக்கு போலீஸ் ஆபீஸராக வேண்டும் என்று இருந்த ஆசை கனவு எல்லாம் இந்த படத்தின் மூலம் நிறைவேறியதாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார். அதுபோல செல்வராகவன் ஒரு சைலண்டான வில்லன் ஆக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பும் இந்த படத்திற்கு பெரிய பிளஸ் பாயிண்ட் தான். ராட்சசன் திரைப்படத்திற்கு பிறகு திரில்லர் ஜர்னலில் வந்திருக்கும் ஆரியன் திரைப்படம் ஒரு தனித்துவமான பயணத்தை காட்டுகிறது.
இந்த படத்திற்கு திரையரங்குகளில் ரசிகர்களிடமும், விமர்சனகளிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் நாள் இந்த படம் 1.17 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாம் நாள் அதைவிட அதிகமாக வசூல் செய்தது. உலக அளவில் இந்த படம் 10 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் ஓடிடிக்கு வரப்போகிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி பார்க்கும்போது ஆர்யன் படம் வரும் நவம்பர் 28ஆம் தேதி netflix ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாகுமா? அல்லது ட்ரோல் ஆகுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications