அஸ்வினை அன்புச்செல்வன் ஆக மாற்றிய நெட்டிசன்கள்...இதுக்கு எல்லையே இல்லையா??வேதனையில் ரசிகர்கள்
சென்னை: மீம்ஸ் கிரியேட்டர்களின் கையில் மாட்டி இழுக்கும் அஸ்வினியின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
சூர்யாவுடன் ஒப்பிட்ட அஸ்வின் போட்டோஸ் நெட்டிசன்களால் அதிகமாகக் கலாய்க்கப்பட்டு வருகிறது.

மீம்ஸ்களில் மாட்டிய அஸ்வின்
சில நேரங்களில் மன கஷ்டத்தில் இருக்கும்போது உலாவரும் மீம்ஸ்களை பார்க்கும்போது பலரும் தங்களை அறியாமல் சிரிக்க வைத்து வரும் மீம்ஸ் கிரியேட்டர்கள் தான் தற்போது அனைவருக்கும் என்டர்டைன்மென்ட் கொடுத்து வருகின்றனர். பல காமெடி நடிகர்கள் செய்யும் செயல்களை கூட தற்போது மீம்ஸ் கிரியேட்டர்கள் ஒற்றை வார்த்தைகளில் செய்துவிடுகின்றனர். ஒருசில மீம்ஸ் கிரியேட்டர்ஸ் எந்த ஒரு வார்த்தைகளும் இல்லாமல் புகைப்படங்கள் மூலமாக பலருக்கும் சிரிப்பை வர வைத்து விடுகின்றனர். தற்போது அந்த மாதிரிதான் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காலூன்றியிருக்கும் அஸ்வினை நெட்டிசன்கள் மீம்ஸ்களால் கலாய்த்து கொண்டிரக்கின்றனர்.

மாற்றம் கொடுத்த குக் வித் கோமாளி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக இளம் பெண்களையும், குழந்தைகளையும் கவர்ந்த நடிகராக அஸ்வின் இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக பலருடைய வாழ்க்கை மாறிவிட்டது. அதில் ஒருவராக அஸ்வினும் இருந்து வருகிறார். இதற்கு முன்பு ஒரு சில சீரியல்களிலும் பல ஷார்ட் பிலிம் களிலும் நடித்துக் கொண்டிருந்தாலும் அதில் எல்லாம் இவருக்கு கிடைக்காத பெயரும் புகழும் இந்த நிகழ்ச்சி இவருக்கு வாங்கி கொடுத்தது. இவருடைய சிரிப்பு பலரையும் கவர்ந்துள்ளது.

நெட்டிசன்களின் கோபம்
10 வருட போராட்டங்களுக்கு பிறகு இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் இவர் மீது பல நெட்டிசன்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். பெண்களின் மனதைக் கொள்ளை கொண்ட இவர் மீது பொறாமையா?? அல்லது இவர் எதார்த்தமாக பேசுகிறேன் என்று எக்குத்தப்பாக திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய வார்த்தைகள் பிடிக்கவில்லையா?? என்று தெரியாவிட்டாலும் இவருக்கு இப்போதும் ரசிகர்கள் அதிகமாக இருந்துதான் வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் போட்டோக்களுக்கு அதிகமாக லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது.

அன்புச்செல்வன் ஆக மாறிய அஸ்வின்
அஸ்வின் தற்போது என்ன செய்தாலும் அதை கலாய்ப்பதற்காக ஒரு கூட்டம் சமூகவலைத்தளத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெட்டிசன்கள் சிலர் அவர் நடித்த திரைப்படங்களின் ஸ்டில்களை சூரியாவோடு ஒப்பிட்டு அன்புச்செல்வன் என்று பரப்பி வருகின்றனர். இந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அப்படியே காக்க காக்க திரைப்படத்தில் சூர்யா கெட்டப்பில் இருக்கும் அஸ்வின் புகைப்படத்தை பார்த்ததும் நெட்டிசன்கள் வழக்கம்போல கலாய்த்து வருகின்றனர். ஆனால் அஸ்வினின் தீவிரமான ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications